Monday, August 27, 2012

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((

சென்ற வெள்ளியிரவு சென்னையிலிருந்து பெங்களுருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.வண்டி வேலூரை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தேன்..தீடீரென வண்டியின் வேகம் தடைப்பட்டது.எதோ முனகல் சத்தம் கேட்டது போல் தோன்றியது.உடனே கண் விழித்து பார்த்தேன்.
எதிரே  பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது தெரிந்தது.

வண்டியை ஓட்டுநர் நிறுத்தியவுடன் வண்டியிலிருந்த பெரும்பாலனோர் இறங்க தொடங்கினர். அப்பொழுது ஒருவர் வண்டியின் படிகள் வழி இறங்க நேரமாகும் என்பதால் ஒட்டுநர் இருக்கையில் வழியாக வேகமாக குதித்தார்.

இறங்கியவுடன்,அந்த இடம் முழுவதும் கோழிகள் அடிப்பட்டும்,சில இறந்தும் காணப்பட்டன.கோழிகள் அபயகுரல் மனதை என்னவோ செய்தது.உடனடியாக வண்டியை தூக்கி நிறுத்தி வண்டி ஓட்டுநரை வெளியே இழத்து தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம்.நல்ல வேளையாக பெரிய காயம் எதுவுமில்லை.

அதற்குள் ஒருவா 108-க்கு தொலைப்பேசிவிட்டார்.வண்டி வரும் வரை காத்திருந்தோம். அப்பொழுது யாரோ அடிப்பட்டு முனகும் சத்தம் கேட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து ஒரு 20 அடி தள்ளி ஒருவர் அடிப்பட்டு கிடந்தது தெரிந்தது.வண்டியின் கூரை மேல் உட்கார்ந்து வந்தவராம்.

நெடுஞ்சாலை விபத்து மீட்பு வண்டி உடனடியாக வந்தது.

வண்டியின் கூண்டிலிருந்து வெளியே வந்த கோழிகள் அங்கேயே (தப்பித்து செல்லாமல்) மேய்ந்து கொண்டிருந்தன.

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((

No comments: