Friday, January 21, 2005

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையா..???

இரு வாரங்களுக்குமுன் எங்கள் நிறுவனம் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு என்ற கிராமத்திற்க்கு பெங்களூரில் இருந்து சென்றோம்.கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை வழியாக சென்றபோது வழியெங்கும் நான் பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.கிராமங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் வெறுங்கால்களில் காலனி இல்லாமலே நெடுஞ்சாலைகளில் பள்ளிகக்கு சென்றவண்ணமிருந்தனர்.நாமெல்லாம் வீட்டிற்க்குள்ளே செருப்புபோட்டுகொண்டு நடமாடுகிறோம்....அந்த கப்பி சாலைகளில் நல்ல வெய்யிலில் நடப்பதென்பது சாதாரண காரியமில்லை. முடிந்தால் நாம் சில குக்கிராமங்களில் உள்ள அரசாங்கபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது நல்ல காலணி வாங்கிகொடுக்கலாம்..யாராவது முன்வந்து உதவ தயாரா....

Thursday, January 20, 2005

எட்டரை மணின்னா...???

நான் ஒரு அழைப்பு மையத்தில் பணிபுரிவதால் சில நாட்கள் இரவு பணிக்குச் செல்ல வேண்டியிக்கும்.நேற்று இரவு வேலைக்குச்சென்று காலையில் வீட்ற்க்கு வந்தேன்.நான் வரும்போது என்மகள் பள்ளிச்செல்ல தயாராகிகொண்ட்டிருந்தாள்.அப்பா இன்று உங்களுக்கு ஆபிஸ் லீவா என்று கேட்டாள்? இல்லையம்மா இரவு மீண்டும் செல்ல வேண்டும் என்றேன்.எப்போ என்றாள்?எட்டரை மணிக்கு என்றேன். எட்டரைன்னா எந்த சீரியல் வரும் போது என்றாள்..செவ்வாய எட்டரை மணிக்கு எந்த சீரியல் என்று சிற்றவிற்க்கு எட்டவில்லை. உஷாராக சன் செய்திக்கு பின்னர் என்று சமாளித்தேன்...அப்ப்பாவுக்கு இதுகூட தெரியல எட்டரை மணிக்கு சுப்பர் டெண் பாடல்கள் என்று சொல்லி சிரிக்கிறாள்....

Wednesday, January 19, 2005

Tuesday, January 11, 2005

Relief Material Distribution in Cuddalore

107-0747_IMG
Originally uploaded by Aravindan.

கடலூர் அருகே உள்ள சிங்காரதோப்பு என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்