Friday, January 30, 2009

காந்தி செய்தது தியாகமென்றால் முத்துகுமரன் செய்தததும் தியாகமே

காந்தி செய்தது தியாகமென்றால் முத்துகுமரன் செய்தததும் தியாகமே


முத்துகுமாரன் செய்தது முட்டாள் தனம் என்றால் சாகும்வரை உண்ணாவிரதம் என்று மகாத்மா காந்தி இருந்தாரே

காந்தி அவர்கள் கவனயீர்ப்பு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்காலமே ஏனிந்த சாகும் வரை என்ற பில்டப்


தீக்குளிப்பும் ,சாகும் வரை உண்ணாவிரதமும் ஒன்றே என்பதே என் வாதம்

காந்தி செய்தால் (அதுகூட முழுமையாக அல்ல) தியாகம்.முத்துகுமாரன் செய்தால் முட்டாள்தனம் என்று சொல்லும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது

என் வாதமெல்லாம் “தீக்குளித்தல் முட்டாள்தன்மென்றால் சாகும் வரை உண்ணாவிரதமும் முட்டாள் தனம்தான்

8 comments:

Athisha said...

சாகும் வரை உண்ணாவிரதமிருந்தா சாகறதுக்குள்ள காப்பாத்தீருவானுங்கனு நம்பிக்கையாவது இருக்கும்...

இது மருதமலைக்கு மொட்டை போடற மாதிரிதான்.. எப்படி இருந்தாலும் முடி வளர்ந்துரும்ல...

Anonymous said...

தயவு செய்தி காந்தியோடெல்லாம் முத்துக்குமரனை ஒப்பிட்டு முத்துகுமரனை இழிவுபடுத்தாதீர்கள்.

காந்தி செய்தது எல்லாம் வெறும் வெத்து வேட்டு. இரண்டாம் உலகப்போர் என்ற ஒன்று வரவில்லையென்றால், அதில் பிரிட்டிஷார் பல்லாயிரக்கணக்காண படையினரை இழக்கவில்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது.

காந்தி உண்ணாவிரதம் இருந்த போதெல்லாம் அவரை சிறை செய்து கல்கட்டா பிர்லா ஹவுசில் வைத்துவிட்டு , போராடும் பொதுஜனத்தின் முதுகெலும்பை முறித்தது பிரிட்டிஷ் படை. இவர் போராட்டம் எல்லாம் பிர்லா ஹவுசில் மட்டும்தான் நடக்கும், வேறெங்கும் இருக்காது. எந்த கொடுஞ்சிறையில் அவர் அடைபட்டார்? வ.உ.சி அளவுக்கோ அல்லது சுப்ரமண்ய சிவா அளவுக்கோ அவர் சிறைக்கொடுமைகளை அனுபவித்தாரா? இல்லையே. வர்ணாசிரம பேதத்தை ஆதரித்தவர், தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக சட்ட மேதை அம்பேத்காரையே சரிசமமாக உட்காரவிடாமல் பேசியவர் அவர் தீண்டாமையை ஒழிக்கிறேன் என பேசியது எல்லாம் வெறும் நாடகம் தான்.

முத்துக்குமார் தானே களப்பலியாகி தன் அறிக்கையை இன்று தமிழ் கூறும் நல்லுகம் வரை விரியச் செய்த தியாகி. அவரது தீக்குளிப்பில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அவரது நோக்கத்தை நிறைவேற்ற வேறு வழியேதுமில்லாமையால் அந்த பாதையை அவர் தேர்தெடுத்துள்ளார் என நினைக்கும் போது அவரது தியாகத்தை வியக்காதிருக்க முடியவில்லை .

காந்தி ஒரு போராட்டக்காரனே அல்ல. இங்கிலாந்து பேரரசு அவரது போராட்டத்திற்கு எல்லாம் பயந்த ஒன்றா என்ன? அதற்கு பயந்து சுதந்திரம் கொடுக்க?
நேதாஜி தான் உண்மையான தேசப்பிதா.

