எனக்கு தெரிந்த வரையில் 98-வருடம் சென்னையில் முதன்முதலாய தமிழியிணைய முன்னோடி பாலா பிள்ளை அவர்கள நடத்திவந்த (tamil.net)தமிழியிணையம் என்ற மின்மடற் குழுவில் எழுதிவந்தவர்கள் சந்திப்பு ஒரு கார்த்திகை மாதம் நடைப்பெற்றது.அமெரிக்காவில் வசிந்து வந்த மணி மணிவண்ணன் அவர்கள் இந்தியா வந்த போது அவர்களை சந்திந்து பேசும் நிகழ்வாக அது அமைந்தது.சென்னை காந்திநகர் கிளப்பில் சந்திப்பு நடந்தது.மொத்தமாய் ஒரு 14 பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்-
அரவிந்தன்
மணி மணிவண்ணன் (தற்போது இந்தியாவில் இருக்கிறார்.தமிழ்கணினியில் ஒரு முன்னோடி)
இராம்கி அய்யா (இன்றும் பல புதிய தமிழ்ச்சொற்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்)
நாக இளங்கோவன் (ஒருங்குறி விடயத்தில் தமிழ் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்று தொடர்ந்து அம்பலபடுத்திவருபவர்)
முகுந்த் (எ-கலப்பை என்ற மென்பொருளுக்கு சொந்தக்காரர்-பல தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வருபவர்)
சுரேஷ் சுப்பையன் (சென்னை கவிகள் என்ற தமிழ் மென்பொருள் நிறுவனத்தின் பங்குதாரர்)
சங்கர்-மென்பொருள் வல்லுனர்- சந்திப்பினை எற்பாடு செய்தவர்.
மனோஜ் (சென்னை கவிகள் நிறுவனத்தின் உரிமையாளர்.முதன் முதலாய் தமிழில் ஒரு தமிழ் சொற் செயலியை 96 வருடம் உருவாக்கியவர்)
மற்றும் சிலர். பெயர் நினைவுக்கு வரவில்லை
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:-
மணி வண்ணன் தலையில் உருவான தகுதரம் என்ற பொதுவான எழுத்து தரத்தினை எல்லோரும் பயன்படுத்துவது.சென்னையில் உள்ள ஊடகங்களை பொதுவான தகுதரத்திற்கு மாற்ற முயற்சிப்பது எதிர்வரும் தமிழியிணைய மாநாட்டில் நம் பங்கு மற்றும் அபோதயை குழுமத்தில் இயங்கிவந்த அனானிகளின் அட்டகாசங்கள்.
நல்ல இரவு உணவுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.அப்போது நான் சந்தித்த பலருடன் இன்று வரை நட்பு பாராட்டி வருகிறேன்.
5 comments:
wow i know some senior bloggers also. (Including you)
சீனியர்களுக்கு வணக்கம்.
I respect to all my senior bloggers.
www.suresh-tamilkavithai.blogspot.com
ஆ, அரவிந்தன். 13 ஆண்டுகள் ஓடி விட்டனவா! அதற்குப் பின் இணைய மாநாடுகள், உத்தமம் உருவாக்கம், யூனிகோடு தொடர்பான போராட்டங்கள், எண்ணற்ற மடலாடற்குழுக்கள், வலைப்பூக்கள், முகநூல், கீச்சு, கூ+ என்று எவ்வளவு மாற்றங்கள்! அந்த நிகழ்ச்சி இன்னும் நெஞ்சில் நிற்கிறது. முகவரிகள் முகங்களான அந்த நாள். இனிமையான கணங்கள். அன்று எடுத்த கூட்டுப் படம் யாரிடமாவது இருக்குமே!
நண்பர் அரவிந்தன், இனிமையான மலரும் நினைவுகள். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. அப்பொழுது மடற்குழு நண்பர்களாக சந்திப்போம். இந்தக் கூட்டம் அடையாறில் நிகழ்ந்ததாக நினைவு. இதற்கு முன்னர் நான், நீங்கள், தேசிகன், வெங்கட் உள்ளிட்ட சிலர் டிரைவின் உட்லண்டுவின் சந்தித்த நினைவும் இருக்கிறது. இடையிலே ஏகப்பட்ட நிகழ்வுகள். மீண்டும் எங்கேனும் சந்திப்போம்.
மறப்பதற்கு முன்னர் எழுதிவைக்க நிறையவே இருக்கின்றன. காலம் நிறையவே ஓடிவிட்டது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment