Monday, November 26, 2007

சகரத்தை மீட்போம்

காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாக சகரத்தை "ச" (cha) என்று சரியாகவே ஒலிப்பர்.

காவிரிக்கு வடக்கே அச் சகரம் ஸகரம்மகிச் சோறு (choru) என்பது ஸோறு என்றும், செல்வம்(Chelvam) என்பது ஸெல்வம்(selvam) ஏன்றும் திரிந்து ஒலிக்கும். சகரம் அவ்வாறு ஸகரமாவது தமிழ் எதிர்ப்பை தானறிந்த தன்வினையாகக்கொண்ட பார்பபானருக்கு எடுத்த கையாகியது.. அந்த ஸகரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (sha)ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர்.

நேற்று வரை அவாள் இவாள் எனப் பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னாரெனக் காட்டிக்கொண்டனர். அந்த அவாள்,இவாள் சாதிநடை இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டமையால்,இன்று சகரத்தை ஷகரமாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.

க-------ங
ச-------ஞ
ட-------ண
த--------ந
ப--------ம

ஆகிய தமிழ் உயிர்ர்மெய்யெழுத்துக்களீல்,க,ச,ட,த,ப முதலான வல்லின் உயிர்மெய் எழுத்துக்களை விரிவாக்கியதாலேயே வட மொழிகளில் ka,kha,ga,gha போன்ற வருக்க ஒலியன்கள் தோன்றின. அவற்றில் "ச" வரிசையில் சகரமே (cha)முதல் எழுத்தாகும்.இதுவே தமிழில் ஸகரம் முதல் எழுத்தாக வரமுடியாது என்பதைக் காட்டும்.தமிழில்,அச்சகரமே ஒரு சொல்லுக்கு இடையில் ஸகரமாக ஒலிக்குமேயின்றி,ஸகரம் முதல் எழுத்தாக வரவே வராது. சகரம் (cha) மட்டுமே முதல் எழுத்தாக வரும்.அதனாலேயே ஸகரம் முதலான வடவொலி எழுத்துக்கள் வடிக்கப்பட்டன.

சரியாக ஒலிப்பதன் வாயிலாகச் சகரத்தை மீட்பது தமிழைக் கண்ணெனப் பேணும் தமிழ்காப்பு வினையேயின்றி வேறில்லை.

கருத்து உதவி:பெங்களூர் அறிஞர் குணா அவர்கள்

அன்புடன்
அரவிந்தன்

Saturday, November 17, 2007

சைக்கிள்-ல் டீ விற்க்கும் பெங்களூர் தமிழர்-ஆர்குட்-ல் ஹீரோ



பெங்களூர் மையப்பகுதியில் இருக்கும் எம்.ஜி சாலை,பிரிகேடு சாலை சந்திப்பில் இவரை இரவு நேரங்களில் பார்க்கலாம். தனது சைக்கிளில் நடமாடும் டீக்கடையை வெற்றிகரமாக 10 வருடங்களாக நடத்தி வருகிறார்.

ஆர்குட்-ல இவருக்காக மூன்று குழுமங்கள் செயல்படுகின்றன.அதில் முக்கியமானது முனிசாமி எம்.ஜி ரோடு என்ற பெயரில் செயல்படும் குழுமம்


இதில் 500-க்கும் மேற்ப்பட்டவர்கள் அங்கத்தினராக உள்ளனர். இந்த சைக்கிள் கடை டீக்கடைக்காரைப்பற்றி சுவையான விவதாங்கள்.முனிசாமி-யின் சொத்து மதிப்பு என்ன ,முனிசாமியின் கடையில் பிடித்தது என்ன,போலிஸ் தொல்லையில் இருந்து இவர் எப்படி தப்பிக்கிறார்.முனிசாமியின் காணமல் போன் உதவியாளர் போன்ற சுவையான விவாதங்கள்.

சாலையில் இரவுநேரத்தில் சைக்கிள்-ல் டீ விற்று பிழைப்பு நடத்தும் இந்த தமிழரை ஆர்குட்-ல் ஒரு ஹீரோ அளவிற்க்கு பெருமைபடுத்தியிருக்கும் பெங்களூர் இளைஞர்களூக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள்

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, November 14, 2007

அழகான ரோடுதான் அதுமேல அழகான பொண்ணுங்கதான்



சென்ற வருடம் அலுவலக நண்பர்களோடு வாரயிறுதியில் சுற்றுலா சென்ற போது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலையில் எடுத்த புகைப்படங்கள். எல்லோரும் புகைப்பட போட்டிக்கு ஆளிலில்லாத சாலைகளை படம்பிடித்து போட்டார்கள், நாம கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பொண்ணுங்களையும் படம் பிடித்து போட்டு இருக்கேன்.

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, November 07, 2007

சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.

சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)

சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.

உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்

முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.

முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு சுடிதார் மூலம் முழுவதும் மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன

பெண்யியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன

அன்புடன்
அரவிந்தன்

Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வன் வீரச்சாவு.தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் திரு.தமிழ்ச்செல்வன் இன்று காலை ஸ்ரீலங்கா அரசின் விமானப்படைப்தாக்குதலால் வீர மரணமடைந்துள்ளார்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவகையில் ஈழ மக்களின் இனப்போராட்டத்தில் அக்கரை கொண்டுள்ள ஒவ்வொரு தமிழ் பதிவரும் இன்று ஒரு நாள் புதிய பதிவு எது இடாமல்(தமிழ்செல்வன் தொடர்பான பதிவுகள் மட்டும் விதிவிலக்கு) அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

வருத்ததுடன்
அரவிந்தன்

Friday, October 19, 2007

என் மகளும் அவளின் தோழிகளும் சேர்ந்து எடுத்த குறும்படம்



படம் பார்த்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள்.இந்த தசாரா விடுமுறையின் போது எடுத்த படமிது.சாதாரன சோனி டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட நகைச்சுவை படம்

அன்புடன்
அரவிந்தன்

Friday, October 12, 2007

நட்சத்திர பதிவர் வள்ளி-க்கு சில "நச்" கேள்விகள்

நட்சத்திர பதிவர் இ.கா.வள்ளி எழுதிய பெங்களுரில் தமிழர்களின் அலும்பு என்ற பதிவினை படித்தவுடன் பதிவர் வள்ளி-க்கு என்னுடைய கேள்விகளை பின்னூட்டமாக இட்டேன்.இதுவரை அதுப வெளியிடப்படததால் அவற்றை இங்கே வெளியிடுகிறேன்.


//சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின்

அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில்

ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப்

பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...//


இதனை யார் எழுதியது என்றும் எனக்கு

தெரியும்.இதிலென்ன தவறு கண்டீர்கள். பெங்களுர்

என்பதால தமிழ் என்ன உலகின் கடைசி மொழியாக

மாறிவிடுமா..உலகின் எந்த விடத்திலும் தமிழே முதன்

மொழி.


//அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக்

கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட

வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில்

ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று

கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை

விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது

என்று நக்கல் விட வேண்டியது.//


தமிழ் வீட்டு விஷேங்களில் தமிழ் பாட்டு போடாமல்

வங்காள,ஒரியா பாட்டா போடுவார்கள்.?


//
கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட

நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது,

அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும்.

நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு

கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்//


சும்மாயிருங்க வள்ளி,உங்களை மாதிரி இப்ப

வந்தவங்களுக்கு வேண்டுமான ராஜ்குமார் தெரியாமா

இருக்கலாம்.இங்கேயெ இருக்கிற தமிழர்கள்

எல்லோருக்கும் ராஜ்குமார் நல்லா தெரியும்.



//அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து

தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு

அலையவேண்டியது//

இப்படி சொல்றதுல உங்களுக்கென்ன

கஷ்டம்.உண்மைதானே உங்களுக்கென்ன கசக்குது.

தமிழ் நாட்டில் கூட தமிழ் படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம்.இங்கே அப்படி முடியாது.யாரயிருந்தாலும் கன்னடம் படித்தே தீரவேண்டும்.

பெங்களூர் தமிழ்சங்கம் இதுவரை 50,000(ஐம்பாதயிரம்) மேற்ப்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு..

கூந்தல் இருக்கிறவ அள்ளி முடிச்சிக்கிறா இதுல உங்களுகென்ன சலிப்போ தெரியல

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Tuesday, October 09, 2007

எனக்கு தாலி பிச்சை போடுங்க,முன்னாள் பிரதமரின் மனைவி கதறல்.

நேற்று பெங்களூரில் நடந்த மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்.

திரு.தேவே கவுடா அவர்கள்,குமாரசாமி, ஆட்சியியை பா.ஜ.க விடம் ஒப்படைத்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் கலக்கமடைந்த தேவே கவுடா அவர்களின் மனைவி அக்கட்சியின் எம்.எல்.ஏ க்களிடம் தயுவு செய்து பா.ஜ.கா விற்க்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.

அப்படி செய்தால் என் கணவர் தற்கொலை செய்துகொள்வார்.ஆகவே எனக்கு தாலி பிச்சை அளியுங்கள் என்று கதறியதாக தெரிகிறது.

குமாரசாமி அவர்களின் மூத்த சகோதர் ரேவண்ணா,தம்பி நமக்கு நம்ம அப்பாவின் உயிர்தான் முக்கியம் ஆட்சி அல்ல.தயவு செய்து பா.ஜ.கா வுடன் சேராதே என்று குமாராசாமியின் காலில் விழுந்து கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.

இதன்பிறகு,குமாரசாமி மனம் மாறியதாக சொல்லப்படுகிறது.

அன்புடன்
அரவிந்தன்

Monday, October 08, 2007

தமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்து!!!

நண்பர்களே,

தமிழியிணையத்தின் முன்னோடி,மடலாற்குழக்களின் முன்னோடி நம் அன்பு பாலா பிள்ளை தற்சமயம் சென்னை வந்துள்ளார்.

வலைப்பதிவர்களை அவர் சந்திக்க ஆவலாக உள்ளார்.

பாலா பிள்ளையை சந்திக்க விரும்பும் பதிவர்கள் அலைப்பேசி மூலம் அவரை தொடர்பு கொள்ளலாம்.

அலைப்பேசி எண்
9940645140

அன்புடன்
அரவிந்தன்

Friday, October 05, 2007

கால்நடைகளை திருடும் சிங்கள இராணுவம்

தமிழீழத்தின் கிழக்குபகுதியில் உள்ள பட்டிகோலா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சிங்கள இராணுவத்தின் தாக்குதலால் எழை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியேறும் போது தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அந்த கால்நடைகளை சிங்கள காவல்துறையினர்,இராணுத்துறையினர்,மற்றும் சிங்கள ரவுடிகள் கூட்டம் தமிழர்களின் வீட்டிலிருந்து திருட்டுத்தனமாக ஓட்டிச்சென்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் விற்பனை செய்கிறார்கள்.

திருந்துமா இந்த திருட்டுக்கூட்டம்.?

அரவிந்தன்

Tuesday, October 02, 2007

"சேது சமுத்திரம்"உருப்படாதது நாரயணுக்கு சில"நச்"கேள்விகள்!!!

//இப்போது சென்னையில் பந்த் [திமுகவின் பாஷையில் ஸ்ட்ரெக்] ஒரு வேலையும் நடக்காமல், வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு என்.டி.டி.வி ப்ராபிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன்//

போராட்டத்திற்க்கு தார்மீக அதரவு கொடுத்து வீட்டில் இருந்த உங்களுக்கு நன்றி

//இது போக, அம்பிகா சோனிக்கு கீழ் வரும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, எடுத்தேன் கவிழ்தேன் என்று, ராமர் இருந்ததை நிரூபிக்க முடியாது என்று சொல்லப் போக, பழம் நழுவி,பால்,வாய்//

இல்லாத கற்பனை கதாபாத்திரத்தை இல்லை என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்.?//ஜல்லி No.1: பி.ஜே.பி நாக்கை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன் என்று பேசிய வேந்தாந்தியினை கண்டித்திருக்கிறது. உங்களால், அதைப் போல, தமிழகத்தில் கருணாநிதியினை கண்டிக்க முடியுமா ?//

கண்டிக்க வேண்டிய அளவிற்க்கு அவர் என்ன சொன்னார்.தர்க்க ரீதியாக கேள்வி கேட்டார் அது தவறா..தர்க்க ரீதியாக கேள்வி கேட்பதும்,தலையை கொய்து வர சொல்வது ஒன்றா எந்த ஊர் நியாயம் நாரயண் இது..?1

950- முதலியார் குழு கொடுத்த அறிக்கையில் இது 9 கோடியில் முடிக்ககூடிய லாபம் தரும் திட்டம் என்று சொல்லபட்டுள்ளேதே அது தெரியுமா.இந்திய அரசாங்கத்தின் NEERI என்ற சுற்றுப்புற சுழல் அமைப்பு இத்திட்டத்திற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளேதே பார்க்கவில்லையா அல்லது பார்க்க மனமில்லையா

//சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது.//

ஏன் 30 ஆயிரம் டன் சுமக்கும் கப்பல்களே இவ்வுலகில் இல்லையா எராளமான உள்ளூர் கப்பல்கள் 30 ஆயிரம் டன் மட்டுமே சுமக்கும் திறன் கொண்டவை.

//ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாதபாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?//

எந்தவித வளர்ச்சி திட்டத்திலும் சில சுற்றுபுற சீர்கேடுகள் இருக்கத்தான் செய்யும்.அது எந்த அளவிற்க்கு நம்மை பாதிக்கச்செய்யும் என்று பார்க்கவேண்டும்.மீன் கிடைக்கவில்லையென்று இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்துவிட்டு குண்டடிப்பட்டு சாவுறான் தமிழன் இந்த லட்சனத்தில மீன் இனம் பாதிக்குதுன்னு நீங்க சொல்றிங்க.

ஒரு வளர்ச்சி திட்டத்தை இல்லாத கடவுளின் பெயரால் முட்டுக்கட்டை போடும் போது அந்த கடவுளை கேலி செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினர் சுற்றுப்புறசுழல் பாதிப்பு பற்றி மட்டும் பேசியிருந்தால் கலைஞர் ஏன் ராமனைப்பற்றி பேசியிருக்கபோகிறார்.

ராமன் பெயரால் முட்டுக்கட்டைபோட நினனைக்கும் போது அந்த ராமனை முச்சந்தியில் நிறுத்தி விமர்சனம் செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினரை "சேது சமுத்திரம் " திட்டத்தில் உள்ள பொருளாதார,சுற்றுப்புற சூழல் பற்றி மட்டும் பேச சொல்லுங்கள். அதன்பிறகு நாங்கள் ஏன் ராமரைப்பற்றி பேச போகிறோம்.?

கலைஞர் புட்டபர்த்தியை பாராட்டினார் ஆம் உண்மைதான் அதே பாபா எதாவது மக்கள் நல திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவரை முதலில் கலாய்ப்பது நாங்கள்தான்.

//நாராயணன் இந்துக்களைப் பற்றி பேசி, தன்னுடைய அடிப்படை நிறத்தினை நிறுபிக்கிறான் என்று இந்த பதிவினை நீங்கள் மொத்தமாக திசை திருப்பலாம்//


இது வரை நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இப்படியும் திசை திருப்பலாம் என்று நீங்கள் சொன்னதற்க்கு நன்றி.

தொடக்கத்திலிருந்தே திசை திருப்பல் பற்றி நீங்கள்தான் பேசிவருகிறீர்கள்.ஆக உங்கள் உள் மனது திசை திருப்பலை விரும்புகிறது.

மெல்ல பூனை பையிலிருந்து வெளி வரத் ஆரம்பித்திருக்கீறது.

அன்புடன்
அரவிந்தன்

Monday, October 01, 2007

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.?

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றம்.

.மக்கள் தங்களின் உணர்வுகளை அறவழியில் வெளிபடுத்தியும் அதனை கிண்டல் செய்யும் இட்லி வடைகள்.(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)

பொருளாதார வளம் தரும் திட்டங்களை இல்லாத ராமன் பெயரில் தடைப்போட நினைக்கும் பரதேசி கட்சிகள்..

வருடகனக்கில் காவேரி,முல்லை பெரியாறு பிரச்சினைக்கு நிரந்த முடிவு சொல்லாத ---நீதிமன்றம்., சொன்ன தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசினை கலைக்க சொல்ல தைரியம் இல்லாத ....நீதிமன்றம்

12 வருடங்களாக இழத்தடிக்கும் ஜெயலலிதான மீதான அன்னிய செலவாணி வழக்கை இன்னும் முடிக்காம இருக்கும் ....நீதிமன்றம்.

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்

அன்புடன்
அரவிந்தன்

Monday, September 03, 2007

டோண்டு ராகவா!!!..என்ன செய்தால் நீங்கள் திருந்துவீங்க!!!

டோண்டு ராகவன் அவர்களே!!!,

ஏனிந்த மெளனம்.பல இணைய முன்னோடிகளின் வேண்டுகோளினை ஏற்று நீங்கள் ஏன் மாறக்கூடாது.?

இறை நேசன் முன்பொருமுறை சொன்ன மாதிரி உங்களூக்கு ரொம்பவே தடித்த தோல்தான். எதையும் துடைத்துப்போட்டு போக உங்களால் எப்படி முடிகிறது.

பல புதிய பதிவர்கள் எழுத துவங்கியிருக்கும் இந்நேரத்தினில், உங்களால் ஒரு பிரச்ச்சினை என்று வரும்பொழுது அதை நாங்கள் எப்படி பொறுத்துக்கொண்டு இருக்க முடியும்.

மாறு,மாற மாட்டேன் என்றால் உன் முகவரியை மாற்றிக்கொள்..

விரைவில் உன் புதிய முகவரி
மனநல காப்பகம்
மேடவாக்கம் நெடுஞ்சாலை.
கீழ்பாக்கம்
சென்னை-600010


அன்புடன்
அரவிந்தன்

Tuesday, August 28, 2007

பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!

பெங்களூர் மாவட்ட்த்தில் அகரம்,ஐகண்டபுரம்,ஆவதி,பைச்சபுரம்,பேகூர்,பிண்ணமங்கலா,தொம்மளூர்,கங்காவரம்,அலசூர்,அசிகலா,எக்குண்டா,ஒசக்கோட்டை,கொண்டரள்ளி,கூடலூர்,மாகடி,நெலமங்கலா,திருமலை,ஒகட்டா, போன்ற ஊர்களில் விரவியுள்ள தமிழ்க்கல்வெட்டுகளை எல்லாம் சேர்த்தால் அவை நூற்றுக்கணக்கிலாகும்.

பெங்களுர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை தமிழ்கல்வெட்டுக்களே.

இவ்வுர்களூக்கு இன்றுள்ள தெலுங்கு,கன்னட பெயர்களை இடுவதற்க்கு முன்னர்,பெங்களூர் மாவட்டத்திலுள்ள ஊர்கள் பலவற்றிக்கு தமிழ் பெயர்களே வழங்கிவந்ததை இக்கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பழைய தமிழ் பெயர் தற்போதைய பெயர்
இருவுளியூர் இப்பலூர்
ஐவர்கண்டபுரம் ஐகண்டபுரம்
ஆகுதி ஆவதி
மடவளாகம் மடிவாளா
தும்பளூர் தொம்மளூர்
பேட்டை சிட்டி
விண்ணமங்கலம் பிண்ணமங்கலா
மண்ணை நாடு மண்ணே
நொந்தகுழி நந்தகுடி
ஒவட்டம் ஒகட்டா
நிகரிலிசோழபுரம் மாலூர்.

வரலாற்றைக்காட்டும் தமிழ் கல்வெட்டுக்களைக் கண்டு கன்னடர்கள் அஞ்சுவதற்க்கு காரணம் என்ன.?

கல்லூரிகளில் கருநாடகத்தின் வரலாற்றைக் கற்பிக்கையில் பொதுவாக கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே அவர்கள் தொடங்குவதன் காரணம் என்ன.?

பெங்களூரில் உள்ள பழங்கோயில்களில் பெரும்பாலனவை பல்லவர்களாலும் சோழர்களாலும் தமிழ் கங்கர்களாலும் கட்டப்பட்டவை.பேகூர்-ல் உள்ள சிவன் கோயில் 1000 வருடங்கள் முன்பு சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!

1537-ம் ஆண்டில் பெங்களூர் நகரை நிறுவிய கெம்பே கவுடா சாதியால் பள்ளிக்கவுண்டர்(வன்னிய கவுண்டர்) என்பதால் அவர் ஒரு தமிழரேயாவார்.
தமிழரில் இன்று பலர் ஆங்கிலம் பேசி பழகுவது ஒரு பெருமையென மயங்கி கெடுவதைப்போன்று,விசய நகர அரசிற்க்கு அடங்கி ஆண்டுவந்தமையால்,இக் கெம்பே கவுடாவின் பெயரிலும் கூடக் கன்னட தெலுங்கு சாயல் தொற்றிகொண்டது.

பெங்களூரின் மண்ணின் மைந்தரான பழைய தமிழ்ர்களை கன்னடர்கள் திகிளர் என்றுதான் அழைப்பர்.தமிழரை,”தமிழர்” எனச் சொல்ல வராத கன்னடர்கள்,தமிழரை திகளர் என்று அழைக்கலாயினர்.இந்தத் திகள்ர்கள்,திகள பள்ளிகள் என்றும் திகள பறையர் என்றும் சாதியால் வேறுபடுவர்.கெம்பே கவுடா வும் ஒரு திகளராவர்.இவரது முன்னோர்கள் தமிழகத்தின் காஞ்சியிலிருந்து வந்த”முரசு ஓக்கல்” குடியினரின் வழிவந்தராவர்.


தொடரும்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Thursday, August 23, 2007

பெங்களூர் எங்களூர்! (தமிழர்கள்மண்) பகுதி-1

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது.

அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95 இலக்கம்.

அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா.? இதற்க்கு விடை காண,வரலாற்றை விவரிக்க வேண்டும்.

1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு,பழைய சென்னை மாகாண்த்திலிருந்த எல்லையோரப பகுதிகளான பெங்களூர்,கோலார் தங்கவயல்,குடகு,பெல்லாரி,சித்திரதுருகம்,கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளூடனான தனி வரலாறு உண்டு.



பத்திராவதி,சிக்கமக்ளூர்,சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள்,கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர்.
கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துகொண்டவர்கள் இவர்கள்.

ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ,இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை.

பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர்.முசுலிம்களோ,பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.கன்னடரோ,க்ருநாடக்கத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர்.தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர்.

பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும்,ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும்,பம்பாய் மாகாணத்திருந்து சில பகுதிக்ளையும்,மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையுன் இணைத்து கருநாடகம் மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறியத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.

பெங்களூரிலும்,கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் கருநாடகத்திற்க்கு பிழைப்பு தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று.

தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் “மொழிவழியில்” கன்னடருக்கு அரிந்து கொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும்.

அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள்,இப் பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல்,இப்பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லி தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர்.

இந்நிலையில்,பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம்.

பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.

கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராச ராசதேவனால் வெல்லப்பட்டன.

மாகடி பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான்.
இன்று எலவங்கா என்றழைக்கப்படும்,பெங்களுர் பகுதி சோழ வள நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.அதற்கு “இலைப்பாக்கநாடு” என்று பெயர்.
இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோள்ர்கள் ஆட்சியில் “எலவக்கா” என்றாகி பிறகு “எலவங்கா” என்று திரிந்தது.

சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலை நகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால்,தமிழ் கங்கர் எனப்பட்டனர்.


தொடரும்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Sunday, August 19, 2007

பொது இடங்களில் காதலிக்கலாமா...கூடாதா..?

இன்றிரவு 9.00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நீயா. நானா நிகழ்ச்சியில் பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் "பொது இடங்களில் காதலிக்கலாம்" அதில் தவறில்லை என்ற அணியில் நான் பேசியிருக்கிறேன்

சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன..எந்த அளவிற்க்கு தணிக்கை செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகும் என்று தெரியவில்லை..

நாமும் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்.