தன் குடும்பத்து சொத்தையெல்லாம் இழந்துவிட்டேன் என அழுத நேருவுக்கு பிரதமர் பதவி கொடுக்கவேண்டும் என்பதற்காக அவரைவிட திறமைவாய்ந்த முகமது அலி ஜின்னாவிற்கு பாகிஸ்தானை பிரித்துக் கொடுக்க சம்மதித்தது, வல்லபாய் படேலை உள்துறை அமைச்சராக்கியது போன்றவையே காந்தியின் சாதனைகள்.

அக்னி பார்வை said...

போராடுபவர்கள் மரணத்தை துச்சமனெ மதிப்பவர்கள், எல்லருக்கும் மரணம் நிச்சயுமும் தான். எதிரி திருந்துவத்ற்க்கு நேரம் வேண்டும் காந்தி உண்ணவிரதம் இருக்கும் பொழுது அவர் சாக நிறய நேரம் வேண்டும் அத்ற்ற்குள் ஒரு மனிதன் துடிப்பதை அத்த்னை நாள் பார்ப்பவருக்கு சிந்திக்க தோன்றும், தீக்குளிக்கும் போது சிந்திப்பதற்க்கான் நேரம் குறைவு.. இதே முத்துகுமார் சாகும் வரை உண்ணவிரதம் இருந்திருக்கலாம். எனக்கு தெரிந்து சாகும் வர உண்ணாவிரத்ம் இருந்தவர்கள் இலங்கயில் திலிபன், அந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு.. அவர்கள் பின் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.. காந்தி செய்தார் எனபதற்க்காக முட்டாள் தனத்தை ஆத்ரிக்க முடியாதல்லவா? முத்துகுமாரி குடும்பத்திற்க்கு எவ்வள்வு பணம் கொடுத்தாலும் அவருக்கு ஈடாகுமா? அவரை உங்கள் சொந்த சகோதரராக நினைத்து பாருங்கள்.... சரி அவர் மரணத்திற்க்கு பின் என்ன நடக்கும்

Anonymous said...

முத்துகுமாரின் இழப்பால் தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

முத்துகுமார் உயிர்துறப்பு தியாகமே. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் யாருக்காக அவர் உயிர் துறந்திருக்கிறார்? அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகள் முழுமையானதா?

இன்று இலங்கை இராணுவத்தின் தாக்குதல் யார் மீது தொடுக்கப்படுவதாக் உலக நாடுகள் நினைக்கின்றது? ஏன் இந்தியா இலங்கையை தாக்குதலை நிறுத்துமாறு நிர்ப்பந்திக்க முடியவில்லை? முத்துகுமார் சிந்தித்திருப்பார் என்றால் இன்று அவரது இழப்பினால் வாடும் நிலை அவரது சுற்றத்திற்கும், நட்பிற்கும் வந்திருக்காது.

ஏன், விடுதலை புலிகளால் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை? ஏன் திருமா, வைகோ, இராமதாசு, நெடுமாறன் போன்றோர் இலங்கை, இந்திய அரசுகளை கண்டிக்கும்போது விடுதலை புலிகளையும் அவர்களது பயங்கரவாத நிலைக்கும் கண்டிக்கவில்லை? முத்துகுமார் சிந்திருந்தாரா?

இங்கே நீங்களும், மற்றும் சில நண்பர்களும் சத்தியாகிரக போராட்டத்தை, தீக்குளிப்பு போராட்டத்தோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தீர்கள். காந்தி தனது அரசியல் நிலைப்பாடு மிகவும் தெளிவான முறையில் ஆங்கிலேய அரசாங்கத்திடம் எடுத்துரைக்கும் வல்லமை பெற்றிருந்தார். வட்டமேஜை மாநாட்டுக்கு அரையாடையில் சென்று பங்குபெறும் அளவிற்கு அவருடைய ஆளுமை இருந்தது. சுபாஷ் சந்திர போஸின் ஜப்பானின் கைப்பாவையாக, ஜப்பானின் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய நிலை (அந்தமானில் ஜப்பான் சுபாஷின் ஆளுநரையே கைது செய்தது) ஒருபோதும் காந்தியார் ஏற்படுத்திக் கொண்டதில்லை.

சுயராச்சியம் என்று அவர் முழங்கியது மட்டுமில்லை... அதனை தெளிவாக ஆங்கிலேயருக்கு விளக்கி, தொடர்ந்து அமைதியான முறையில் சுயராச்சியம் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது அவரால். கறுப்பினத் தலைவர்களில் ஒருவரான மார்டின்லூதர் கிங்-கினால் அரசியல் குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காந்தி. அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படாமல் போனதற்க்காக காலம் கடந்து வருத்தப்பட்டது நோபல் பரிசு கமிட்டி.

சத்தியாகிரகம் / அஹிம்சை என்பது விடுதலை போராட்டத்தின் முழு வடிவம். யாருக்காக நாம் போராடுகிறோமோ அந்த மக்களை கேடயமாக வைத்துக் கொண்டு போரிலே பலியிடாமல், தனது உரிமைக்காக உரக்க குரல் கொடுக்கும் அஹிம்சை முறையை பற்றி அறியாமல் ‘முட்டாள்தனம்’ என்று பிதற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது.

காந்தி காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல பல கோடி மக்களின் தலைவராகவே தன்னை அஹிம்சை போரில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் என்றுமே தலைவருக்கான தனி அந்தஸ்தை கோரியதில்லை. ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அந்த அந்தஸ்தை மறுக்க முடியாத அளவிற்கு அவருக்கு தொண்டர் பலம் இருந்தது. அது குண்டர் பலமில்லை.

விடுதலை புலிகள் தொடங்கிய விடுதலைப் போர் எங்கு தவறியது? தங்களது தோழமை இயக்கங்களை அழித்தொழித்தது எதனால்? நட்புக் கரம் நீட்டிய இந்தியாவின் மண்ணிலேயே ராஜீவ் காந்தியை கொன்றது எதனால்? முத்துகுமாரின் கோரிக்கைகளில் ஒன்று இராஜீவ் காந்தியின் கொலையின் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது. இதுவரை விடுதலை புலிகள் வெளிப்படையாக ‘நாங்கள் இராஜீவ் காந்தியை கொலை செய்யவில்லை’ என்று மறுத்திருக்கிறார்களா? முத்துகுமார் அதையும் சிந்திக்காமல் போய்விட்டார்.

தமிழினத்திற்காக உயிரிழக்கும் துணிவு பெற்றிருந்த முத்துகுமார் அதே தமிழினத்தை தங்களது அதிகார வெறிக்காக பலி கொடுக்கும் விடுதலை புலிகளை கண்டிக்காமல் விட்டதுதான் இந்த துயரத்தின் துயரம்.

முத்துகுமாரின் கோரிக்கைகளில் தலையாயனதாக இருக்க வேண்டியது, விடுதலை புலிகளை அரசியல் தீர்விற்கு வலியுறுத்தும் கோரிக்கைதான்.

கருணாவின் பேட்டியை படியுங்கள். ஆனந்த சங்கரி, பிள்ளையான், பத்மநாபா, வரதராஜன், சந்திரஹாசன் போன்றோரு தமிழரே. அவர்களும் தமிழர்களுக்காக போராடத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் எடுத்த முத்துகுமாரின் முடிவு தியாகம்தான். ஆனால் விவேகமானதல்ல.

சாந்தி நேசக்கரம் said...

சொன்னவர் அக்கினிப்பார்வை::::

எனக்கு தெரிந்து சாகும் வர உண்ணாவிரத்ம் இருந்தவர்கள் இலங்கயில் திலிபன், அந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு.. அவர்கள் பின் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன..
************************************
அக்கினிப்பார்வைக்கு எனது கருத்து....

ஈழத்திற்கு இந்திய இராணுவம் வந்திறங்கிச் சிலவாரங்களில் தியாகி திலீபன் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார். இந்திய 5கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்திய அரசோ இந்திய அரசு சார்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்த டிக்சித்தோ எங்கள் திலீபனைச் சாகவிட்டதேயன்றி எதையும் நிறைவேற்றவில்லை.

தியாகி திலீபனுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தின் கண்முன் இந்தியாவிடம் நீதி கேட்டு மட்டக்களப்பில் அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்து உயிரைத் துறந்தார். ஆயினும் அறப்போரில் திலீபனை அடுத்து அன்னை பூபதியையும் இழந்தோம் அதன் பின் இந்திய இராணுவத்தின் கொரூரம் மிக்க குணத்தால் பத்தாயிரம் வரையிலான தமிழர்களின் உயிரைக் கொடுத்தது எமது தேசம். பல ஆயிரம் அங்கவீனர்களை தாயை தந்தையை இழந்த பிள்ளைகளை உறவுகளை இழக்காத வீடில்லையென்ற நிலையில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாவாசம் இப்போதும் மறக்க முடியாத துயர்கள்.

