Monday, December 31, 2012

நிறைவான 2012!


2012 ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய போகும் இந்த தருணத்தில் 2012-ன் சில முக்கிய தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.

2012 ஆரம்பம் மகிழ்ச்சியாக ஆரம்பித்தது. 2012-ல் புதிய மேலாளரின் கீழ் பணி செய்ய வேண்டி வந்தது. எப்படியிருப்பாரோ என்று பல சிந்தனைகளுடன் இர்ந்த நான் அவரை சந்தித்தபின் இப்படிப்பட்டவருடன் வேலை செய்தால் பல புதிய உச்சங்களை தொடலாம் என்று உணர்ந்தேன்.

பொதுவாக எனக்கு யாரவது தூரோகம் செய்தால் அப்படியே மறந்துவிட்டு விடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியிருக்க முடியவில்லை.சிலருக்கு தக்க தருணத்தில் பாடம் புகட்ட வேண்டியதாயிற்று,

பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம்தான் விமானம் பயணம் சாத்தியமாயிற்று..அலுவலக வேலையாக கோவா சென்று வந்தேன்.

2013 -ல் வெளிநாடு பயணம் நிச்சயம்.

கூடுமான வரையில் சிரத்தையுடன் அலுவலக்த்தில் வேலை செய்தேன்.

2012-ன் மனநிறைந்த செயல் என்றால் என் மனைவியின் உறவு பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததுதான்.பெற்றோர் இல்லாத அப்பெண்ணுக்கு அண்ணன் நிலையிலிருந்து நல்ல பொருத்தமான மாப்பிள்ளை,அனைத்து திருமண வேலைகளுக்கு பொறுப்பேற்றுகொண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைத்தேன்.இந்த நேரத்தில் அனைத்து திருமண வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும் மகளுக்கும் நன்றி சொல்ல க்டமைப்பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்கும்போது என்னை பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் என் அக்காமார் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

2012 ஒரளவுக்கு சேமிக்க முடிந்ததில் என்னைவிட என் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட்து,வருட இறுதியில் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்ட்து போன்ற நிகழ்வுகள் மன நிறைவை கொடுத்த்து.


புதியதாக பெரிய பொருட்கள் எதையும் வாங்க வில்லையென்றாலும் வலுவான பொருளாதார அடித்தளத்துடன் 2013 எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!




Wednesday, October 10, 2012

பாஸ்டன் ஸ்ரீராம் அழைக்கிறார்..வாருங்கள் கூடி பேசி கொண்டாடுவோம்!!!!

சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர் சந்திப்பு – அனைவரும் வாரீர்

வருகிற சனிக்கிழமை (13-10-12) அன்று மாலை 5 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்பு நடக்க இருக்கிறது. பதிவர்கள், பதிவுகளை படிப்பவர்கள் மற்றும் இணையத்தில் தமிழில் புழங்குபவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு அமைப்பாளர்கள் என்று யாரும் கிடையாது. வருகின்ற அனைவருமே அமைப்பாளர்கள் தான். இடம், நேரம் போன்றவற்றில் சந்தேகம் இருப்பின் தெளிவு பெறுவதற்காக சில தொடர்பு எண்களை கீழே கொடுத்துள்ளோம்

பாஸ்டன் ஸ்ரீராம் (சிறப்பு விருந்தினர்) - 9444639018 
பாலபாரதி – 9940203132
புதுகை அப்துல்லா – 9381377888
ஜாக்கி சேகர் –9840229629
மணிஜி – 9340089989
அரவிந்தன் 9940554501

தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அனைவரின் வருகைக்கும் முன்கூட்டிய நன்றிகள்.

Wednesday, September 12, 2012

சுஜாதா நினைவுகள் குறித்து--வானொலியில் நான்




அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் மாணவர்களால் நடத்தப்படும் Its different என்ற பண்பலை வானொலியில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நினைவாக 2008 வருடம் ஒளிப்பரப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி வழியாக தெரிவித்த சுஜாதா குறித்து என பார்வையினை கீழ்காணும் சுட்டியில் கேட்கலாம்.15-ஆம் நிமிடத்தில் என் பேச்சு ஆரம்பமாகிறது.

http://www.itsdiff.com/files/Mar52008-SujathaSpecial-www-itsdiff-com-Part3of3.mp3

Monday, August 27, 2012

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((

சென்ற வெள்ளியிரவு சென்னையிலிருந்து பெங்களுருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.வண்டி வேலூரை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தேன்..தீடீரென வண்டியின் வேகம் தடைப்பட்டது.எதோ முனகல் சத்தம் கேட்டது போல் தோன்றியது.உடனே கண் விழித்து பார்த்தேன்.
எதிரே  பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது தெரிந்தது.

வண்டியை ஓட்டுநர் நிறுத்தியவுடன் வண்டியிலிருந்த பெரும்பாலனோர் இறங்க தொடங்கினர். அப்பொழுது ஒருவர் வண்டியின் படிகள் வழி இறங்க நேரமாகும் என்பதால் ஒட்டுநர் இருக்கையில் வழியாக வேகமாக குதித்தார்.

இறங்கியவுடன்,அந்த இடம் முழுவதும் கோழிகள் அடிப்பட்டும்,சில இறந்தும் காணப்பட்டன.கோழிகள் அபயகுரல் மனதை என்னவோ செய்தது.உடனடியாக வண்டியை தூக்கி நிறுத்தி வண்டி ஓட்டுநரை வெளியே இழத்து தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம்.நல்ல வேளையாக பெரிய காயம் எதுவுமில்லை.

அதற்குள் ஒருவா 108-க்கு தொலைப்பேசிவிட்டார்.வண்டி வரும் வரை காத்திருந்தோம். அப்பொழுது யாரோ அடிப்பட்டு முனகும் சத்தம் கேட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து ஒரு 20 அடி தள்ளி ஒருவர் அடிப்பட்டு கிடந்தது தெரிந்தது.வண்டியின் கூரை மேல் உட்கார்ந்து வந்தவராம்.

நெடுஞ்சாலை விபத்து மீட்பு வண்டி உடனடியாக வந்தது.

வண்டியின் கூண்டிலிருந்து வெளியே வந்த கோழிகள் அங்கேயே (தப்பித்து செல்லாமல்) மேய்ந்து கொண்டிருந்தன.

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((