பெங்களுர் புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்.
என் மனைவியின் தம்பியும் என் சின்ன மாமனாரின் மகனுமாகிய அஷ்வின் என்ற 16 வயது சிறுவன் சென்ற வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்துவிட்டு உடன் படிக்கும் மாணவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உடன் படிக்கும் மாணவன் கௌரவ் உடன், கெளரவ் வண்டியோட்ட (ஹோண்டா டியோ) பின்னால் அமர்ந்து சென்றான் அஷ்வின்.
கோரமங்களா 80 அடிச்சாலையில் (கடவுச்சீட்டு அலுவலகம் எதிரில்) முன்னால் சென்ற வண்டியொன்றை முந்தி செல்ல முயன்ற போது வேகமாக பின்னால் வந்து அரசு பேருந்து இவர்கள் சென்ற வண்டியை இடித்துதள்ளியது..அஷ்வின் பின் தலையில் பேருந்து பலமாக மோதியது.பலமாக அடிப்பட்ட அஷ்வின் கிழே சாலையில் விழுந்தான் வண்டியோட்டிய கெளரவ் மீதும் பேருந்தின் இருச்சக்கரமும் ஏறியது.கெள்ரவ் போட்டிருந்த தலைக்கவசமும் நசுங்கியது.
சம்பவம் நடந்த இடத்திலேயே இரு சிறார்களும் மரணமடைந்தனர்.அஷ்வின் அலைப்பேசி மூலம் அவன் தந்தைக்கு சம்பவம் நடந்த இடத்திலிருந்த பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.
உரிய மருத்துவ பரிசோதனைக்களுக்குப்பிறது அஷ்வின் உடல் வெள்ளியிரவு 11:15 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சனிக்கிழமை மதியம் பசவன்குடி மயானத்தில் மின்சாரம் மூலம் அஷ்வின் உடல் எரியூட்டப்பட்டது.
அவன் படிக்கும் பள்ளியிலிருந்து பெரும்பாலன மாணவ மாணவிகள் ஒற்றை ரோசாப்பூவுடன் அஞ்சலி செலுத்தினர்.
அஷ்வினுக்கும் எனக்குமான உறவு:-
96 வருடம் என் மனைவியை பெண் பார்க்கச்சென்றபோது ஒரு வயது குழ்ந்தையாக இருந்த அஷ்வினை “இவரும் உங்க மச்சான் தான்” என்று அறிமுகப்படுத்தினார்கள்.
பார்த்த முதல்நாளிலிருந்தே அஷ்வின் எனக்கு மிகவும் பிடித்துப்போனான்
நான் பார்த்து அவன் வளர்ந்தான் பள்ளிக்குபோக ஆரம்பித்தான். எனக்கு பெண் குழந்த பிறந்த பின் அவனை மாப்பிள்ளை என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்தேன்.
”மாமா என்னை அப்படி கூப்பிடாதிங்க” நானும் அமுதாவும் (என் மகள்) நல்ல பிரண்ட்ஸ் மாதிரி இருக்கோம் அப்படியே இருப்போம் என்பான்..நானும் பதிலுக்கு “உனக்கு யார்டா என் பொண்ண கொடுக்க்போறாங்க.எது எப்படியிருந்தாலும் நீ எனக்கு மாப்பிள்ளை தாண்டா என்று கலாய்ப்பேன்.
அவன் வளர வளர நாங்கள் நல்ல நண்பர்களானோம்.பல சமயங்களில் அவன் எனக்கு ஆசானாகவும் இருந்தான்.
களையான சிரித்த முகம்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை.சன் தொலைக்காட்சி பார்த்தே தமிழ் எழுத படிக்க கற்றுகொண்டான்.
எண் முப்பதை நான் சிலசமயங்களில் நுப்பது என்று உச்சரிக்கும்போதெல்லாம் உடனடியாக் திருத்துவான்,
எனக்கு தமிழ் கிறுக்கன் என்று பெயரும் வைத்தான்
.போன வாரம் ஞாயிற்று கிழமை இரவு அவனும் நானும் பிட்சா சாப்பிட்டோம்.அடுத்த வீக் எண்ட் பார்க்கலாம் மாமா என்று கையசத்துவிட்டு சென்றான்.
மரணங்கள் எனக்கு புதிதல்ல.சின்ன வயதிலேயே தந்தையை இழந்தேன் திருமணமான சில மாதங்களின் என் தாயை இழந்தேன்.அதிகம் நேசித்த தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை இழந்தேன்.அப்போதெல்லாம் வந்த சோகத்தினை இந்த சோகம் மீளவே முடியாத சோகமாக இருக்கிறது.
யாரை நொந்துகொள்வது. :((
வேகமாக கவனமின்றி வண்டியோட்டிய பேருந்து ஓட்டுநரையா அல்லது 16 வயதில் வண்டி வாங்கி கொடுத்த பெற்றோர்களையா..

25 comments:
:-(
:( வருந்துகிறேன்
ஆழ்ந்த வருத்தங்கள் அரவிந்தன்.
வருத்தமாயிருக்கு. :(
ஆழ்ந்த வருத்தங்கள் :(
ஆழ்ந்த இரங்கல்கள் :((
வருத்தமாக உள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் கொடூரமானவை. ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள் :((
பெங்களூரு சாலைகள் மிகவும் கொடியவை. காவு சாலைகள்.
வருந்துகிறேன் அரவிந்த்..!
:( so sorry to hear this.accidents always :(
:(
அரவிந்தன்,உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன், மிகுந்த வருத்தங்களுடன்
எனக்கு ஏதோதோ ஞாபகம் வந்து தொலைகிறது
துக்கத்தில் பங்கேற்கிறேன் அரவிந்தன்.
உங்கள்
பாஸ்டன் ஸ்ரீராம்
Ennaku enn sogathai eppadi express panurathunu theriya villai :( ;( I still remember those days he came to our house and played with me calling akka and all.. I really feel sorry for him :((. Sindhuja
நெஞ்சை கரையவைத்த வடுவாகிப்போன பதிவு.
ஆழ்ந்த வருத்தங்கள்
கோரமங்களா பாஸ்போர்ட் ஆபிஸ் திருப்பத்தில் அடிக்கடி இதை போல விபத்துக்கள் ஏற்படுகின்றன. காவல்துறை இனியாவது அந்த திருப்பத்தில் வேக தடை அமைக்க வேண்டும்.
Very tragic indeed. அஷ்வினுக்கும் எனக்குமான உறவு:- படிக்கும்போதே என் கண்களில் கண்ணீர். I sympathise with you sir. :-(
Very distressing to hear this :( நீங்களும் குடும்பத்தாரும் இதிலிருந்து மெல்ல மீண்டு வர பெருமாளை வேண்டிக்கறேன்!
ஒரு விபத்தில்(http://balaji_ammu.blogspot.com/2009/04/540.html) எனக்கு மிகவும் நெருக்கமான அக்கா மகனின் இழப்பைப் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன்: காலம் மட்டுமே இது போன்ற பெரும் துக்கத்தை மெல்ல மெல்ல ஆற்ற வல்லது என்பது கூட, பெற்ற தாய் தந்தைக்கு பொருந்தாது :(

வாழ வேண்டிய வயது.. மனது கலங்குகிறது.. உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
அஷ்வினுடைய ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.....
மிக வருத்தமாய் இருக்கு அரவிந்தன். அவர்கள் பெற்றோர் மனம் எப்படி ஆறுதல் அடையும் !!
விதியின் கொடுமை
காலனின் கல்நெஞ்சம்.
காலனின் கொடுமை.
ஆழ்ந்த இரங்கல்கள்!
விதியின் கொடுமை
காலனின் கல்நெஞ்சம்.
Post a Comment