Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு தமிழியியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து அரவிந்தன்

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!

வலைப்பக்கத்தில் என்னவெல்லாம் எழுதலாம் என்று ஒரு பெண்மணி கேட்டார்”நீங்க கடைக்கு சென்று காய்கறி வாங்குவதை பற்றியும் எழுதலாம் என்றேன்".

"என்னங்க கிண்டல் செய்யறிங்களா" என்றார்.உடனே துளசி டீச்சர் எழுதிய காய்கறி வாங்கிய அனுபவ பதிவினை காட்டினேன் ஆச்சர்யமடைந்தார்.




வலைப்பதிவுக்கு நல்ல பெயர் தேர்வு செய்ய நம்மையே பலர் ஆலோசனை கேட்டனர்.காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”.

25 comments:

ராம்ஜி_யாஹூ said...

தமிழ் வலைப் பதிவுகளின் மிகப் பெரிய நன்மைகள்

வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு செலவு (பண செலவு) இன்றி பொழுதை போக்க உதவுதல்.
(குறிப்பாக தனியாக இருக்கும் ஆண்கள், குடும்ப தலைவிகளுக்கு)

இதனால் இந்தியாவிற்கு வெளி நாடு வாழ் தமிழர்களிடம் இருந்து சிறிய அளவில் அந்நிய செலவாணி ஈட்டி தரல்,

உள்நாட்டு அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு, உணவகங்களில், ஒய்வு அரை அருகில் இருந்து சக ஊழியர்கள் குறித்து புறம் பேசுதலை தவிர்த்து, வெட்டி பொழுதை இணையத்தில் செலவிட உதவுகிறது.

சுய தொழில் புரியும் தொழில் அதிபர்களுக்கு, ஐயோ வாடிக்கையாளரே வர வில்லையே, சரக்கு விற்க வில்லையே, கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற கவலைகளை சிறிது நேரம்/நாட்கள் மறக்கடியாக்க் செய்ய இணையம்/வலைப்பூக்கள் உதவுகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வலைப்பதிவுக்கு நல்ல பெயர் தேர்வு செய்ய நம்மையே பலர் ஆலோசனை கேட்டனர்.காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”. //

Thanks Friend.

www.sirippupolice.blogspot.com

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நன்று

வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks aravindan

Unknown said...

அரவிந்தன் அண்ணே .. பதிவு போடுறது இல்லியா ..
அந்த சிரிப்பு போலிஸ் ரமேஷ் நம்ம தோஸ்துதான் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அரவிந்தன் அண்ணே .. பதிவு போடுறது இல்லியா ..அந்த சிரிப்பு போலிஸ் ரமேஷ் நம்ம தோஸ்துதான் .. //

நன்றி செந்தில் அண்ணே.

Jey said...

///காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”.//

பேருதான் சிரிப்பு போலீசு, மத்தபடி அவரு ரொம்ப சீரியசு(!!),

என்னோட முதல் பதிவ போடுறதுக்கு மொன்னாடி இவருக்கு அனுப்பி கருத்து கேட்டுதான் பதிவ போட்டேன். நெரய விஷயங்கள சொல்லி தந்த பதிவுலக சீனியர்.

அரவிந்தன் சார், சுருக்கமா நல்லா எழுதீருக்கீங்க.

Jey said...

http://pattikattaan.blogspot.com

dheva said...

என் தம்பி புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருச்சா....! தம்பி சிரிப்பு போலிஸ் வாழ்க....உன் புகழ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி தேவா அண்ணன்
நன்றி jey

Karthick Chidambaram said...

Vaalthukkal. Ungal muyarchchikkum sirippu policirkkaana vilambarathirkkum.

மணிஜி said...

வாழ்த்துக்கள் அரவிந்தன்

வெங்கட் said...

அட நம்ம ரமேஷு..,

போச்சுடா.., இனிமே ராத்திரி 2 மணிக்கு
போன் பண்ணி..
இந்த Blog பார்த்தீங்களா..?
நான் Famous ஆயிட்டேனான்னு..?
கேள்வி மேல கேள்வி கேட்டு
நம்மள டார்ச்சர் பண்ணுவாரே..

ஆங்.. போனை Out of Order-ல
வெச்சிட வேண்டியது தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ thanks Karthick Chidambaram

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆங்.. போனை Out of Order-ல வெச்சிட வேண்டியது தான்.. //

அப்ப சேலத்துக்கு கள்ள train ஏறியாவது வந்து படிக்க சொல்லுவோம்ல. ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நான் மட்டும்தான் கேப்பேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் ரமேஷ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி thanks

துளசி கோபால் said...

அட ராமா......

ஆஹா......என்னைவச்சுக் காமெடிகீமெடி ஒன்னும் பண்ணலையே?

இங்கே பார்த்துட்டு 'திக்' ன்னு ஆகிருச்சு:-))))))

அரவிந்தன் said...

அக்கா உங்களை போய் நான் காமெடி செய்வேனா..

பல மத்திய வயது பெண்கள் உங்கள் பதிவினை ஆர்வத்துடன் பார்த்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

அரவிந்தன்

துளசி கோபால் said...

ஆஹா.....

அப்ப நம்ம 'புகழ்' திக்கெட்டும் 'தீ' போலப் பரவுதா:-)))))

நன்றிப்பா.

Chitra said...

Super! :-)

வல்லிசிம்ஹன் said...

நல்லா உதாரணம் சொல்லி இருக்கீங்க அரவிந்தன். கணினில எழுதறத்துக்குத் துளசியைப் போல யாரும்,
இயல்பா, சமூக
சம்பந்தப்பட்ட
விஷயங்களை எழுதுவது சிரமமே.பெண்கள் கட்டாயம் ஆவலுடன் படிப்பார்கள்.
''சிரிப்புப் போலீஸ்'' இதுவரை படித்ததில்லை. இனி படிக்க வேண்டியதுதான். மிக மிக நன்றி அரவிந்தன்.

ILLUMINATI said...

//ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நான் மட்டும்தான் கேப்பேன் //

இல்லைனாலும்,உம்ம பேச்ச நீரு மட்டும் தான்யா கேக்கணும். :)

சாந்தி மாரியப்பன் said...

// கணினில எழுதறத்துக்குத் துளசியைப் போல யாரும்,இயல்பா, சமூக
சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுதுவது சிரமமே//

ரிப்பீட்ட்ட்டே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்லைனாலும்,உம்ம பேச்ச நீரு மட்டும் தான்யா கேக்கணும்//
ஆமா பாஸ்

@ நன்றி வல்லிசிம்ஹன் கண்டிப்பா வாங்க