Wednesday, December 30, 2009

2009-தமிழ்ப்பதிவுலகின் முக்கிய நிகழ்வுகள்!!!

தமிழ்ப்பதிவுலகில் 2009-ல் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளேன்.ஏதாவது விடுப்பட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

1.மாவீரன் முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்பு மற்றும் முத்துமார் வீரவணக்க கூட்டம் நடத்தியது.

2.பதிவர்கள் பலரின் படைப்புகள் அச்சு வடிவத்தில் வெளிவந்தது.

3.ரோசாவசந்த் மற்றும் ஜெயோரம்சுந்தர் மோதல்

4.வருட இறுதியில் நடந்த சுமஜ்லா நற்க்குடி பர்தா விவகாரம்

5.சிறப்பாக நடந்த ஈரோடு பதிவர் சங்கமம்.

6.பல புதிய திரட்டிகள் துவக்கம்

7.கேபிள் சங்கர் தந்தையார் அவர்கள் மறைவின்போது நம் பதிவர்கள் இணைந்து உதவியது.

8.பதிவுலகமே இணைந்து சிங்கை நாதன் அவர்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி செய்தது.

9.பதிவர் சிந்தா நதி அவர்களின் மரணம்

10.பதிவர்கள் நடத்திய பட்டறை (சிறுகதை)

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Wednesday, December 23, 2009

iஇடைத்தேர்தல் முடிவுகள்--முன்னனி நிலவரம்

முதல் சுற்றின் இறுதியில் திமுக வேட்பாளர்கள் வந்தவாசி மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் முன்னிலை

வந்தவாசி
கமலக்கண்ணன் திமுக 5483
முனுசாமி அ இ அதிமுக 3816

திருச்செந்தூர்

அனிதா இராதாகிருஷ்ணன் திமுக ---10649
அம்மன் நாராயணன் அ இ அதிமுக 4442

Thursday, October 22, 2009

தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்"கருத்தரங்க‌ம்-பெங்களூரில்

"தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்"கருத்தரங்க‌ம்

தமிழின் பெயரால் இணைந்து பணியாற்றும் அன்பு உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் வணக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கின் - பெங்களுர் தகவல் தொழில் நுட்பப் பிரிவினரும், "SAVE TAMILS" சென்னை நண்பர்களும் இணைந்து " தெற்காசியாவின் மனித உரிமை மீறல்கள்" என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை வருகிற அக்டோபர் மாதம் - 25ஆம் நாளில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். முள் வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற நம் இனத்தின் வலியை செய்தியாளர்களுக்கு முடிந்த வரையில் கொண்டு சேர்க்கவும், தொடர்ந்து தொய்வின்றி நமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலாய் நமது இளைஞர்கள் செயல்பட ஒரு உந்து விசையாகவும் இந்தக் கருத்தரங்கினை கொண்டு செல்வதற்கு உங்களிடம் இருந்து முழுமையான ஆதரவையும், ஆலோசனைகளையும் (நேர்மறையான) வேண்டுகிறோம். உலகெங்கும் ஊடகவியலாளர்களின் குறியீடாக இருக்கிற மனித உரிமை மீறல் காணொளிக் காட்சிகள் பெரும் தாக்கத்தை விளைவித்திருக்கும் இந்தத் தருணத்தை நாமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று நம்புகிறோம்.



த‌லைப்புக‌ள் ‍மற்றும் பேச்சாள‌ர்க‌ள்
1) இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
அ) பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் இராணுவமயமாக்கல் .R.K.Mattu (Chief journalist - Indian express)
ஆ) இடப்பெயர்வு முகாம்களின் அவ‌ல‌ நிலை ‍.Father.Prakash louise (South asia Director - JFG REFUGEE SERIVCE) .
2) தமிழக‌ மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் - Mr.Muruganandham (Seceretry - Tamil nadu fisherman associatioந்) .
3) இந்திய வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களும்
அ)வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் . Mr.Venhu (General Seceratry - Naga people movoment)
ஆ)குடிமை மீறல் சிறப்பு சட்டங்கள்.Mr.Vijay kumar (National Law school)
இ) காஷ்மீரின் வரலாறும், மனித உரிமை மீறல்களும்.Mr.Deena (Other media)
4) தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் .Mr.Sethu(friends of Tibet)
5) புவி சார் அரசியலும் , பொருளாதார நலன்களும் .Mr.arivazhagan(Freelance journalist)
6) மனித உரிமை அமைப்பின் செயல்பாடுகள். Mr.paul Newman(Lecturer - bangalore university)


இடம்.யுனைட்டட் தியாலஜிக்கல் கல்லூரி , 63, மில்லர் சாலை, பென்சன் நகரம், பெங்களூரு‍ 46. கண்டோன்மென்ட் தொடர்வண்டி நிலையத்தின் பின்புறம் உள்ளது.

நாள்.25/10/2009 நேரம். மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணிவரை

தொட‌ர்புக‌ளுக்கு,
+91 9886002570. ந‌ற்ற‌மிழ‌ன்.
+91‍9980799572. த‌மிழ‌ன்ப‌ன்.

Sunday, September 06, 2009

லக்கி யுவகிருஷ்ணா வுக்கு நச் கேள்விகள்!!!

பதிவர் லக்கி என்றழைக்கப்படும் யுவகிருஷ்ணா அவர்களின் உதிரத்துணி என்ற பதிவிற்க்கான எதிர் பதிவு

//இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன்//

என்ன லக்கி உண்மையிலே தெரியாதா அல்லது தெரியாதமாதிரி நடிக்கின்றீர்க்ளா..
80-களின் இறுதி வரை யாழ் மாவட்டத்தில் காவல் துறை உட்பட அனைத்து அரசு துறைகளும் முழுமையாக தமிழர்களால் நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் யாழ் நகரில் செயல்பட்ட அரசு காவல்துறை சிங்கள அரசு சார்பாகத்தானே செயல்பட்டிருக்கும்.

ஈழப்போரட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களின் வரலாறு தெரிந்துகொள்ளாமல் போனது யார் தவறு லக்கி.?


//முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்//

இதில் என்ன புரிதலில் தவறு கண்டீர்.?

வரலாறு புரியாமல் தமிழர்களின் உணர்வினை கொச்சைபடுத்தார்தீர்கள் லக்கி.

தமிழர்கள் என்ன கடந்த முப்பதாண்டுகளாக சிங்களவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டார்களா.

சிங்களன் மட்டும் தமிழனை கொல்லவில்லை,தமிழனும் தமிழனை கொன்றான் என்ற கருத்தியலை நிறுவப்பார்பதன் அவசியம் என்ன.?

30,000 தமிழர்கள் ஓர் இரவில கொல்லப்பட்டத்தை கண்டு மனமொடிந்து வருத்தப்பட்டவர்கள் எல்லாம் முட்டாள்களா.?


//விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.//

நான் கூட நினைத்தேன் லக்கி ”தமிழனத் தலைவர்” தமிழர்களுக்கு எதாவது துன்பம் வந்தால் பதவியை துறந்தாவது தமிழர்களை காப்பாற்றுவார் என்று.

30,000 தமிழர்கள் கொல்லப்பட்ட அன்று பதவிக்காக டெல்லி நகரில் காவடி தூக்கிகொண்டு அலைந்தவரும் ஒரு தமிழர்தானே லக்கி.அன்று டெல்லியில் பதவிக்காக அலைந்தை பார்த்தபோது எனக்கு எற்ப்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை லக்கி.


இப்படியிருக்கையில் காவல்துறையில் இருந்த ஒரு தமிழன் கொடுமைபடுத்திய ஒரு சம்பவத்தினை வைத்துகொண்டு தமிழர்களின் உணர்வினை கேள்விகுறியாக்காதீர்கள் லக்கி

புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் புலி எதிர்ப்பு புராணம் பாடி பிழைப்பு நடத்தும் சோபா சக்தியின் புலியெதிர்ப்பு அரசியலை வேறு வகையில் நிறுவப்பார்க்கும் ஒரு செயலாகவே உங்கள் பதிவினை பார்க்கின்றேன்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Friday, July 17, 2009

ஆங்கிலத்திருந்து தமிழ் மொழி மாற்றம் உதவி தேவை

கல்வி தொடர்பான மென் பொருளை நண்பர் உருவாக்கி வருகிறார்.அதனுடைய தமிழ் பதிப்பிற்கு ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி மாற்றம் உங்கள் உதவி தேவை.


Add
Address1
Address2
Approval
Assign
Assigned To
Attended
Batch
Batch ID
Batch Name
Batchid
Calender of Event ID
Cancel
City
Collation
Comments
Communication Language
Confirm Password
Contact Name
Credits
Day
Debug Mode
Delete
Description
Detail
Details
DOB
Download
Edit
Email
Email1
Email2
Encoding
End Time
Error
Error Message
Event Date
Event Description
Event Type
Exam ID
Exam Name
Examination
Experience
Export
Faculty
First Name
Followup
Followup Date
Followup ID
Gender
Group Code
Group ID
Group Name
Groupid
In Charge
Institute Code
Institute id
Institute ID
Institute Language
Institute Name
Institute Style
Last Name
Layout
Logo
Marks ID
Marks Obtained
Marks Scored
Marks Type
Max Attendance
Max Marks
Menu Link
Menu Name
Middle Name
Min Attendance
Min Marks
Mobile
Mobile1
Mobile2
Multirow
Nationality
Next Followup
Optra ID
Order
Password
Period
Period Name
Phone
Pin Code
Print
Publish ID
Publish Status
Publish Type
Q String
Qualification
Record Status
Register Number
Relationship
Response
Role
Roll Number
Section
Semester
Send
SMS
SMS Provider
Staff ID
Start Time
State
Status
Stream
Student Menu ID
Student Name
Subject
Subject Code
Subject ID
Subject Name
Success
Test/Exam Name
Timetable
Title
Total
Transtatus
Update Date
Updated Date
Upload
User ID
User Name
User type
username
Venue
Website
Week Day
Year of Admission

test report
Credit Setup Screen
Credit added successfully
Available
Regular
Announcements
Shared Pool(unit)
End Date
submit

Field
Field Value
Message
Max 240 Chars
chars left
Signature
Publish to
Batch
Stream
Semester
Section
Cancel
Publish
Announcement Screen

Start Period
End Period
Back
Submit

Attendance Information Upload Stats
Total Records:
Success Records:
Error Records:
Loading Attendance Infomation...
Start Loading ...

