Sunday, August 19, 2007

பொது இடங்களில் காதலிக்கலாமா...கூடாதா..?

இன்றிரவு 9.00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நீயா. நானா நிகழ்ச்சியில் பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் "பொது இடங்களில் காதலிக்கலாம்" அதில் தவறில்லை என்ற அணியில் நான் பேசியிருக்கிறேன்

சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன..எந்த அளவிற்க்கு தணிக்கை செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகும் என்று தெரியவில்லை..

நாமும் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்.

4 comments:

G.Ragavan said...

:) இதை PDA என்பார்கள். அதாவது Public Display of Affection. இதுல பாருங்க இந்தியாவுல செய்யக்கூடாதது PDV, PDU...அதாவது Public Display of Violence and Public Display of Urination...PDA கூடாதுங்குறவங்க அதையும் மறுத்தா`நல்லாயிருக்கும்.

Anonymous said...

கூடாது

அரவிந்தன் said...

அனானியாரே...

எதாவது காரணம் சொல்லுங்க..

அன்புடன்
அரவிந்தன்

Anonymous said...

முதல் பகுதி பார்த்தேன். முடிந்தவரை தூய தமிழில் கருத்துக்களை தெரிவித்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அப்படியே அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மின்னஞ்சல் தரமுடியுமா?

நிகழ்ச்சியை கண்டபொழுது எழுந்த வருத்தம் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

நிகழ்ச்சியினிடையே உண்மை என்னவென்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று படம்பிடித்துக் காட்டினார்களே. அதில் காட்டப்பட்ட எத்தனை பேரிடம் இந்த படப்பிடிப்பிற்கு சம்மதம் வாங்கினார்கள். காட்சியில் அவர்கள் விலகி ஓடுவதைப் பார்த்தால் இது அத்து மீறி படம்பிடிக்கப்பட்டது போல் உள்ளது. வாங்காவிட்டால் அவர்களின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட தொலைக்காட்சிக்கு என்ன உரிமை உள்ளது. என்னுடைய கருத்து அந்தக் காட்சியில் தொடர்புடையவர்களின் முகத்தினை மறைத்திருக்க வேண்டும் என்பதே.

இதுவே மேலைநாடுகள் என்றால் சம்பத்தப்பட்டவர்கள் வழக்கு தொடுத்து ஒருவழி செய்திருப்பார்கள்.