Saturday, June 05, 2010

பதிவர் சந்தன முல்லை அவர்களுக்கு சில கேள்விகள்.?

சந்தன முல்லை,

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html இந்த கட்டுரையிலும் மங்களுர் சிவாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

வினவின் கட்டுரை தங்கள் பார்வைக்கு வந்த பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அப்படியிருக்கையில் மங்களுர் சிவா,லதானந்த மற்றும் அபி அப்பா போன்றவர்கள் குறித்தான அவதூறுகள் குறித்து எதுவும் தங்களுக்கு தவறாக தோன்றவில்லையா.? அல்லது என்னைப்பற்றி நரசிம் தவறாக எழுதியதைப்போல் நாமும் வேறு சிலரைப்போல் போகிற போக்கில் எதாவது சொல்லிவிட்டு போகலாம் என்ற அலட்சியமா.?

மங்களுர் சிவா வின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிப்பதேன்.?

நரசிம் எழுதிய புனைவும் கார்க்கியின் பின்னுட்டமும் அனைவருக்கும் மிகுந்த கோபத்தினை ஏறபடுத்தியது.நேரில் பார்க்கும்போது ஒரு அறை விடலாம் என்றுகூட தோன்றியது.

அதே நேரத்தில் திட்டமிட்டே தெரிந்தே சிலரைப்பற்றி அவதூறுகளை அள்ளிதெளித்த வினவின் கட்டுரைக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை நீங்கள் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.


ஆக,உங்களுக்கும் மற்றதோழர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நரசிம்மின் புனைவால் உங்களுக்கு ஏற்ப்பட்ட கோபத்தினை நாங்கள் முழுவதும் புரிந்துகொள்வதுபோல் நீங்களும் பாதிக்கப்பட்ட மற்ற பதிவர்களின் ஆதங்கத்தையும் துயரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பபதாகவே எனக்கு தோன்றுகிறது.

அரவிந்தன்
பெங்களுர்

10 comments:

சே.ராஜப்ரியன் said...

இதோ வந்துட்டாரு மேப் போடா

பெட்ரோவ்ஸ்கி said...

சரியாகச் சொன்னீர்கள் அரவிந்தன்.

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல கேள்வி.
ஆனா நீங்க ஒன்ன தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. வினவு அப்டின்னா என்ன அர்த்தம்? கேளு அப்டின்னு தானே அர்த்தம்? அவங்க கேட்க மட்டும் தான் செய்வாங்க, பதில் எல்லாம் சொல்ல மாட்டாங்க.
ச.மு பத்தி நான் ஒன்னும் சொல்ல விரும்பலை.

அத்திரி said...

நல்லாத்தான் கேட்டிருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// ஜோசப் பால்ராஜ் said...
நல்ல கேள்வி.
ஆனா நீங்க ஒன்ன தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. வினவு அப்டின்னா என்ன அர்த்தம்? கேளு அப்டின்னு தானே அர்த்தம்? அவங்க கேட்க மட்டும் தான் செய்வாங்க, பதில் எல்லாம் சொல்ல மாட்டாங்க.
ச.மு பத்தி நான் ஒன்னும் சொல்ல விரும்பலை. //

டபுள் ரிப்பீட்...

Anonymous said...

தம்பி ஜோ,

அந்தப் பதிவே பைத்தியக்காரன் எழுதியது என்கிறபோது வினவை நோக்கி ஏன் வினவுகிறீர்கள்?

Raghu said...

//மங்களுர் சிவா வின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிப்பதேன்.?//

இன்னுமா இதுக்கு ப‌தில் கிடைக்கும்னு ந‌ம்புறீங்க‌.....

kkk said...

FEW years ago, the elected Govt in TamilNadu was dismissed after a woman MLA appeared before TV cameras stating that ruling party MLAs misbehaved with her in the assembly and as a proof she showed her torn blouse
Almost many people in India were stunned and over reacted to this show and at last the elected govt was dismissed.
As i personally know about Abiappa for more than 30 years ,honestly i can say that Abiappa is not a person as described in Vinavu.
Anyway i should thank Vinavu to have exposed its original character of always analysing issues in half baked manner.

Jackiesekar said...

போச்சு...நீங்களும் ஆணாதிக்க திமிர் பட்டியலில் வந்துட்டிங்களா?

Unknown said...

விஷயம் சற்றே ஆறியிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவா ?
:) :) :) :)