Sorry Unable to upload file.. Please contact OPTRA Service Support

Batch Subject Assignment
Check All
Uncheck All
Change Password
Sorry, Unable to change your password try again later
Your Password has been Changed Successfully
New Password
Confirm Password
Publish Confirmation Page
Additional Information
Powered by INZ Axis
Max 50 Characters
chars left

Please read the below instruction carefully before publishing
Please Click Confirm Publish button to publish the information. Make sure you want to Publish the details
Please wait while you click Confirm Publish "Do not Close Window" till you get the dashboard confirming the publish status
Click on Cancel button to avoid publishing the information
One cannot stop publish once Confirm Publish button is clicked

Student list will be listed here
Calendar of Events
Marks Card Generation..
Event Details
Event:
Title:
Venue:
Details:
Optra features
Performance Analysis
Attendance Register
Time Table
Calendar of Events

Login Failed
Please check your username and password
Click here to Login
Logout
You have been logged out.
Marks Information Upload Stats
Total Records:
Success Records:
Error Records:
Home Page
SMS First Level Delivery Status
Sending Message..
Attendance Publish
Message
Designation:
Event Information
Month Summary
Test/Exam:


அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Sunday, June 21, 2009

கவிஞர் தாமரையின் சாபம்

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
..........
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Wednesday, May 20, 2009

நடுநிலைவாதிகளுக்கு சில கேள்விகள்

புலிகள் ஒழிந்தால் தான் மக்களுக்கு நல்லது பிறக்கும் என்று முன்பு கதறிய அனைத்து அதி மேதாவிகளும் அறிவு ஜீவிகளும்................


தாங்கள் நம்பும் ஹிந்து மற்றும் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாகவும்,

சோ மற்றும் சுப்ரமணியசாமி வாயிலாகவும்,

ராஜிவ் காந்தியின் ஆன்மா மற்றும் அவரின் குடும்பத்தார் மூலமாகவும்

தமிழீழ மக்களுக்கு ஏதேனும் வகையில் நன்மை செய்தார்களானால் அவர்கள் மனிதர்கள் என்று நம்புவோம்.

ஏனெனில் விடுதலை புலிகளும் அதன் தலைமையும் தான் உங்களுக்கு உறுத்திய இரண்டு விஷயம்!!!!

இவை இரண்டுமே இல்லை என்று இன்று இந்திய இலங்கை கூட்டுஸ்தாபனம் அறிவித்து விட்டது.

எனவே அறிவானவர்களே........

புலி எதிர்ப்பாளர்களே.......

தமிழீழ காவலர்களே செய்வீர்களா?????

அரசியல் ரீதியான முன்னெடுப்பை இலங்கை அரசோடும்,இந்திய அரசோடும்,உலக வர்த்தக நாடுகளோடும் மற்றும் இலங்கையில் வர்த்தகம் புரிய வெறியுடன் இருக்கும் பண முதலைகளுடனும் யார் பேச முடியும்?????

இது வெறும் தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் பிரச்சனை அன்று அது எப்பொழுதோ முடிந்து விட்டது!!!!

இலங்கை எனும், வர்த்தக வசீகரமுள்ள, ஒரு குட்டி தீவை தமதாக்கி கொள்ள துடிக்கும் உலக நாடுகளுக்கும், தன்னுடைய வீடு வேண்டும் எனும் உரிமை குரலிட்ட ஒரு சிறு,ஒடுக்கப்பட்ட, குறு இனத்தின் சுதந்திர தாகத்திற்கும் இடையேயான போராட்டம். போர்,

இவை எல்லாம் அறிந்து தான் பிரபகாரன் எனும் ஒரு தலைவன் முன்னேப்போதுமில்லாமல் வீறு கொண்டு எழுந்து படை அமைத்து சமர் புரிந்தான்.

அவனுக்கு தெரியும் சிங்களனை கொரில்லாக்களாக இருந்து அல்ல, சிறு போராட்ட குழுவாக இருந்தே கூட அடித்து விரட்டலாம் என்று.

எப்பொழுது இது உலக வர்த்தகத்தின் பிரச்சனையாக மாறியதோ அப்பொழுதே அவனுக்கு தெரிந்து விட்டது இதை போர்ப்படை கொண்டு தான் அணுகவேண்டும் என்று.........

இதுவே முடியாது எனும்போது, அல்லது கசப்பான முடிவுக்கு வந்து விட்டது எனும்பொழுது, இனி உலக வர்த்தகர்கள் தூக்கி எரியும் நல உதவிகளும்,பிச்சை பணமும்,உணவு பொட்டலமும் தான் ஈழ தமிழனுக்கு மிச்சம்.

ஈழமா தரப்போகிறார்கள்.....?????

கதறி அழக்கூட திராணி இல்லாதவர்களா இனி இந்த கொடுங்கோலர்களிடம் கொடி எழுப்ப போகிறார்கள்??????

சரி சமமாக நின்று சமர் புரிந்தே கிடைக்காத ஈழம் இனி பிச்சை கேட்ட கிடைக்க போகிறது???????

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இது கடல் கரை அருகில் கட்டிய மணல் கோட்டை தான் நண்பர்களே..........

ஈழ தமிழன் சோறு கிடைத்தால் போதும் என்பான்!!!!

புலம் பெயர்ந்தவன் இனி அந்த அந்த நாட்டு பிரஜையாக மாறி தன இன அடையாளத்தை தொலைத்து விடுவான்.

தமிழக தமிழன் பிளாஸ்மா டிவி கிடைக்குமா என்று பேரம் பேசி மகிழ்வான்.

போராட்டத்தின் வழிகள் மாறுவது என்பது பின்னடைவோ அல்லது தோல்வியோ அல்ல ஆனால் இலக்கு மாறினால் தான் மிக பெரிய தோல்வி......

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!!!!

அதை விடுத்து பிச்சை போடும் எச்சகாசுக்கும், புளித்து போன சம உரிமை நாடகங்களும்,சரியானதொரு இலக்கா???

என்பதை மிக நுண்ணியமாக சர்வதேசத்துடன் சேர்ந்தது இந்த புலி எதிர்ப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்!!!!

சிங்களவனுடன் இயைந்து இருக்க முடியுமா அல்லது தனி நாடா என்று ஓட்டெடுப்பு எடுக்க வேண்டும் என்று அன்று கழிவிரக்கம் கொண்ட அஹிம்சை வேடம் பூண்ட வேட தாரிகள் இன்று அதே வாக்களிப்பு யோசனையை சிங்கள பேரினவாத அரசிடம் எடுத்த சொல்ல முடியுமா????

இன்னும் ஓரிரு வருடத்திற்கு ஈழ தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் அவர்களில் இருக்கும் ஒரு ஆண் மகனை கூட உயிரோடு விடாது எல்லோரையும் கொன்று தமிழீழ பெண்களை வன் புணர்ந்து அங்கு தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததையே செய்தி போல சொல்ல செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.........


அப்பொழுது இந்த நடுநிலை வாதிகள் எந்த முகமூடி போட்டு கொண்டு வருவார்களோ என்பது தெரியவில்லை.

ஆகப்பெரிய உளவியல் ரீதியான உளைச்சலை கொண்டு பிறந்து இருக்கும் குழந்தைகளும் சிறார்களும் இனி எந்த விதமான வாழ்வியலில் இயங்க போகிறார்கள் என்பதை சற்றேனும் நாம் சிந்தித்து பார்க்கின்றோமா????

எனது குழந்தை இரவில் லைட்டை அணைத்தால் கூட என்னை இறுக அனைத்து கொண்டு அஞ்சி நடுங்கும் பொழுது எனது ஈழ குழந்தையின் வலியை பயத்திற்கு யாரை கட்டி அனைத்து கொள்ளும் மரித்த தனது தாயின் உடலையா???????

உலகத்தில் எந்த தேசத்திலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்க,

அந்த தேசத்தின் குடி உரிமை பெற்றவர்களாக இருக்க,

நமது தமிழக புலம் பெயர்ந்தோர் மட்டும் இன்னும் அகதிகளாகவே இருப்பதின் மர்மம் என்ன???

என்பதை இந்த புலி எதிர்ப்பாளர்கள் ஒருமுறையேனும் யோசித்து இருப்பார்களா?????

உலகம் முழுக்க புலம் பெயர்ந்தவர்களின் போராட்டம் உச்சத்தை தொட்டு கொண்டு இருக்க,

தமிழக தமிழனின் ஆதிக்கத்தில், இருக்கும் இடம் கூட தெரியாமல்,

அழுவது, தனக்கு கூட கேட்டு விடாமல் இருந்த அகதி தமிழனை பற்றி இந்த நடுநிலையாளர்கள் ஏதேனும் தெரிந்திருக்குமா????

இலங்கைக்கு 500 கோடி அனுப்ப தெரியும் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும், இங்கு இருக்கும் அகதி தமிழனுக்கு அதில் ஒரு கோடி யை கொடுத்தாலாவது போதுமே என்ற உண்மையையாவது உணர்த்தி இருந்து இருக்கலாமே இந்த மனிதாபிமான காவலர்கள்.??????

நன்றி தோழர் தயாள் :ஆர்குட் குழுமத்தில் எழுதியது

Thursday, May 07, 2009

பெரியாரை கொச்சைப்படுத்திய ஈ.வி.கே.எஸ்

பெரியாரை கொச்சைப்படுத்திய ஈ.வி.கே.எஸ். : மன்னிப்புகேட்க 48 மணி நேர கெடு!


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ‘’பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார்.


உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’என்று பேசினார்.


இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ‘’பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.


அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார்.


இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ‘’கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்’’என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்

Monday, April 20, 2009

பயங்கரம் இன்று நடந்தே விட்டது!! 988 தமிழர்கள் படுகொலை

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: 988 தமிழர்கள் படுகொலை


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.

இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

Thursday, March 05, 2009

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-பெங்களுர்

பெங்களூர் நகரம் 1946 எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு

இந்த படத்திலுள்ள பதிவு எண்னை பாருங்க BAN 555 அப்ப பெங்களுரில் 1000 குறைவான வாகனங்களே இருந்திருக்கின்றன.



மேயொ ஹால் என்றழைக்கப்படும் நீதிமன்ற அலுவலகம்



ஓரியண்டல் பில்டிங்ஸ் என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவன கட்டிடம்






Monday, March 02, 2009

Flash News!!! தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல்’09 ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக பாரளுமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது.

எப்ரல் மாதம் 16,23,30 & மே மாதம் 7, 13 - ஆகிய நாட்களில் தேர்தல் பாரளுமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது.

தமிழக மக்களே மக்கள் விரோத திமுக.காங்கிரஸ் கூட்டணிக்கு சாவு மணி அடிக்க தயாரகுங்கள்

அன்புடன்
அரவிந்தன்

Saturday, February 21, 2009

இன்று சென்னையில் மேலும் ஒரு தமிழர் தீ குளித்தார்..