Wednesday, August 15, 2007

ரம்மியமான மாலை பொழுதினிலே--தோழியோடு

நேற்று ஆம்பூர் சென்றுவிட்டு, என் அண்ணன் வாங்கிய நிலம் பதிவுசெய்துவிட்டு பேருந்தில் பெங்களூர் வழியில் அலைப்பேசியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வரும்பொழுது,

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த தோழியை சந்தித்தால் என்ன என்று தோன்றியது. உடனே தோழியை அலைப்பேசியில் அழைத்தேன். மாலை உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்..பார்க்க முடியுமா என்று கேட்டேன்..அதனாலென்ன பார்க்கலாமே என்றார் …

பெங்களூர் நகரத்திற்க்கு சற்று முன்னர் தோழியின் இல்லம் இருப்பதால் முக்கிய அங்காடியோ ,திரையரங்கோ அல்லது பூங்காவோ இல்லாததால் தோழியின் இல்லம் அருகே உள்ள ஆலமரத்தின் அருகே சந்திப்பது என்று முடிவு செயதோம்.

பேருந்தினிலிருந்து இறங்கி அலைப்பேசியில் மீண்டும் சந்திப்பினை உறுதிசெய்தபின்னர் ஆல மரம் நோக்கி நடக்க தொடங்கினேன்..

அந்த இடம் மற்ற ஊர்களிலிருந்து பெங்களுருக்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது …ஆலமரத்தின் அருகே குடிநீர்க்குழாய் நீண்ட வரிசையில் பிளாஸ்டிக் குடங்களும் பெண்களூம்.

நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இடத்தில்,நடுத்தெருவில் காத்திருப்பதென்பது என்பது மிகவும் அவஸ்தையான விஷயம்.

கொஞ்ச நேரத்தில் தோழியும் வந்து சேர்ந்தார்.பேசிக்கொண்டே நடக்கத்தொடங்கினோம்.குழாயடியில் உள்ளவர்களின் பார்வைகளை அலட்சியம் செய்தவாரே-


தோழி விளிம்பு நிலையில் வாழ்ந்தாலும் நல்ல இரசனை கொண்டவர்.தனித்துவமான சிந்தனைகள் கொண்டவர்…

பேசிக்கொண்டே நடந்து வந்தோம்..நல்ல உணவகம் எதும் இல்லாத்தால் பேசிக்கொண்டே நடந்து வந்தோம். தோழி ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிவதால்,பணிச்சுழலில் உள்ள பிரச்சனைகள்,அனுபவங்கள்,எதிர்பார்ப்பு என்று பேசிக்கொண்டே வந்தார்.

ஆள் அரவற்ற சாலையில்(இரு மங்கிலும் உயர்ந்த மரங்கள்) மாலை பொழுதில் தோழியுடன் நடந்து சென்றது ஒரு இனிமையான மற்றும் புதுமையான அனுபவமாக அமைந்தது …

அன்புடன்
அரவிந்தன்

ஜெயலலிதா வழியில் கூகுள் நிறுவனர்கள்!!!

செல்வி.ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சி காலத்தில் 1ரூபாய் சம்பளத்தில் எளிமையாக(?) வாழ்ந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே..



அவரின் அற(?) வழியை பின்பற்றி கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பேரின் வருடம் $1 மற்றுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு பணிபுரிகின்றனர்..

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.அவர்களின் சம்பள விவரம் தெரியும்.



அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது.


அன்புடன்

அரவிந்தன்


Thursday, August 09, 2007

பதிவர் பட்டறை-இதுவரை வெளிவராத புகைப்படங்கள்!!!

லக்கிலுக் எப்படி லுக் விடறார் பாருங்க


ஒருக்கா இவர்தான் "இட்லி வடையோ...சபை-ல பேசிக்கிட்டாங்க

முகம் காட்ட மறுத்த வ.வா.சங்க உறுப்பினர்



தரையில் அமர்ந்து படிக்கும் மாண்வர்கள்



கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்கய்யா..




செந்தழல் ரவி வகுப்பெடுக்கிறார்.




இந்த வேலையெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி என்கிறாரா மா.சி..?



பொன்ஸ் வகுப்பு எடுக்கும் காட்சி






Wednesday, August 08, 2007

பதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்-பகுதி-2

இப்பொழுது தலைப்பிற்க்கு வருகிறேன்..

பதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள் ..யாரிந்த எட்டப்பன்கள்..?

தமிழ் மென்பொருட்களை கொள்ளைவிலைக்கு தமிழர்கள் தலையில் இத்துனை வருடங்களாக மிளகாய் அரைத்த தமிழ் வியாபாரிகளைத்தான் சொல்கிறேன்

இவர்களுக்கு கணித்தமிழ் சங்கம் என்றொரு அமைப்பும் உண்டு..அரசாங்க அங்கீராம் பெற்று தங்களது மென்பொருட்களை விற்றதை தவிர இவர்கள் வேறு எதையும் புடுங்கவில்லை..

இதுப்போன்ற தன்னார்வ முயற்சிகளுக்கு இவர்கள் இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளிபோடாதவர்கள்..

அட ஆதரவுதான் கொடுக்கவேண்டாம்..குறைந்தபட்சம் பார்வையாளராகவாது இவர்க்ள் வந்து இருக்கவேண்டாமா..

இலவசம்,தன்னார்வம்,கட்டற்ற மென்பொருட்கள் இதுப்போன்ற வார்த்தைகளை கேட்டாலே இவர்களுக்கு அலர்ஜி வந்துவிடும்.

தமிழ் மென்பொருட்களை விற்பது ஒன்றும் தவறில்லை..ஆனால் வியாபாரிகள் மட்டுமே வாழவேண்டும், தமிழ்ர்களுக்கு இலவசமாக எதையும் கற்றுக்கொள்ளகூடாது என்பதில் இவர்கள் மிகவும் குறிப்பாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசாங்க மானியம் தருகிறது என்றால் அடித்துபிடித்து வருவார்கள்.அரசாங்கம் நடத்தும் கணினி விழா என்றால் முதல் நாளே வந்து துண்டு போட்டு இடம் பிடிப்பார்கள்.


அரசாங்கத்திடம் மானியம் பெற்று உருவாக்கிய மெண்பொருட்களை மக்களிடையே காசுக்கு விற்பதில் இவர்கள் ஜித்தர்கள்.

இனியாவது தமிழ்ர்கள் இந்த எட்டபர்களை அடையாளம் கண்டுகொள்ளட்டும்


அன்புடன்
அரவிந்தன்.
பெங்களூர்

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!! பகுதி-1

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!!


சென்னை பதிவர் பட்டறை.

நானும் ஈ-கலப்பபை படைப்பாளியமான முகுந்த-ம் சனி இரவு ரயிலேறி ஞாயிறு காலை சென்னை வந்துசேர்ந்தோம்.

தானி பிடித்து அரங்கு வந்துசேர்ந்தபொழுது மணி 9.20. பெயர் பதிந்துவிட்டு சாப்பாடு சீட்டு மறக்காமல் கேட்டு வாங்கி அரங்கினுள் சென்று அமர்ந்தோம்..

எதிர்ப்பட்ட வலைப்பதிவர்களுக்கு முகமன் தெரிவித்து கொண்டு என்னை அறிமுகத்திகொண்டேன்..

அரவிந்தன் என்று என் பெயரை சொன்னவுடன் அரவிந்தன் நீலகண்டனா என்று அதிர்ச்சியுடன் பலர் கேட்டனர். அந்த கேள்வியின் தொனியில் இருந்து அவருக்கு வலைப்பதிவர் மத்தியில் ரொம்ப நல்ல(?) பெயர் இருப்பதை தெரிந்துகொண்டேன்.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த காசி ஆறுமகத்திடம் என்னை அறிமுகபடுத்திகொண்டவுடன்,என்ன அரவிந்தன் உங்க கால் செண்டர் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று மிகவும் அக்கரையுடன் விசாரித்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பெங்களுரின் பெயர் வெங்காலூர் என்று என்று சில வருடங்கள் முன் நான் போட்ட மொக்கை பதிவினை நினைவுகூர்ந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக 10.30 மணிக்கு தாமதமாக வந்த உருப்படாதது நார்யணன் “ நான் அப்பவே வந்துட்டேன் தல”சும்மா கடற்கரையில் காத்து வாங்கிட்டுருந்தேன் என்று தான் ஜொல்லு விட்டு கொண்டிருந்ததை பாலிஷ்-ஆக சொன்னார்..

தல பாலாபாரதி யாருன்னு கேட்டு கடைசியாக கண்டுபிடித்தேன்..ஒரு பாசமான தம்பியை அவர் உருவில் பார்க்க முடிந்தது..கழுத்து சூட்டு தற்பொழுது குறைந்து நலமாக இருப்பதாக சொன்னார்.

டோண்டு ராகவன் பட்டறை பற்றி தன்கருத்தினை சொன்னபொழுது சென்னைபதிவர்கள் சிலர் தமுக்குள்ளே குசுகுசு என்று பேசிக்கொண்டனர் அப்படியே சற்று நமட்டு சிரிப்புடன்.


இராம்கி அய்யா சாலமன் பாப்பையா மீது அதீத கோவத்தில் இருந்தார்(சிவாஜி பட அங்கவை சங்கவை விஷயத்தில்).

சிலர் சாப்பாடு பொட்டலங்களை மீச்சம் மீதியுடன் அங்காங்கே அதற்க்கென் உள்ள தொட்டியில் போடாமல் சென்றதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

காலை தேனீர் இடைவேளையின்போது ஜெய்சங்கர் அவர்கள் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை வீட்டாரை எப்படி சிறப்பாக கவனிப்பார்களோ அதுப்போல கவனித்தார்..

தமிழி தேர்ந்த கல்லூரி பேராசிரியர் போல் வகுப்பெடுத்தார்.கூட்டம் முழுவதையும் தன் பேச்சால் கவர்ந்தார்.பார்ப்பதற்க்கு கொஞ்சம் சினிமா நடிகர் போல இருந்தார்.

கிருபா ஷங்கர் பேச்சு மிகவும் எமாற்றமளித்தது.முழுமையாக தயார்செய்து வரவில்லை என்று தெரிகிறது..

லக்கிலுக்..

தேனியைப்போல் சுறுசுறுப்பான இளைஞன்..இவனது உருவத்திற்க்கும், பேச்சிற்க்கும் சிறுதும் தொடர்பில்லை..
என்னடா மச்சி என்று தோழமையுடன் தோளில் கைப்போட்டு பேச தோன்றுகிறது அவரைப்பார்த்தவுடன்.

ஆபாசபின்னூட்டங்கள் போடுபவர்கள் மீது எதாவது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இகாரள் பிராகஷ் சொன்ன பதில்

சென்னை சைபர் கிரைம் பிரிவினர் இணையம் மூலம் நடைபெறும் பொருளாதர குற்றசாட்டுகள் மீததான புகார்க்ளுக்கு மட்டுமே உடனடி நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று சொன்னார்.


தொடரும்..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Friday, August 03, 2007

பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

சமீபத்தில் என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் கேட்டேன் சிங்கம் சிங்களாக வேட்டைக்குச் செல்லாதே லாஜிக் உதைக்குதே என்றேன்.

.அதற்க்கு அவர் ரஜினி சொல்ற பன்ச் டையாலாக்-ஐ கேட்டு அனுபவியுங்க ஆராயதிங்க.. அன்று பாட்சா வில் ரஜினி சொன்ன "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" அதில்கூட லாஜிக் கிடையாது(1 என்றும் 100 ஆகாது என்ற லாஜிக்)..

ஆனால் அன்று தமிழ்நாடே அந்த வசனத்தை பேசி மகிழ்ந்தது..

ஆகவே பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

அன்புடன்
அரவிந்தன்

Tuesday, July 31, 2007

"ஐ மிஸ் யூ" -க்கு தமிழில் என்ன

நேற்று இரவு 2.30 மணி இருக்கும்..கைப்பேசியில் ஒரு அழைப்பு.அலுவலகத்தில் வேறொரு துறையில் இருக்கும் ஒரு இளைஞனிடமிருந்து..

எதோ அவரசம் போலிருக்கிறது அதான் இந்த நேரத்தில் அழைப்பு என்ற நினைத்த படியே என்ன விஷயம் என்று கேட்டேன்..

அண்ணே! எனக்கொரு அவரசமா ஒரு உதவி என்றான் என்ன சொல்லுப்பா என்றேன்.என் கேர்ள் பிரண்ட்-க்கு ஒரு ஐ மிஸ் யூ என்பதை தமிழில் எஸ்.எம்.எம் அனுப்ப வேண்டும்.ஐ.மிஸ்.யூ என்பதை எப்படி தமிழில் சொல்வது என்று கேட்டான்..இதுபோன்ற விடயங்களுக்கு நீங்கதான் சரியா ஆளு என்று கம்பெனி-ல பேசிக்கிறாங்க என்று பில்டப் கொடுத்தான்..

