Sunday, September 18, 2011

இந்து+ஹிந்தி=இந்தியா

பெங்களுரில் எங்கள் வீடு அருகில் உள்ள உயர் மத்தியதர வகுப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர்.

கொண்டாட்டத்தின் இறுதி நாளன்று,விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள ஏரியில் கரைக்க முடிவுசெய்தனர்.உயர் மத்திய வர்க்கமல்லவா நடந்தெல்லாம் ஊர்வலமாக செல்லமுடியாதே.அதனால் விட்டுக்கு ஒரு கார் பிள்ளையாரின் பின் ஊர்வலமாக அணிவகுத்து செல்ல முடிவெடுத்தனர்.

ஏறத்தாழ 30 கார்களில் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு நடனமாடி பாட்டெல்லாம் பாட விருப்பமில்லை போலிருக்கு..வண்டியுனுள் அமர்ந்து செல்வதால் ஆடி பாட வாய்ப்பில்லை.பிள்ளையார் குறித்து பாடவும் தெரியவில்லை.தீடீரென முதல் வண்டியில் சென்றவர் பாரத் மாதாகீ ஜெ என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்.உடனே மற்றொருவர் வந்தே மாதரம் என்றார்.அடுத்தவர் மகாதமா காந்திக்கு ஜே என்றார்.தொடர்ந்து கோஷங்கள் தேசபக்தி குறித்து எழுப்பட்டன.

ஆவலுடன் நான் எதிர்பார்த்த அன்னா அசாரேக்கு ஜே என்ற கோஷம் எழுப்படவில்லை .

இந்து ஹிந்தியா=பாரதம் போலும்

3 comments:

Bruno said...

//ஆவலுடன் நான் எதிர்பார்த்த அன்னா அசாரேக்கு ஜே என்ற கோஷம் எழுப்படவில்லை .// :) :)

சின்னப் பையன் said...

//ஏறத்தாழ 30 கார்களில் ஊர்வலத்தில் //
இதெல்லாம் ரொம்ப டூ மச்... அப்புறம் நாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லவேகூடாது.

சின்னப் பையன் said...

ஏறத்தாழ 30 கார்களில் ஊர்வலத்தில் // இதெல்லாம் ரொம்ப டூ மச். அப்புறம் நாம அரசியல்வாதிகளை குற்றம் சொல்லவே கூடாது.