இன்று சென்னையில் மேலும் ஒரு தமிழர் தீ குளித்தார்..



சென்னையில் இன்று தி.மு.க நடத்திய இளைஞர்கள்சங்கிலியில் சைதை பகுதியை சேர்ந்த திரு. சிவப்பிரகாசம்(60 வயது) " மனித சங்கிலி, அறப்போராட்டம் எல்லாம் பயன் தராது" என்று கூறியபடியே தீ குளித்து உடனடியாக இறந்து போனார்.
இளைஞர் சங்கிலி நிறுத்தப்பட்டது...

Saturday, February 14, 2009

செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள்

செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். வன்னியிலிருந்த தயவுசெய்து வெளியேறாதீர்கள்

வன்னி பிரதேசத்திருந்து செஞ்சிலுவை சங்கத்தினரை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழத்தமிழனுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்கிவரும் சர்வேத அமைப்பான செஞ்சிலுவை அமைப்பினரும் வெளியேற்றப்பட்டால் எறிகணை தாக்குதலில் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் காப்பாற்றமுடியும்

நாம் உடனடியாக செய்யவேண்டியது என்னவெண்றால் கொழும்புவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினருக்கு வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் வைப்பதே.

மின்னஞ்சல்களை colombo.col@icrc.org and review.gva@icrc.org என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்

To,
ICRC ( Intl Red Cross )
Colombo.

Kind attn. Ms. Romanens Sophie.

We all aware that you are doing wonderful job in helping innocent tamilians getting injured / killed by Srilankan army.

We heard that Sri Lanka government is asking you to leave from Vunni. Please don't leave from Vunni area.

Try to help the innocent tamilians. Stay there only.

Its our humble request.

Regards,

Aravindan
India

Monday, February 09, 2009

பெங்களூரில் ஈழத்தமிழர் இனப்படுகொலை எதிர்த்து அறப்போராட்டம்-

உலகத் தமிழ் மக்கள் அரங்கின் இளைஞர் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பிரிவின் சார்பாக, இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலை மற்றும் இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டிக்கும் வண்ணம் வருகிற 15 ஆம் நாள் (15th Feb 2009) ஞாயிற்றுக் கிழமை பெங்களுர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக ஒரு கவன ஈர்ப்பு அறப்போர் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெறும் இந்த அறப்போரில் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழ் மக்கள் அரங்கின் சார்பாக வேண்டுகிறோம்.

உங்களையும் உங்கள் குழுவினரையும் இந்த கவன ஈர்ப்பு நிகழ்விற்கு வருமாறு அழைப்பதுடன் உலகத் தமிழர்களின் உணர்வுகளை உங்கள் ஊடகம் வாயிலாக உலகிற்கு அறியத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.

தங்கள் வருகையையும் மேலான ஆதரவையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

நாம் விரும்பும் மாற்றங்கள் நம்மிடம் இருந்தே துவங்கட்டும்

ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டு உள்ளம் கொதிக்கும் உலக தமிழ் உறவுகளே. நம்மிடம் தேவை ஒரு சொட்டு கண்ணீர் மாத்திரம் அல்ல. நாம் இருக்கும் தளங்களில் இருந்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பெங்களூர் தமிழன் ஒவ்வொருவனும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நம் உணர்வுகளை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம்.

தோழர் முத்துகுமார் ஈழத்தின் போர்நிறுத்தத்திற்காக தான் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் அரைநாளை கொடுக்க முடியாதா?

இதை வாசிக்கும் தோழர்கள் அனைவரும் இந்த செய்தியை பரப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசிமூலமாகவும் இந்த போராட்ட நிகழ்வினை பெங்களூர்வாழ் தமிழனுக்கு தெரியப்படுத்தி போராட்டத்திற்கு வலு சேருங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

கை.அறிவழகன் - 9945232920
வெங்கடேசன் - 9731037427
வேல்முருகன் - 9886841710
தமிழன்பன் - 9980799572

Friday, January 30, 2009

காந்தி செய்தது தியாகமென்றால் முத்துகுமரன் செய்தததும் தியாகமே

காந்தி செய்தது தியாகமென்றால் முத்துகுமரன் செய்தததும் தியாகமே


முத்துகுமாரன் செய்தது முட்டாள் தனம் என்றால் சாகும்வரை உண்ணாவிரதம் என்று மகாத்மா காந்தி இருந்தாரே

காந்தி அவர்கள் கவனயீர்ப்பு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்காலமே ஏனிந்த சாகும் வரை என்ற பில்டப்


தீக்குளிப்பும் ,சாகும் வரை உண்ணாவிரதமும் ஒன்றே என்பதே என் வாதம்

காந்தி செய்தால் (அதுகூட முழுமையாக அல்ல) தியாகம்.முத்துகுமாரன் செய்தால் முட்டாள்தனம் என்று சொல்லும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது

என் வாதமெல்லாம் “தீக்குளித்தல் முட்டாள்தன்மென்றால் சாகும் வரை உண்ணாவிரதமும் முட்டாள் தனம்தான்

Tuesday, January 27, 2009

கிளிநொச்சியில் தமிழாசிரியர் பணி

காதைப் பிளக்கும் குண்டு ஓசைகளுக்கு நடுவில் ஈழத்தில் துணிச்சலாகத் தங்கியிருந்து, பிரபாகரனின் மனைவி மதிவதனி உள்பட பலருக்கு சிறப்புத்தமிழ் கற்றுத் தந்து திரும்பியிருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது அந்த அனுபவங்களைக் கேட்டு அசந்து போனோம் நாம்.

