Tuesday, March 30, 2010

தமிழ் வலைப்பதிவர் குழுமம்-எனது புரிதல்கள்

மின் மடலாற் குழுக்கள்,டிவிட்டர்,பதிவுதளங்கள்,சோசியல் நெட்வொர்க் தளங்கள் என எங்கு தமிழில் எழுதினாலும் அவர் தமிழ்பதிவர்

மருத்துவர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கு எதற்க்கு சங்கம் தேவையோ அதேப்போல் பதிவருக்கும் சங்கம் தேவை

தொழில்நுட்ப நிறுவனங்களோடும்,அரசாங்கத்தோடவும் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் இணைந்து பணியாற்ற் வேண்டியுள்ளது அது அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

Technical know how பெரும் நிறுவனங்களிடமிருந்து பெறுவது எளிமையாகிவிடும்

நாளை கூகுள் நிறுவனம் புதிய வெளியீட்டின்போது நம் கருத்தினை கேட்க துவங்குவர்

நாளை அரசாங்கம் பதிவுலகம் குறித்து ஒரு தவறான சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் குழுமமாக இருந்தால் அதை எதிர்ப்பது எளிது

அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டிய அவசியமும் இல்லை.விருப்பம் இருப்பவர்கள் சேரலாம் இதென்ன தொழிற்சங்கமா அனைவரும் ஒன்றியினைய

உற்ப்பினர், உறுப்பினர் அல்லாதவர் யார் வேண்டுமானலும் தொடர்ந்து எழுதலாம். இதென்ன திரைப்பட யூனியனா கார்டு இருந்தால்தான் எழுதலாம் என்று சொல்ல

குழுமம் எந்த பதிவரின் கருத்துக்கும் தடையாக இருக்கப்போவதில்லை. சங்கம் யாரின் எழுத்துக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டல்ல

இது சினிமா யூனியன் அல்ல பிடிக்காதவர்களுக்கு ரெட் கார்டு போடுவதற்கு.

இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் தொடர்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன்

உங்கள் பிரச்சினை குழுமம் ஆரம்பிப்பதா அல்லது குறிப்பிட்ட சிலர் அதை ஆரம்பிப்பதா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

11 comments:

Vijayashankar said...

தெளிவு. குழுமம் என்பது பிரச்சனைகளை கடக்க வழி வகுக்கும் நண்பர்கள் கோட்டம். நல்ல விசயங்களை உலகுக்கு எடுத்து சொல்ல ஒரு பட்டறை.

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்கள்.

//உங்கள் பிரச்சினை குழுமம் ஆரம்பிப்பதா அல்லது குறிப்பிட்ட சிலர் அதை ஆரம்பிப்பதா.?//

நியாயமான கேள்வி.

புருனோ Bruno said...

நீங்கள் கேட்டது அறிவினா அரவிந்தன். விடை உங்களுக்கே தெரியும்

ஏன் அனைவருக்குமே தெரியும் :) :) :)

மணிஜீ...... said...

வெகு நாட்களாகவே யோசனையாகவே இருந்த ஒரு விஷயத்துக்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்தோம். வேறு யார் செய்திருந்தாலும் மகிழ்ச்சியே! வேண்டுமென்றே ஜாதி சாயம் பூசப்படுகிறது.ஆனால் ஆரம்பித்தாகி விட்டது. தமிழில் எழுதும் அனைவரும் இனைந்து கொள்ள வேண்டுகிறோம். நிச்சயம் வெறும் ரிக்ரியேஷன் கிளப்பாக செயல்படாது.யாருடைய தனித்துவமும் பாதிக்கபடாது.ஒரு சோஷியல் அமைப்பாக செயல்படலாம்.உங்களை சந்தித்ததில் நன்றி அரவிந்தன்...

சாமுவேல் | Samuel said...

சங்க உறுப்பினர்கள் .........என்ன என்ன செய்ய வேண்டும் ? என்ன என்ன செய்ய கூடாது ?

V.Radhakrishnan said...

அமைப்பு தொடங்கிவிட்டதாம்! இணைய வேண்டியதுதான் மிச்சம்.

MANO said...

YOUR POINT OF VIEW IS GOOD


MANO

D.R.Ashok said...

//இணைய வேண்டியதுதான் மிச்சம்.//
:)

Sri said...

அரவிந்தன்,

உங்கள் இடுகை தெளிவான திசையை நோக்கி இருக்கிறது. குழுமம் வெற்றிகரமாக இயங்கும் என்பதைப் பதிவு செய்கிறேன்.

ஸ்ரீ....

ஸ்ரீ.... said...

அரவிந்தன்,

குழுமம் வெற்றிகரமாக இயங்கும் என்பதைப் பதிவு செய்கிறேன்.

ஸ்ரீ....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான பதிவு.
அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி