Saturday, December 04, 2010

அவர் (Hire) சைக்கிள் கடை அனுபவங்கள்!!!



என் மகளின் சைக்கிள் டயருக்கு பஞ்சர் போட வேண்டும் ஒரு வாரமாக என் மனைவி சொல்லிகொண்டேயிருந்தார். இன்று சனிக்கிழமையாயிற்றே..டிவிட்டரிலும்,பதிவுகளிலும் பெருசா படிக்க எதுமில்லாத காரணத்தால் சரி..சற்றே வீட்டு வேலைகளை பார்ப்போம் என்று சைக்கிளை தள்ளிக்கொண்டே கடையை நோக்கிச்சென்றேன்..நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன.....


90-கள் வரை வாடகை சைக்கிள் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை இருந்தது.நம்மில் எல்லோரும் (தற்போது 30 வயதை கடந்தவர்கள்)எதாவது ஒரு சூழ்நிலையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்திருப்போம். தெரியாத ஊரில் அவ்வளவு சுலபத்தில் சைக்கிள் கிடைக்காது.”தெரிஞ்சா ஆள் பேர் சொல்லு..ஸ்கூல் பையை வைத்துவிட்டுப்போ” என்று பல கண்டிஷன் போடுவார்கள்.

இப்ப எல்லாம் ஆட்டோ எடுத்துப்போய்ட்டு வேலையை முடிச்சிட்டு வா என்று சொல்வதுபோல் அப்பவெல்லாம் அவர் சைக்கிள் எடுத்துட்டுப்போய் வேலையை முடிச்சிட்டு வா” என்று சொல்வார்கள்.

மணிக்கணக்கில்(Hourly basis) வாடகைக்கு கொடுக்கப்படுவதால் அவர் சைக்கிள் கடை என்று சொல்கிறார்கள் என்றே நான் பல வருடங்களாக நினைத்திருந்தேன்.பின்னர் தான் தெரிந்தது ஹையர் (Hire) என்பது மருவி அவர் என்றாகிவிட்டது வாடகை சைக்கிள் கடை என்ற நம்மில் பலருக்கு உடனையாக நினைவுக்கு வருவது வைதேகி காத்திருந்தாள் கவுண்ட மணி காமெடிதான்..”இரங்கநாதன் என்ற பெயருக்கெல்லாம் சைக்கிள் தரதில்ல”

சிறுவர்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துவிட்டு செய்யும் அலும்பு சொல்லி மாளாது.வாடகை சைக்கிள் கடைகளில் பெரிய கடிகாரம் மாட்டப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அதில் மணி பார்க்கமாட்டார்கள்.”அண்ணே முள்ளு இரண்டுல வந்தாச்சாண்ணே,ஆறுல வந்தா சொல்லுங்கண்ணே என்று இரவுண்டுக்கொருமுறை கேட்டு சைக்கிள் கடைக்காரரை டார்ச்சர் செய்வார்கள்.

பெரும்பாலும் பெற்றோர்கள் முதலில் காசு கொடுத்துவிட்டு (Prepaid) குழந்தைகளுக்கு வண்டி எடுத்து கொடுத்திருப்பார்கள்.ஆனால் நம்ம மக்களோ எக்ஸ்ட்ரா கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு வண்டியை திருப்பி தருவார்கள்.

வண்டியை திருப்பிதரும்போது,பெல்-ல காணோம் சீட் கவர் மிஸ்ஸிங் என்று கடைக்காரர் சொல்ல அதெல்லாம் தெரியாது எடுக்கும்போதே இப்படித்தான் இருந்தது என்று விவாதம் நடப்பது சர்வசாதாரணம்.

இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் யாரும் வாடகைக்கு சைக்கிள் எடுப்பதாக தெரியவில்லை.மத்திய வர்க்க குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே சொந்தமாக சைக்கிள் கிடைத்து விடுகிறது.


சைக்கிள் கடையை சென்றடைந்தேன்.இப்பொழுதும் சிறியவர்கள் அங்கே வாடகைக்கு சைக்கிள் எடுத்து செல்கிறார்கள்.. பெரியவர்களுக்கான ஒரு சைக்கிளும் அங்கே வாடகைக்கு இல்லை.முற்றிலும் குழந்தைகள் சந்தையை நம்பியே வாடகை சைக்கிள் கடைகள் இயங்குகின்றன்.

சைக்கிள் கடை அமைப்பில் பெரிய மாறுதல் இருப்பதாக தெரியவில்லை.பஞ்சர் கண்டுபிடிக்க-அதே அகல் பேசினில் தண்ணிர் ப்ஞ்சர் ஒட்டும் முறையிலும் பெரிய மாற்றமில்லை.எழு எட்டு ஓட்டை சைக்கிள்,பழைய புதிய டயர்கள்,ஸ்பனர் செட் என்று அதே அடையாளங்கள் தொடர்கின்றன.

ஆனால் வாடகை சைக்கிள் கடைகளுக்கென்றே ஒரு சந்தை தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

சைக்கிள் வாடகை தவிர மற்ற வழிகளில் தொடர்ந்து வருமானம் வருவதாக கடைக்காரர் சொல்கிறார்.(காற்றப்படிப்பது,பஞ்சர் போடுவது ,ரிப்பேர் செய்வது போன்ற வகையில்).

தற்போதைய கட்டணங்கள்
பஞ்சர் ஒட்ட -ரூ7
காற்றடிக்க -ரூ 2
வாடகை கட்டண்ம்(சிறுவர் சைக்கிள்)-ரூ 5

7 comments:

ஜோதிஜி said...

அரவிந்தன் ஆச்சரியம்.

ஒரு மிதி வண்டியும் முன்று மிதிகளும் என்று வீட்டில் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கிய கதையை எழுதி வைத்துள்ளேன்.

எல் கே said...

அந்த நாட்கள் !!!! விடுமுறை தினம் பாதி சைக்கில் ஓட்டுவதிலும் மீதி கிரிக்கெட் விளையாடுவதிலும் கழிந்தது

தினேஷ்குமார் said...

நினைவுகள் அசைபோடுகிறன சார் என்னுள்ளம் வாடகை சைக்கிளில் ஊரெல்லாம் ஊர்வலம் வந்த ஞாபகம் வருது சார் நன்றி
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_04.html

ஸ்வர்ணரேக்கா said...

//இன்று சனிக்கிழமையாயிற்றே..டிவிட்டரிலும்,பதிவுகளிலும் பெருசா படிக்க எதுமில்லாத
காரணத்தால்//

vasthavam than..

bangalore is better it seems.. its hard to find any cycle repairing shops nowadays..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மலரும் நினைவுகள். சைக்கிள் ஓட்டும்போது கிரீஸ் எல்லாம் பேண்டில் ஒட்டி வீட்டுல அடி வாங்கினது நியாபகம் வருது

tamil web library said...

nice blog

visit my blog

tamil web library

மதுரை சரவணன் said...

பால்ய நாட்களை நினைவுப்படுத்துகிறது .வாழ்த்துக்கள்.