அந்த `தில்'லான பேராசிரியரின் பெயர் மு.செ.குமாரசாமி. தற்போது 70 வயது. நெல்லை மாவட்டம் ராயகிரியைப் பிறப்பிடமாய்க் கொண்ட வித்வான் அருணாசலம் பிள்ளை இவருக்கு பெரியப்பா முறை. முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்கள் எல்லாம் அருணாசலம் பிள்ளையின் மாணவர்கள்தான். அருணாசலம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால், குமாரசாமியும் அங்கேயே தனது படிப்பை முடித்திருக்கிறார். அதன்பின் திராவிட இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு குமாரசாமி என்ற தனது பெயரை `அறிவரசு' என மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்து ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த அறிவரசு, பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் தங்கி வாழ ஆரம்பித்திருக்கிறார். பழ.நெடுமாறனுடன் இவருக்கு நெருக்கம் அதிகம் என்பதால், 1983-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அலை தீவிரமாக வீசியபோது நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோருடன் பேராசிரியர் அறிவரசு பல்வேறு இடங்களுக்குச் சென்று புலிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார். இதனால் புலிகளின் கவனம் இவர்மேல் திரும்ப, அதன்பின் நடந்ததுதான் அவரது ஈழப்பயணம்.


அதுபற்றி மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் கடையம் சென்று பேராசிரியர் அறிவரசுவை அவரது வீட்டில் சந்தித்தோம். மிகவும் எச்சரிக்கையுடன் நம்மிடம் உரையாடினார் அவர்.

``1994-ம் ஆண்டு நான் ஓய்வு பெற்ற பிறகு, விடுதலை மற்றும் தென்செய்தி போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். எனது எழுத்தைப் படித்துப் பார்த்த கொழும்பு நண்பர் ஒருவர் (பெயர் வேண்டாம்) என்னைச் சந்தித்து, `உங்களுக்கு இலங்கையில் ஒரு வேலை இருக்கிறது. வர முடியுமா?' என்று கேட்டார். நான் சம்மதித்தேன். கடந்த 2006 மார்ச் மாதம்பக்கா பாஸ்போர்ட், விசாவுடன் கொழும்புக்கு விமானமேறினேன். அங்கு போன பின்னர்தான் அந்த நண்பர், `கிளிநொச்சியில் தமிழாசிரியர் பணி' என்றார். அப்போது ஈழத்தில் சண்டை எதுவுமின்றி அமைதி நிலவிய நேரம். எனவே நானும் ஒப்புக் கொண்டேன்.
புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சிக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்குள்ள நிதி மேலாண்மை கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தக் கல்லூரியைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். உடைந்த ஓட்டுக் கூரை மற்றும் மணல் தரையுடன் ஏதோ 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடம் போல இருந்தது அது.

அங்கே நாற்பது மாணவ, மாணவியர் நிதி மேலாண்மையும், முப்பது பேர் தமிழும் படித்து வந்தார்கள். கல்லூரிப் பொறுப்பாளர் (அவரும் புலிதான்) என்னிடம், `அய்யா....இங்கு அட்வான்ஸ் லெவல் (ப்ளஸ் டூ) முடித்த முப்பது பேரையும் தமிழில் வல்லுனர்களாக்கி தமிழ் ஆசிரியர்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு' என்றார். `இங்கு பேராசிரியர்கள் வேறு யாருமில்லையா?' என்று கேட்டபோது, `யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களை வரவழைப்பது சிரமம்' என்றார்.


இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஈழத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிங்கள அரசால் நடத்தப்படுபவைதான். ஆனால், தமிழாசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டால் புது ஆசிரியர்களை சிங்கள அரசு நியமிப்பதில்லை. எனவே, எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்கள் கிடையாது. மொழியை அழித்தால் இனத்தை அழித்து விடலாம் என்பதற்காக சிங்கள அரசு செய்யும் கபடவேலை அது. அதைப் புரிந்து கொண்ட புலிகள், தமிழைக் காப்பாற்றுவதில் உறுதியாயிருக்கிறார்கள். அதற்காக `தனித் தமிழ் இயக்கம்' ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே என்னைத் தமிழ் கற்பிக்க அவர்கள் அழைத்திருந்தார்கள்.


மாணவர்கள் முப்பது பேருக்கான பாடத்திட்டத்தை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்' என்று பொறுப்பாளர் கூறிவிட்டதால் நானும் இரண்டு ஆண்டுகளுக்கான சிலபஸை வகுத்து பாடங்களை நடத்தத் தொடங்கினேன். அப்போது போர் நிறுத்தம் அமலில் இருந்ததால், முதலாண்டு எந்தப் பிரச்னையுமில்லாமல் போனது. நான் தமிழ் சொல்லிக்கொடுத்த விதம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் ஊர்மக்களும் கூட சிறுசிறு குழுக்களாய்ப் பிரிந்து என்னிடம் பிழையின்றி தமிழ் எழுத கற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். நான் ஈழம் போய்ச் சேர்ந்த மூன்றாவது மாதத்தில் ஒருநாள் தலைவரைப் (பிரபாகரனை) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது அவரிடம் விரிவாய் பேச முடியவில்லை.


