Friday, April 01, 2011

ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” - ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” - ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

சூடு, சொர‌ணை உள்ள‌ இந்திய‌ ம‌ட்டைப்ப‌ந்து இர‌சிக‌ர்க‌ள் மேற்கொண்டு இக்கட்டுரையை ப‌டிக்க‌ வேண்டாம் (please) ….

“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(Cricket) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

— ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

ஈழத்தமிழர்களையும், காசுமீரிகளையும், இந்திய ஒன்றியத்தின் வடமேற்கு மாநில மக்களையும், பழங்குடிகளையும், தமிழக மீனவர்களையும் அன்றாடம் இந்த தேசங்கள் படுகொலை செய்து வருகின்றன‌, அந்த பகுதிகளில் மனித உரிமைகள் என்பது ஒரு சிறிய மாத்திரை அளவுக்கு கூட இல்லை என்பதும் உண்மை. இதை எல்லாம் கண்டனம் செய்யத்தவறியவர்கள் தான் இந்திய, இலங்கை மட்டைப்பந்து வீரர்கள்.

“அடிப்படை மனிதத்தன்மையே இல்லாத இவர்களை சிலர் தங்களது விருப்ப‌ தெய்வங்களாக பூசிப்பது சரியா?

அவர்கள் விளையாடும் விளையாட்டை பார்ப்பது முறையா? என்ற கேள்வியை உங்களின் ஆறாம் அறிவுக்கு விட்டுவிடுகின்றேன்…..

“ஓல‌ங்காவின், முகமது அலியின் மாந்த‌நேய‌த்தை வெறும் ப‌ண‌த்திற்காகவும், புகழிற்காகவும் விளையாடும் இந்திய‌, இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து கூட ஒரு ம‌ட‌த்த‌ன‌மே”

பின் குறிப்பு: ம‌ட்டைப்ப‌ந்து வ‌ர‌லாற்றில் ச‌ச்சினும், முரளீதரனும் எவ்வ‌ள‌வு தான் சாத‌னைக‌ளை செய்திருப்பினும் ஹென்றி ஒலாங்காவின் ம‌னித‌த் த‌ன்மைக்கு முன்னால், அவரது கால் தூசுக்கு கூட‌ ஒப்பிட‌ முடியாத‌வர்களே என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து…http://natramizhan.wordpress.com/2011/04/01/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/

1 comment:

ரசிகன் said...

நல்ல மாட்டிற்கு ஒரு சுடு...