"உன்னை பார்க்காம தவியா தவிக்கிறேன்",

"என் தவிப்பு உனக்கு புரியுதா"

நீ இல்லாத தனிமை ரொம்ப வெறுமை"

என் மூன்று சொற்றொடரை சொன்னேன்..

நீங்க என்ன நினைக்கிறீங்க வேறு எதாவது பொருத்தமான வாக்கியம் இருக்கா..?

அன்புடன்
அரவிந்தன்

Monday, July 30, 2007

சன் டிவியில்-இப்பொழுது-உல்லாசப்பறவைகள்-திரைப்படம்

இப்பொழுது சன் டிவியில் உல்லாசப்பறவைகள் திரைப்படம் ஒளிப்பரப்பாகிகொண்டு இருக்கிறது.

கமல்,தீபா,ரதி நடித்தப்படம்.இனிய பாடல்கள்,கண்ணுக்கினிய காட்சிகள் இடம்பெற்ற படம்.முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் என்று நினைக்கிறேன்...

பார்த்து மகிழுங்கள் நேரமிருப்பின்

அன்புடன்
அரவிந்தன்

சில்லறை வணிகத்திலும் நவீன தொழிற்நுட்பம்!!!

இன்று காலை அருகிலுள்ள மருந்து கடைக்கு சில மருந்துகள் வாங்கச்சென்றேன்.

அபுபொழுது அந்த மருந்து கடையில் ஒரு விற்பனை பிரதிநிதி (மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்) அந்த கடைக்கு தேவையான மருந்துகள் பற்றிய தேவைகளை தன்னுடைய் PDA-IPAQ- பதிந்து கொண்டிருந்தார். அலுவலகம் சென்றவுடன் அந்த handheld decice-ல் இருந்து அலுவலக க்ணினியில் தரவிறக்கம் செய்துவிடுவதாக சொன்னார்..


தொழில்நுட்பத்தின் தாக்கம் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது..

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, July 25, 2007

அபூர்வமாக பூத்த பிரம்ம கமலம்

நண்பர்களே!!!



மிக ஆபூர்வமாக பூக்கும் பிரம்ம கமலம். வருடத்தில் சில நாட்கள் நடு இரவினில் பூத்து ஒரு மணி நேரத்திலே வாடி விடும் இந்த பிரம்ம கமலம். சென்ற வாரம் விழித்திருந்து பூக்கும் போது எடுத்த படம்.



அன்புடன்
அரவிந்தன்

Tuesday, July 24, 2007

விஜய் டிவி-நீயா-நானா-சில விளக்கங்கள்

வீ.எம் அவர்கள் எழுதிய நீயா-நானா நிகழ்ச்சிப்பற்றிய பதிவிற்க்கு நான் இட்ட பின்னூட்டம் இங்கே ஒரு பதிவாக

அன்புள்ள வீ.எம்.

14-7-2007 நடந்த நீயா நானா படப்பிடிற்க்கு நானும் சென்றிருந்தேன் பங்கேற்ப்தற்க்காக..

முதலில் அவர்கள் சொன்ன தலைப்புதமிழகத்தில் வசிக்கும் தமிழ்ர்கள் மற்றும் வேற்று மொழி பேசும் மக்கள்..

கடைசி நேரத்தில் என்ன நின்னைத்தார்களோ அந்த தலைப்பு சற்றே பிரச்சினைக்குரிய தலைப்பு அதனால் அந்த தலைப்பில் விவாதம் நடத்துவது இயலாது என்று சொல்லிவிட்டனர்

.பிறகு "பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நாண் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓலி வாங்கி பெற எந்த வித பிரச்சினை இல்லை.அதுபோல பணம் கொடுத்து யாரும் பேச அழைக்கப்பட்டதாக எனக்கு ரியவில்லை..

நல்ல மரியாதையுடன் நடத்தினார்கள்.இரவு நிகழ்ச்சி முடிந்த போது எல்லோருக்கும் இரவு உணவு,போக்குவரத்து வசதி செய்து கொடுத்தனர்.நிகழ்ச்சியில் இறுதியில் ஒரு பெண் பங்கேற்ப்பாளர் திடீரென மயங்கிவிழுந்த போது கோபி ஓடி வந்து முதலுதவி செய்தது மறக்க முடியாதது..

சில கல்லூரி மாணவ மாணவிகளை அவர்கள் தொடர்ந்து அழைக்கிறார்கள் கூட்டம் சேராததபோது என்று கேள்விப்பட்டேன்..
மற்றபடி விவாதம் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது..

அன்புடன்
அரவிந்தன்.
பெங்களுர்

Friday, July 20, 2007

இயற்க்கை புகைப்பட போட்டிக்கு என்னுடைய புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் உள்ள கல்லாத்திகிரி என்ற அருவியில் எடுக்கப்பட்டுள்ளது..




மலையிலிருந்து வேகமாக வந்த காற்றாற்று வெள்ளத்தை அங்குள்ள யாணைகள் தடுத்து நிறுத்தி கல்லாக சமைந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

















கெம்ங்கண்டி என்ற இடத்தில் எடுத்த மற்றொரு புகைப்படம்
அன்புடன்
அரவிந்தன்


Wednesday, July 18, 2007

பெங்களூர் பதிவர்களே!!!.சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா

பெங்களூர் பதிவர்களே!!!.

சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா பெங்களூர் பதிவர்களே!!!,அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவு பட்டறைக்கு ஓன்றாக ரயிலில் சென்று கும்மியடித்துவிட்டு வரலாம்.

ஒன்றாக செல்ல விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் ரயிலில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

அன்புடன்
அரவிந்தன்

Tuesday, July 17, 2007

ஜெயா டி.வி.ரூ 375 கோடி நட்டத்தில்.

நம்பதகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்.

1999-2007 வரை ஜெயா தொலைக்காட்சி தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி இது வரை ரூ375 கோடி இழப்பினை சந்தித்துள்ளது...

ஆனால் அம்மா இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தற்போதைய நிலவரப்படி அம்மாவிடம் ரொக்கமாக ரூ 5000 கோடி இருப்பதாக தகவல்.

அன்புடன்
அரவிந்தன்

Monday, July 16, 2007

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..

ஏற்கனவே போட்ட எட்டுதான்..அப்பொழுது தமிழ் மணத்தில் எனது வலைப்பதிவிலிருந்து இடுக்கைகள் திரட்டததாது இப்பொழுதுதான் தெரியவந்தது.அதனால் மீண்டும் பதிப்பிக்கிறேன்.

எற்கனவே படித்தவர்கள் மன்னிக்க.

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..

என்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..

1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.

2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..

4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்கள் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..

5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..

6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.

7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உலகம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.

8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.

2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..

அன்புடன்
அரவிந்தன்

Sunday, July 08, 2007

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி

வணக்கம்.. என்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…

என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..

1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.

2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..

4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்கள் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..

எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..

5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..

6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.
அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..

உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.

7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உலகம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..

கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.

8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.

2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..

அன்புடன்
அரவிந்தன்

Saturday, June 30, 2007

நகர வாழ்க்கையில் பெரிதாக இழக்கவில்லை!!

என் நண்பர் நாரயணன் எழுதிய ஓணான் என்ற பதிவிற்க்கு நான் கொடுத்த பின்னூட்டம் இங்கே ஒரு பதிவாக

நாரயணன் எழுதியது.
-------------------------------------------------------------------------------------
ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா ?. ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன ?
-----------------------------------------------------------------------------------------
என்னுடைய பதில்!
அன்பு நாரயணன்!!!தங்களின் மேற்ச்சொன்ன விஷயம் எனக்கென்னவோ ஜல்லியடிக்கும் விஷயமாகவே தெரிகிறது..நகர வாழ்க்கை அப்படியொன்றும் தலை கீழாக மாறவில்லை.நகரமயக்காலிலும் இன்னும் பழமையை பார்க்கமுடியும் மனமிருந்தால்.இங்கு பெங்களுரில் என்னால் தினமும் ஓனானை பார்க்கமுடிகிறது.சிட்டுகுருவிளை பார்க்க முடிகிறது.மடிவாளா சந்தையில் விளாம் பழம்,பேரிக்காய் கிடைக்கிறது.."போரம்" என்ற மிகப்பெரிய அங்காடி வாசலிலே ஐந்து ரூபாய்க்கு நல்ல வறுத்த சோளம் கிடைகிறது.போன வாரம் கூட என் மகளுக்கு சின்ன வயதில் தென்னங்கீற்று மூலம சுருக்கு போட்டு தவளை பிடிப்பதை சொல்லிகுடுத்தேன்..ஜிகிர்தண்டா கோரமங்களா முருகன் இட்டிலி கடையில் கிடைத்திறது...இன்னும் என் வீட்டு அருகில் குழந்தைகள் கண்ணாம் பூச்சி,கல்லா மண்ணா,திருடன் போலிஸ் விளையாடுகிறார்கள்.(இந்த கணினியுகத்திலும்) அரசு பள்ளி வாசல்களில் இன்னும் மாங்கா பத்தை,நெல்லிக்காய் விற்கிறார்கள்...நீங்கள் வசிக்கும் மேற்கு கே.கே நகரை சில வருடங்களுக்கு முன்பு வரை "ஊரு" என்றுதான் அழைப்பார்கள்.சில வருடங்கள் முன்பு வரை வேம்புலி அம்மன் கோவில்(உங்கள் வீடு அருகில்)மரத்தடி பஞ்சாயத்து நடந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அன்புடன்
அரவிந்தன்

Friday, June 29, 2007

மதுரை இடைத்தேர்தல்-முடிவு!!!

நடந்து முடிந்த மதுரை இடைத்தேர்தலி ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான பேராய கட்சி(காங்கிரஸ்) வேட்பாளர் சுமார் 31500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்...

அதிமுக மற்றும் தே.மு.தி.க வேடபாளர்கள் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஜாமீன் தொகையை இழந்துள்ளனர்..

அன்புடன்
அரவிந்தன்

Sunday, June 17, 2007

உடனடி கடன் தேவைகளுக்கு!!!!

நண்பர்களே!!!...

எனது நண்பரொருவர் சென்னையில் பன்னாட்டு வங்கியின் நேரடி விற்பனை முகவர்(direct sales associates)-ஆக இருக்கிறார்...

உங்களில் யாருக்காவது தனிநபர் கடன்(personal loan),அல்லது கடனட்டை(Credit card) தேவையாக இருப்பின் நன்பரினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

நம்பகமான சேவை!!!..
உடனடி தொடர்புக்கு
ஆர்காடியா அஸோஸியேட்ஸ்
புருஷோத்தமன்.
-அலைபேசி-99401 10090
044-23725505
மின்னஞ்சல்:-aarcadia@rediffmail.com


அன்புடன்
அரவிந்தன்

Friday, June 08, 2007

கலைஞர் தொலைக்காட்சி!!! வசூல் வேட்டை ஆரம்பிச்சிட்டாங்க!!!

கலைஞர் தொலைக்காட்சி பெயரில் வசூல் வேட்டை ஆரம்பித்தாகிவிட்டது...ஜூன் 3ம் தேது சுபவேளையில் வசூல்வேட்டைக்கு பிள்ளையார்சூழி போட்டாச்சு...அனைத்து மாவட்ட செயளாலருக்கும் வசூல் வேட்டை நடத்த தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு அனுப்பட்டுள்ளது..நன்றாக வசூல் செய்யும் மாவட்ட செயளாலருக்கு பரிசு உண்டாம்..

தொழில் அதிபர்கள் வரிசையில் நின்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞரிடம் நிதி அளிக்கும் காட்சியினை விரைவில் பார்க்கலாம்...

முதல் வசூல் பியாரிலால் என்ற மார்வாடியிடம்..பாவம் கலைஞர் தொலைக்காட்சியில் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வாரி வழங்கியிருப்பார் என்றே நம்புவோம்..

அன்புடன்
அரவிந்தன்

Tuesday, June 05, 2007

என் மகள் அமுதசுரபி


என் மகள் என் அலுவலகத்தில் நடந்த அன்னையர் தின விழாவில் தன் அன்னையை புகழந்து பாடியபோது எடுத்தப்படம்


அன்புடன்

அரவிந்தன்