Monday, November 26, 2007

சகரத்தை மீட்போம்

காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாக சகரத்தை "ச" (cha) என்று சரியாகவே ஒலிப்பர்.

காவிரிக்கு வடக்கே அச் சகரம் ஸகரம்மகிச் சோறு (choru) என்பது ஸோறு என்றும், செல்வம்(Chelvam) என்பது ஸெல்வம்(selvam) ஏன்றும் திரிந்து ஒலிக்கும். சகரம் அவ்வாறு ஸகரமாவது தமிழ் எதிர்ப்பை தானறிந்த தன்வினையாகக்கொண்ட பார்பபானருக்கு எடுத்த கையாகியது.. அந்த ஸகரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (sha)ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர்.

நேற்று வரை அவாள் இவாள் எனப் பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னாரெனக் காட்டிக்கொண்டனர். அந்த அவாள்,இவாள் சாதிநடை இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டமையால்,இன்று சகரத்தை ஷகரமாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.

க-------ங
ச-------ஞ
ட-------ண
த--------ந
ப--------ம

ஆகிய தமிழ் உயிர்ர்மெய்யெழுத்துக்களீல்,க,ச,ட,த,ப முதலான வல்லின் உயிர்மெய் எழுத்துக்களை விரிவாக்கியதாலேயே வட மொழிகளில் ka,kha,ga,gha போன்ற வருக்க ஒலியன்கள் தோன்றின. அவற்றில் "ச" வரிசையில் சகரமே (cha)முதல் எழுத்தாகும்.இதுவே தமிழில் ஸகரம் முதல் எழுத்தாக வரமுடியாது என்பதைக் காட்டும்.தமிழில்,அச்சகரமே ஒரு சொல்லுக்கு இடையில் ஸகரமாக ஒலிக்குமேயின்றி,ஸகரம் முதல் எழுத்தாக வரவே வராது. சகரம் (cha) மட்டுமே முதல் எழுத்தாக வரும்.அதனாலேயே ஸகரம் முதலான வடவொலி எழுத்துக்கள் வடிக்கப்பட்டன.

சரியாக ஒலிப்பதன் வாயிலாகச் சகரத்தை மீட்பது தமிழைக் கண்ணெனப் பேணும் தமிழ்காப்பு வினையேயின்றி வேறில்லை.

கருத்து உதவி:பெங்களூர் அறிஞர் குணா அவர்கள்

அன்புடன்
அரவிந்தன்

Saturday, November 17, 2007

சைக்கிள்-ல் டீ விற்க்கும் பெங்களூர் தமிழர்-ஆர்குட்-ல் ஹீரோ



பெங்களூர் மையப்பகுதியில் இருக்கும் எம்.ஜி சாலை,பிரிகேடு சாலை சந்திப்பில் இவரை இரவு நேரங்களில் பார்க்கலாம். தனது சைக்கிளில் நடமாடும் டீக்கடையை வெற்றிகரமாக 10 வருடங்களாக நடத்தி வருகிறார்.

ஆர்குட்-ல இவருக்காக மூன்று குழுமங்கள் செயல்படுகின்றன.அதில் முக்கியமானது முனிசாமி எம்.ஜி ரோடு என்ற பெயரில் செயல்படும் குழுமம்


இதில் 500-க்கும் மேற்ப்பட்டவர்கள் அங்கத்தினராக உள்ளனர். இந்த சைக்கிள் கடை டீக்கடைக்காரைப்பற்றி சுவையான விவதாங்கள்.முனிசாமி-யின் சொத்து மதிப்பு என்ன ,முனிசாமியின் கடையில் பிடித்தது என்ன,போலிஸ் தொல்லையில் இருந்து இவர் எப்படி தப்பிக்கிறார்.முனிசாமியின் காணமல் போன் உதவியாளர் போன்ற சுவையான விவாதங்கள்.

சாலையில் இரவுநேரத்தில் சைக்கிள்-ல் டீ விற்று பிழைப்பு நடத்தும் இந்த தமிழரை ஆர்குட்-ல் ஒரு ஹீரோ அளவிற்க்கு பெருமைபடுத்தியிருக்கும் பெங்களூர் இளைஞர்களூக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள்

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, November 14, 2007

அழகான ரோடுதான் அதுமேல அழகான பொண்ணுங்கதான்



சென்ற வருடம் அலுவலக நண்பர்களோடு வாரயிறுதியில் சுற்றுலா சென்ற போது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலையில் எடுத்த புகைப்படங்கள். எல்லோரும் புகைப்பட போட்டிக்கு ஆளிலில்லாத சாலைகளை படம்பிடித்து போட்டார்கள், நாம கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பொண்ணுங்களையும் படம் பிடித்து போட்டு இருக்கேன்.

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, November 07, 2007

சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.

சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)

சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.

உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்

முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.

முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு சுடிதார் மூலம் முழுவதும் மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன

பெண்யியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன

அன்புடன்
அரவிந்தன்

Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வன் வீரச்சாவு.தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் திரு.தமிழ்ச்செல்வன் இன்று காலை ஸ்ரீலங்கா அரசின் விமானப்படைப்தாக்குதலால் வீர மரணமடைந்துள்ளார்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவகையில் ஈழ மக்களின் இனப்போராட்டத்தில் அக்கரை கொண்டுள்ள ஒவ்வொரு தமிழ் பதிவரும் இன்று ஒரு நாள் புதிய பதிவு எது இடாமல்(தமிழ்செல்வன் தொடர்பான பதிவுகள் மட்டும் விதிவிலக்கு) அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

வருத்ததுடன்
அரவிந்தன்