வெவ்வேறு நாட்களில், பல்வேறான மனநிலையில் என்னுடைய டீவிட்களை பதிவாக இங்கு இடுகிறேன்.
என்னோடCEO-க்கு மடல்அனுப்பும்போது போது “ஹாய்...” ஆனால் மகளின் வகுப்பு ஆசிரியருக்கு“Respected Madam" என்று விடுப்பு கடிதம்எழுதவேண்டியுள்ளது
20000 மக்களின் மரணத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் முன்னாள் தலைவர் ஹவாய் தீவில் ஹாய்யாக வாழ்கிறான்.பிடிக்க துப்பில்ல
பெங்களுரில் பெரிய அங்காடி வளாகங்களில் சைக்கிள் நிறுத்த அனுமதியில்லை.
எத்துனை ஓட்டுக்கள் வேண்டுமானலும் ஒரே அலைப்பேசியிலிருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு போடலாமாம்.கள்ள ஓட்டினை காசுக்காக அனுமத்திக்கும் ஊடகங்கள் :(
அலுவலகத் தோழர் “ஃபோரம் மால் சென்று டைம் பாஸ் செய்யலாம் என்று அழைத்தார்.வார நாட்களில் அலுவலகம் தவிர வேறங்கும் டைம் பாஸ் செய்வதில்லை என்றேன்.
கேரள நிருபர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி பிரமருக்கு புரியவில்லை.பின்னர் அதே கேள்வியை ஆங்கிலத்தில் வேறொருவர் சொல்ல பிரமருக்கு புரிந்தது .
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு முள்வேலிக்குள் வாழ்க்கை..காந்திய வழியில்போராட வேண்டும் என்ற மகாத்மாக்கள் இப்ப என்ன சொல்வார்கள்.?
மின்சாரமில்லை வீட்டில்.மொட்டை மாடியில் லாப்ட்டாப்பிலிருந்து டீவிட்..வாழ்க்கை சுகமாக இருக்கிறது.
கனிமொழி குஷ்புவுக்கு திமுகவின் கொள்கைகளை எடுத்துரைத்தபின் திமுகவில் சேர குஷ்பு முடிவெடுத்தார்
நளினி நான்கு வருடமாக செல் பேசி பயன்படுத்தினாராம். ஒரு வேளை பிரியங்கா பிரியமா கொடுத்திருப்பாரோ
முகம் தெரியாத வாடிக்கையாளரை நலமா என்று விசாரிக்கிறார்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவனை பார்த்து வணக்கம் சொல்ல யோசிக்கிறார்கள்
வானம் இருண்டு வருகிறது..குளிர் காற்று வீசுகிறது..எங்காவது மயில் தோகை விரித்து ஆடலாம்
ஜோ வென் மழை பெய்கிறது...ஜன்னல் வழியே இரசித்து பாக்கிறேன்.கையில் காபி கோப்பை பக்கத்தில் மனைவி குழந்தை தோழியின் வீட்டில்
No comments:
Post a Comment