முத்துக்குமாரன் எங்களுக்காய் செத்துப்போன துயர் இதயத்தில் வலிக்கிறது. அந்த நேர்குற்றிய பார்வையைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோவொன்று உறுத்தலாக மனசைக் குடைகிறது.

எனது மகனைப்போலவே அவனது அம்மாவும் இருந்திருப்பார்.எனது மகனில் எனக்கு உள்ள அத்தனை கனவுகளும் அந்த அம்மாவுக்கும் அந்த அப்பாவுக்கும் அவனது உறவுகளுக்கம் இருந்திருக்கும்.என்ற எண்ணம்...இதயம் கனக்கிறது.

முத்துக்குமாருக்காக.....

சூரியனே எங்கள் சுடர் விளக்கே !
ஆரியரின் படையெங்கள்
அன்னை மண் தின்ன
அக்கினிப் பிழம்புக்குள்
உன்னை ஆகுதியாக்கிய - எங்கள்
அன்புத் தோழனே....!

முத்துக்குமரா
முடியவில்லைத் தோழனே - நீ
செத்துக் கிடக்க உன்
சித்திர விரல்கள் தீட்டிய மடலைத்
தொடத்தானும் இயலவில்லை.

நாட்குறித்துப் புறப்பட்டு
நொடி குறித்துப்
பகைகுகையில் போய்
வெடிக்கும் கரும்புலிகள் துணிவுனக்கு.

தீச்சூட்டில் வெந்த தோல்
வலிமாறாமல் மருத்துவம் தேடும்
எங்களுக்காய்
தீயில் உன்னைத் தீய்த்துச்
சுருண்ட கணத்திலும்
ஈழத்தான் உயிர் காக்க
உறுதி குன்றாப் பலம் படைத்த
பகலவனே !

அந்தப் பகற்பொழுதை
என்றென்றும் அழியாப்
பகலாக்கிய
அக்கினிப் பிறப்பே எம்
ஆன்மத்துடிப்பே !
எங்கேயடா உன் இருப்பிடம்.....?

பிறப்பின் பின்னோர் பிறப்புண்டாம்
நல்லோர் மீண்டும் பிறப்பதற்காய்
காலக் கருவறைகள் காத்திருக்கிறது.
உனது பிறப்பிற்காய்
ஈழக்கருப்பைகள் தவமிருக்கின்றன
தம்பியே வருக மீண்டும்
எமக்கு வல்லமை தருக.

சென்று வருக நாம்
வென்று வருவோமென்று
வழியனுப்ப முடியவில்லைத் தோழா
எனினும் விழிகள்
மூடியுனக்காய் வேண்டுகிறோம்.
வருக மீண்டும்
எமக்கு வல்லமை தருக.

வற்றா மாரிப் பொழுதாய்
முட்டி வழியும்
கண்ணீர்த் துளிகளால்
துடிக்கிறது உன்
தோழமைப் பலங்கள் - அவர்கள்
பலம் பெற வல்லமை கொடு
இவ்வையமே இறைஞ்சட்டும்.
இளையோர் பலம் என்பதன் பொருள்
உணரட்டும்.

30.01.09.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

கருணாவின் பேட்டியை படியுங்கள். ஆனந்த சங்கரி, பிள்ளையான், பத்மநாபா, வரதராஜன், சந்திரஹாசன் போன்றோரு தமிழரே. அவர்களும் தமிழர்களுக்காக போராடத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் எடுத்த முத்துகுமாரின் முடிவு தியாகம்தான். ஆனால் விவேகமானதல்ல.
**********************************
பெயரில்லாத நண்பரே !

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த மனிதர்கள் தமிழர்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.மக்களின் பணத்தில் மக்களைப் பலியிட்டு தங்கள் பதவிகளைக் காக்கவே இந்தக் கண்ணா மூச்சி காட்டுகிறார்கள்.

