Sunday, July 08, 2007

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி

வணக்கம்.. என்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…

என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..

1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.

2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..

4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்கள் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..

எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..

5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..

6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.
அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..

உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.

7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உலகம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..

கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.

8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.

2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..

அன்புடன்
அரவிந்தன்

3 comments:

நானானி said...

அரவிந்தன்!
சுவையான எட்டு!!
டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியதும் உங்கள் முகம் எப்படி
இருந்த்து? ஒரு தந்தையான பின் உங்கள் தந்தையின் தவிப்பு புரிந்ததா?
உங்களுக்கு அமைந்த மதியூக மனைவியோடும் குழந்தைகளோடும்
மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்!!!

Narain Rajagopalan said...

இத்தோடு, ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நீங்கள் மொட்டை மாடியில் ஆடும் ஒரு 'ஸ்பெஷல் வீடு கட்டுதல்' பற்றியும் உங்கள் வாசகர்களுக்கு சொல்லியிருக்கலாம் :)

Jayaradha said...

அரவிந்தன்,
உங்களிடம் திறமை இருக்கிறது. கால் செண்டரில் வேலை செய்து கொண்டே சொந்தமாக ஏதாவது செய்யலாம்...

முயற்சி செய்யுங்கள்!

நன்றி,
ஜெயராதா.