Thursday, January 23, 2014

புத்தக கண்காட்சியில் அடியேன்!

சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்றுதான் செல்ல முடிந்தது.மதியம் 12;45 மணிக்கு சென்றுவிட்டேன்.இரண்டு மணிக்குத்தான் உள்ளே விட்டார்கள்.

காத்திருந்த நேரத்தில் சற்று கண்ணயர்ந்தால் நல்ல உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தேன். இளம் எழுத்தாளர்களின் வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஏற்கனவே முடிவு செய்திருந்தபடியால் குழப்பமில்லாமல் வாங்க முடிந்தது.

முதல் போணி உயிர்மை பதிப்பகம்.

அராஜகம் ஆயிரம்-அராத்து
தற்கொலை குறுங்கதைகளே எங்கும் கண்ணில் பட்டது.அப்புறம் செல்வி அவர்கள் தேடி எடுத்து கொடுத்தார்கள்.

ராஜிவ் காந்தி நெடுஞ்சாலை- விநாயக முருகன்

அப்படியே டிஸ்கவரி பேலஸ்

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் -வா.மணிகண்டன் 

தொள்ளாயிரம் பிரதிகளுக்கு விற்பனையாம் கடையில் சொன்னாங்க..வாழ்த்துகள் மணிகண்டன்

அடுத்து
திருவள்ளுர் பெரியார் மானுட ஒன்றியம்

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் -அ.ஞா.பேரறிவாளன்.

அற்புதம் அம்மாள் அவர்களை பார்க்க முடியவில்லை.கடையில் சாக்லேட் வைத்திருந்தார்கள். ”பிபி பேஷண்ட்டுகளுக்காக வச்சிருகிங்களா” என்று கேட்டார் ஒருவர்...இல்லிங்க நேத்து 15 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாச்சே அதான் இனிப்பு கொடுக்கிறோம் என்றார் கடையிலிருந்த தம்பி..விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையுடன் அடுத்து சென்ற இடம்

அகநாழிகை புத்தகநிலையம்
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் -கவிஞர க.ரா
டாலர் தேசத்து அனுபவங்கள் -அய்யா நல்லகண்ணு
அடை மழை- ராமலஷ்மி
தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?-- கோவை ஞானி

அடுத்தது தமிழினி

நம்ம யுவகிருஷ்னா சிபாரிசு செய்த ஊழிக்காலம் -தமிழ்க் கவி

கடையில் கொஞ்சமாவது விவரம் தெரிஞ்ச பசங்களை வேலைக்கு அமர்த்துங்க. ஈழ எழுத்தாளர் புத்தகம் என்றால் “சார் கண்ணதாசன் புத்தகமா என்கிறார்? என்ன கொடும:(

அப்படியே எந்தவித எதிர்ப்பார்ப்புல் இல்லாமல் விகடன் பதிப்பகம்

நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த நம்ம திருப்பூர் ஜோதிஜியின் டாலர் தேசம் மற்று ராஜூ முருகனின் வட்டியும் முதலும் வாங்கினேன்.

அப்படியே பராக்கு பார்த்த படியே சென்ற இடம் சூரியன் பதிப்பகம். வாங்கியது நம்ம கே.என்.சிவராமன் அவர்களின் கர்ணனின் கவசம்...வாங்கிய இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது யாரோ தோளை தொட்ட மாதிரி இருந்தது.திரும்பிபார்த்தால் நம்ம கே.என்.சிவராமன்...ஆஹா ஆட்டோகிராப் வாங்கிடலாமுன்னு பத்தகத்தினை நீட்டினேன், அன்போடு மறுத்துவிட்டார்.எவ்வளவோ கேட்டுபார்த்தேன். முடியவில்லை

அப்படியே கீழைகாற்று பதிப்பகத்தில் ஒதுங்கினேன். வாங்கிய புத்தகம் வினவு எழுதிய ஐ.டி.துறை நண்பா

சரி அப்படியே முடித்துகொள்ளலாம் என்று நினைத்தபோது வாங்கிய புத்தகம் “சர்க்கரையா சரி செய்துவிடலாம்...அறிவு நாற்றாங்கால் பதிப்பகம்

இறுதியாக என் மச்சான் குழந்தைக்காக அபிராமி மேஜிக்பாக்ஸ் கடையில் மூனு டிவிடி.(தமிழ் பாடல்கள்)