கருணா புலிகளால் விலக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா ? கருணா தனது துரோகங்கள் அம்பலமாவதை அறிந்து தான் வளர்த்த பிள்ளைகளையே விசம் வைத்துக் கொன்ற கதை தன்னிடம் பயிற்சி பெற்று தான் வளர்த்த பெண்போராளிகளையே வல்லுறவு பூண்ட கதையென கருணாவின் கதை நிறையவே.
அண்மையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவை ஏன் கருணா கொன்றான் ? தனது காதலியுடனான சல்லாபத்தை கண்டார் அதை பத்திரிகையில் சொல்லப்போகிறார் என்ற பயத்தில்தான்.

பிள்ளையான் என்பவன் கருணாவின் னால் துரத்தப்பட்டு பின் கருணாவால் கருணாவின் அமைப்பில் சேர்க்கப்பட்டவன்.

வரதராசப்பெருமாள் இவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.

சங்கரி இவர் பிணங்களுக்கு பணம் அனுப்பி வாக்குக் கேட்கும் வள்ளல். கடிதங்களால் தன்னை நினைவுபடுத்துவதைத்தவிர வேறெதையும் செய்யவில்லை. தற்போது முக்கூட்டு முன்னணியொன்றுடன் தன்னை இணைத்து கிளிநொச்சி எம்பியாகும் கனவில் மகிந்த நிறுவனத்தில் தவமிருக்கின்றார்.

முத்துக்குமாரனை இந்த விளங்காப்பயல்களுடன் ஒப்பிடாதீர்கள்.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

விடுதலை புலிகள் தொடங்கிய விடுதலைப் போர் எங்கு தவறியது? தங்களது தோழமை இயக்கங்களை அழித்தொழித்தது எதனால்? நட்புக் கரம் நீட்டிய இந்தியாவின் மண்ணிலேயே ராஜீவ் காந்தியை கொன்றது எதனால்?
**************************************

அந்த ஒரு உயிர்தானா உயிர் ?
அந்த இராசீவ் காந்தியின் படைகளால் ஈழத்தில் செத்துப்போன உயிர்களெல்லாம் உயிரில்லையா ?

எனது தம்பிக்காகப் பால்மா எடுத்துவரப்போன சித்தப்பாவைக் கொன்ற இந்தியப்படைகளை எப்படி மறக்க ? பிறந்து 3மாதமேயான எனது சித்தப்பாவின் கடைசி மகன் இப்போது 22வயதாகிவிட்டான். தந்தையின் முகம் அவனுக்குத் தெரியாது. 4வருடத்திருமண வாழ்வில் தனது வாழ்வையிழந்து விதவையான எனது சித்தியின் கண்ணீர் இன்ற 22வருடங்களின் பின்னாலும் காயாமல் கரிக்கிறது.இதற்கெல்லாம் சோனியா அம்மாவால் எதைத் திருப்பித்தர முடியும் ?

நண்பர்களே உங்கள் இராசீவ் காந்திபோல எங்கள் உறவுகளின் இறப்பையும் கணக்கிடுங்கள்.

எங்கள் ஊரில் இந்திய இராணுவம் செய்த வதையின் நினைவில் சில வரிகள் கீழே....

அன்றழுத குரல் எந்தன் அயல் வீட்டின் குரலல்லவா...

'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....
இன்றும் நினைவகலா அழுகையது
கோடி சுற்றி ஓடியோடிக்
கும்பிட்ட தெய்வமேதும்
அவள் துயரில்
ஒரு குரல் கூட எழப்பவில்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
உடல் துளாவி உடுத்தியிருந்த
உடை கிழித்து
மரண வாசலில் துடிதுடிக்க
மாறி மாறி அவள் உடல் கழிபட்ட
துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை....

ஊர் எல்லைவரையிலுமாய் அந்தக்குரல்
இப்பவும் தான் நினைவிருக்கு.
அவள் குரல்தான் அது
புரிந்திருந்தும் காப்பாற்ற
ஒரு புழுவும் அசையவில்லை....

இருபதுக்கும் மேலானோர்
ஒருத்தியின் உடல் உழுத
உண்மை புரியாது இன்னும்
ஆமிகளை நேசிக்கும்படியான
வார்த்தைப் பூச்சுக்கள்....
எப்படித்தான் ஜீரணிக்க....?
அன்றழுத குரல் என்
அயல்வீட்டின் குரலல்லவா...!

மூச்சிழந்து போனபின்னும்
மும்பைக்காரச் சிப்பாயின்
கோரம் அடங்காமல்
மீண்டும்....மீண்டும்.....
அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி
அவள் உடலில்....

வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின்
வாயெங்கும் வீணி வடிந்தபடி....
படுகிழவியென்றாலும் பயவாயில்லை
பாவியரின் கண்ணெல்லாம் அதுவா....
வல்லுறவு கொண்ட துயர்
வடிக்கவா முடியும் வார்த்தைக்குள்......

(இந்தியப்படைகளின் நாசத்தில் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நினைவு இது)

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

விடுதலை புலிகள் தொடங்கிய விடுதலைப் போர் எங்கு தவறியது? தங்களது தோழமை இயக்கங்களை அழித்தொழித்தது எதனால்? நட்புக் கரம் நீட்டிய இந்தியாவின் மண்ணிலேயே ராஜீவ் காந்தியை கொன்றது எதனால்?
**************************************

அந்த ஒரு உயிர்தானா உயிர் ?
அந்த இராசீவ் காந்தியின் படைகளால் ஈழத்தில் செத்துப்போன உயிர்களெல்லாம் உயிரில்லையா ?

எனது தம்பிக்காகப் பால்மா எடுத்துவரப்போன சித்தப்பாவைக் கொன்ற இந்தியப்படைகளை எப்படி மறக்க ? பிறந்து 3மாதமேயான எனது சித்தப்பாவின் கடைசி மகன் இப்போது 22வயதாகிவிட்டான். தந்தையின் முகம் அவனுக்குத் தெரியாது. 4வருடத்திருமண வாழ்வில் தனது வாழ்வையிழந்து விதவையான எனது சித்தியின் கண்ணீர் இன்ற 22வருடங்களின் பின்னாலும் காயாமல் கரிக்கிறது.இதற்கெல்லாம் சோனியா அம்மாவால் எதைத் திருப்பித்தர முடியும் ?

நண்பர்களே உங்கள் இராசீவ் காந்திபோல எங்கள் உறவுகளின் இறப்பையும் கணக்கிடுங்கள்.

எங்கள் ஊரில் இந்திய இராணுவம் செய்த வதையின் நினைவில் சில வரிகள் கீழே....

அன்றழுத குரல் எந்தன் அயல் வீட்டின் குரலல்லவா...

'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....
இன்றும் நினைவகலா அழுகையது
கோடி சுற்றி ஓடியோடிக்
கும்பிட்ட தெய்வமேதும்
அவள் துயரில்
ஒரு குரல் கூட எழப்பவில்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
உடல் துளாவி உடுத்தியிருந்த
உடை கிழித்து
மரண வாசலில் துடிதுடிக்க
மாறி மாறி அவள் உடல் கழிபட்ட
துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை....

ஊர் எல்லைவரையிலுமாய் அந்தக்குரல்
இப்பவும் தான் நினைவிருக்கு.
அவள் குரல்தான் அது
புரிந்திருந்தும் காப்பாற்ற
ஒரு புழுவும் அசையவில்லை....

இருபதுக்கும் மேலானோர்
ஒருத்தியின் உடல் உழுத
உண்மை புரியாது இன்னும்
ஆமிகளை நேசிக்கும்படியான
வார்த்தைப் பூச்சுக்கள்....
எப்படித்தான் ஜீரணிக்க....?
அன்றழுத குரல் என்
அயல்வீட்டின் குரலல்லவா...!

மூச்சிழந்து போனபின்னும்
மும்பைக்காரச் சிப்பாயின்
கோரம் அடங்காமல்
மீண்டும்....மீண்டும்.....
அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி
அவள் உடலில்....

வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின்
வாயெங்கும் வீணி வடிந்தபடி....
படுகிழவியென்றாலும் பயவாயில்லை
பாவியரின் கண்ணெல்லாம் அதுவா....
வல்லுறவு கொண்ட துயர்
வடிக்கவா முடியும் வார்த்தைக்குள்......

(இந்தியப்படைகளின் நாசத்தில் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நினைவு இது)

சாந்தி