நான் தலைவரைப் பார்த்து விட்டு வந்த சில நாட்களிலேயே கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலைப் பொறுப்பாளர் செல்வி என்னைச் சந்தித்து `நாளை முதல் ஒரு முக்கிய பிரமுகர் உங்களிடம் தமிழ் கற்க வருகிறார்!' என்று சொன்னார். மறுநாள் நான் செஞ்சோலைக்குப் போனேன். அங்கே பதினைந்து பேர் கொண்ட மகளிர் குழு ஒன்று எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பதினைந்து பேரில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் ஒருவர். பெண்களோடு பெண்களாய் சாதாரணமாய் அமர்ந்திருந்த மதிவதனி, யாழ் பல்கலைக் கழகத்தில் படித்தவர்தான். ஆனால், தமிழைப் பிழையின்றி எழுத வேண்டுமென்பதற்காகவே என்னிடம் பாடம் படிக்க வந்திருந்தார். நான் பாடம் நடத்தும்போது மதிவதனி மிகக் கவனமாகப் பாடம் கேட்பார். இலக்கியத்திலிருந்து எதையாவது எழுதச் சொன்னால் வேகவேகமாய் எழுதி முதல் ஆளாய் என்னிடம் காட்ட வருவார். ஒரு சின்னக் குழந்தையின் ஆர்வம் அவரிடம் இருந்தது. மூன்று மாத காலம் அவர் என்னிடம் படித்தார்'' என்ற பேராசிரியர் அறிவரசு, சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.


``2007 ஜூலை மாதத்திற்குப் பின், ஈழத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. ராஜபக்ஷே அதிபரானதும் தன்னிச்சையாய் போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்றார். அதன்பின் இலங்கை விமானங்களின் குண்டுவீச்சுகள் தொடங்கின. பள்ளியில் நான் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது திடீரென, `அய்யா....வண்டு சுத்துது!' (ஆளில்லா வேவு விமானம்) என்று மாணவ, மாணவிகள் கத்துவார்கள். அந்த வேவு விமானம் வந்துபோன பத்து நிமிட நேரத்தில் போர் விமானங்கள் வந்து குண்டு வீசும். அவ்வளவுதான். அனைவரும் பதுங்கு குழிக்குள் ஓடி பதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். இதற்காகவே பள்ளிகளில் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். சில நேரம் பள்ளிகளும் குண்டு வீச்சுக்கு இரையாகும். இதனால் தமிழர்கள் புலம்பெயர்வது போல் பள்ளிகளும் புலம் பெயரும் அவலம் அங்கே தொடங்கியது.


நான் பணியாற்றிய கல்லூரி வளாகத்தில் திடீரென ஓர் ஓரமாய் 1500 பேர் இருந்து படிப்பார்கள். கேட்டால் `பக்கத்து ஊர்ப் பள்ளியில் குண்டு போட்டு விட்டார்கள். அதனால்தான் பள்ளி இடம் பெயர்ந்துள்ளது' என்பார்கள். எனக்குக் கண்ணீர் வரும். என் தமிழ்ச்சாதிக்கு நிம்மதியான கல்வி கூட கிடைக்கவில்லையே என்று ஆத்திரம் ஆத்திரமாய் வரும். ஒருமுறை விமானக் குண்டுவீச்சில் மதிவதனியின் தோழியான செல்வி பலியானது எனது நெஞ்சைப் பதற வைத்த சம்பவம். நான் ஈழத்திலிருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் குண்டு வீசி கொல்லப்பட்டார்.


27.11.07-ம் தேதி மாவீரர் வாரம் தொடங்கியது. மக்கள் அனைவரும் சாரைசாரையாக மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றினார். அவர் வானொலி நிலையத்திலிருந்துதான் உரையாற்றுகிறார் என்று எண்ணிய சிங்கள விமானப்படை, வானொலி நிலையத்தின்மீது குண்டு வீசியது. அதில் நிலைய பொறுப்பாளர் இசைவெளி செம்பியன் பலியானார். வானொலி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.


அங்கே போர் தீவிரம் அடைந்தநிலையில் புலிகள் என்னிடம், `அண்ணா இங்கு நிலைமை சரியில்லை. உங்கள் உயிர் முக்கியம். நீங்கள் தமிழகம் செல்லுங்கள். தமிழ் ஈழம் கிடைக்கும் போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம்' என்று சொல்லி என்னை அனுப்ப ஆயத்தமானார்கள். நான் மறுபடியும் தலைவரைப் பார்க்க வேண்டுமென்று சொன்னேன். `சரி' என்ற பொறுப்பாளர், கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் திடீரென என்னை தலைவரிடம் அழைத்துச் சென்றார். பலத்த சோதனைக்குப் பின்னர் ஓர் அறையினுள் நான் அனுமதிக்கப்பட்டேன்.

என்ன ஆச்சரியம்? தலைவர் கூப்பிய கரங்களுடன் வாசல் வரை வந்து, எனக்கு வணக்கம் சொல்லி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். ஏறத்தாழ ஒரு மணி நேரம், அவருடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. `நீங்கள் ஈழம் வந்து எவ்வளவு நாளாகிறது?' என்று கேட்டார். `இரண்டு ஆண்டுகள்' என்றதும் அவரே ஆச்சரியப்பட்டுப் போனார். நான் தமிழ்ப்பேராசிரியர் என்பதால் போர் பற்றி எதுவும் பேசாமல் தமிழ் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசினார். சுதந்திர ஈழத்தில் தமிழ் வளர்க்கவும், காக்கவும் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாய்ச் சொன்னார். `தமிழ் ஈழம் எப்போது மலரும்?' என்று நான் கேட்டதற்கு, `அது உலகச் சூழலைப் பொறுத்தது!' என்று மட்டும் ஒரே வரியில் பதிலளித்தார்.


இந்தத் தலைவன் இருக்கும் காலத்திலேயே தனி ஈழம் மலர்ந்தால்தான் உண்டு என்கிற எண்ணமே அவரைச் சந்தித்து விட்டு வரும்போது எனக்கு ஏற்பட்டது. இப்போது கிளிநொச்சி வீழ்ந்ததைக் கேட்டு என் உள்ளம் துடித்துப் போனது. என்னிடம் படித்த மாணவியர் பலர் ஆசிரியைகளாய் நியமிக்கப்பட்ட செய்தியை எனக்குக் கடிதம் மூலம் அவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்��
�ள். (கடிதங்களைக் காட்டுகிறார்) இப்போது அவர்களெல்லாரும் உயிரோடு இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. மூன்று லட்சம் மக்களோடு முப்பதாயிரம் மாணவ, மாணவியரும் காட்டுக்குள் போய் விட்டார்கள். இதன் மூலம் ஒரு படிப்பறிவற்ற சமுதாயம் உருவாகும் அவலம் இருக்கிறது. அதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணமாய் இருக்கலாம். மொத்தத்தில் தமிழினம் அழிகிறது. அதை தாய்த் தமிழன் வேடிக்கை பார்க்கிறான். சரித்திரம் நம்மை மன்னிக்காது'' என்றபோது, பேராசிரியர் அறிவரசுவின் கண்களில் கண்ணீர்.
பேராசிரியர் அறிவரசு கிளிநொச்சியில் இரண்டு ஆண்டு காலம் தங்கியிருந்த போது சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம். ``தங்குமிடம், சாப்பாடு, போக்குவரத்து என மற்ற வசதிகள் அனைத்தையும் அவர்கள் செய்து தந்திருந்தார்கள். மற்றபடி நானும் சம்பளம் கேட்கவில்லை. அவர்களும் சம்பளம் தரவில்லை'' என்ற அறிவரசு, ``எனது தமிழ்ச் சேவையைப் பாராட்டி `கேடில் விழுச்செல்வம் கல்வி' என்ற குறள் பதித்த நினைவுப்பரிசை பிரபாகரன் எனக்குக் கொடுத்தார். ஆனால் அதைக் கொண்டு சென்றால் கொழும்பு விமான நிலையத்தில் பிரச்னை வரும் என்ற புலிகள், `காலாகாலத்தில் அது கண்டிப்பாக உங்களை வந்து சேரும்' என்று கூறினர்'' என முடித்தார். அப்போது அவரது முகத்தில் பெருமை பூத்திருந்தது.



தமிழ் காக்கும் புலிகள்!

ஈழத்தில் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2008-ம் ஆண்டு மார்ச் வரையிலான இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பேராசிரியர் அறிவரசு, அங்கே புலிகள் தமிழ் வளர்க்கும் விதம் பற்றி சில வித்தியாசமான தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
``புலிகள் தயாரித்து வைத்திருக்கும் ஒரு கையேட்டில் சுமார் பத்தாயிரம் சுத்த தமிழ்ப் பெயர்கள் இருக்கும். அந்தக் கையேடு, எல்லா மகப்பேறு மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் அந்தக் கையேட்டில் தங்களுக்குப் பிடித்தமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்குச் சூட்டி பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த பிறப்புச் சான்றிதழை அப்படியே `தமிழீழ வைப்பகத்தில்' (வங்கியில்) கொண்டு போய்க் காட்டினால் அக்குழந்தையின் பெயரில் ஆயிரம் ரூபாய் வைப்பு (முதலீடு) செய்யப்படுகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பதினெட்டு வயதானதும் வட்டியோடு அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்குத் `தமிழ் அமுதம் திட்டம்' என்று பெயர். தவிர, இளைஞன் ஒருவன் போராளிகள் இயக்கத்தில் சேரும்போது அவனது பெயர் மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ரவியை அன்புச்செல்வன் என்றும், ஆலானை தமிழன்பன் என்றும் மாற்றியிருக்கிறார்கள். போராளிக்கு சாதி, மதமிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
ஈழத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழ்ப் பெயர் இருந்தால் மட்டும்தான் அனுமதி கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல அங்கே ஷுவல்லர்ஸ், சலூன் எல்லாம் கிடையாது. `நகையகம்', `அழககம்'தான். உலகில் அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று யுனெஸ்கோ ஆய்வு தெரிவிக்கிறது. யுனெஸ்கோவினர் ஈழத்தைப் போய்ப் பார்த்தால்அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழ் அழிந்தாலும் ஈழத்தில் தமிழ் வாழும் என்று ஒரே குரலில் சொல்கிறார்கள் ஈழத்தமிழர்கள்'' என்றார் அறிவரசு

நன்றி: ஓர்க்குட்