Thursday, October 28, 2010

கொடுங்கோலன் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஆதாரங்கள் கேட்கிறது-ஐ.நா








கொடுங்கோலன் இராஜபக்சேவின் இலங்கை இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து சொல்ல மூன்று நபர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் நியமித்துள்ளார்

இந்த குழு இறுதிப்போரின் சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து செயலருக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இந்த குழுவிடன் மின்னஞ்சல் வழியாக கொடுக்கலாம்.

தனிநபரோ அல்லது அமைப்போ தங்கள் தரப்பு ஆதாரங்களை (பத்து பக்கங்களுக்கு மிகாமல்) ஐ.நாவின் குழுவிடம் மின்னஞ்சல் வழியே வழங்கலாம்.தகவல் கொடுப்பவரின் தொடர்பு விவரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்படவேண்டும்.அனைத்து தகவல்களும்,தனிநபர் விவரங்களும் இரகசியாமாக காக்கப்படும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

விவரங்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் panelofexpertsregistry@un.org

மேலதிக விவரங்களுக்கு panelofexpertsregistry@un.org என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தில் ஆதாரங்களை தாராளமாக அனுப்பி வையுங்கள்.

4 comments:

ராஜ நடராஜன் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

ஐநாவிடம் இல்லாத ஆதாரங்களா? இது என்ன கண்கட்டு வித்தை? முள்ளிவாய்க்கால் அழிவை இவர்கள் செய்ற்கைக் கோள்களின் மூலமாக படம் பிடித்து காட்டியவைகளுக்கு மேலாக எதை எதிர்பார்க்கின்றனர்? யாழ்

Anonymous said...

RAJAPAKSE IS GOOD. YOU TAMILIANS ARE THE PROBLEM
http://annakannan.blogspot.com/2010/11/blog-post.html
WE SUPPORT RAJAPAKSE. HE LIBERATED US. TAMILIANS ENJOY TRAVELING SRI LANKA

அரவிந்தன் said...

ஆதாரங்களை கொடுப்பதற்க்கான காலக்கெடுவினை ஐ.நா சபை நீட்டித்துள்ளது.