Wednesday, July 30, 2008

பெங்களூர் சில துக்கடாக்கள்!!!

பெங்களூரில் தமிழ் பட சிடிக்கள் கொள்ளை மலிவு விலையில் கிடைக்கின்றன.

பெங்களூரில் பூங்காக்களில் காதலர்கள் சுதந்திரமாக காதலிக்கமுடிகின்றது

நியாயமான கட்டணத்தில் பெங்களூரில் ஆட்டோவில் பயணிக்கமுடிகிறது.

சென்னைப்போல் அல்லாமல் ரூ100க்கு கட்டணசேனல் மற்றும் அனைத்து இலவச சேனல்களும் பார்க்கமுடிகீன்றது.
பெங்களூரில் இன்னும் கீத்து கொட்டாய் திரையரங்கு செயல்படுகிறது.

பெங்களூரில் 5500 மாத வாடகையில் தனி வீடு கிடைக்கிறது

பெங்களூரில் இன்னும் 18ரூபாய்க்கு நல்ல அளவு சாப்பாடு கிடைக்கிறது

7 comments:

Santhosh said...

ஆமாம் அர்விந்த்,
நீங்க சொன்னது எல்லாமே சரி.. நீங்களும் நம்மளை மாதிரி பெண்களூருக்கு புது வரவா? வாங்க வாங்க

அரவிந்தன் said...

வாங்க சந்தோஷ் வருகைக்கு நன்றி..

பெங்களூர் வந்து ஒரு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன..

என்னவோ இன்று எழுத வேண்டும் போல் தோன்றியது அதான்

அன்புடன்
அரவிந்தன்

Sridhar V said...

//பெங்களூரில் தமிழ் பட சிடிக்கள் கொள்ளை மலிவு விலையில் கிடைக்கின்றன.//

அண்ணாச்சி,

இது பெருமையாச் சொல்லிக்கற மேட்டர் இல்லையே.

பிக்-பாக்கெட்காரங்க ஜாஸ்தின்னு பெருமைப் பட்டுக்கற மாதிரில்ல இருக்கு :-))

Tech Shankar said...




பெங்களூரில் முக்கியமான இடங்களில் கட்டணக்கழிப்பறை சுத்தத்துடன் உள்ளது.

காட்டுத்தனமான விலையேற்றத்துடன் பேருந்துக்கட்டணம் இருந்தாலும் 30 ரூபாய். பாஸ் எடுத்துப் பயணம் செய்யும் சாமானியர்கள் அதிகமோ அதிகம்.

தயாநிதி/கலாநிதி மாறன்கள் - கலைஞருடன் கருத்துப்பிரிதல் ஏற்படுமுன் - இங்கே பெங்களூரில் எஸ்.எஃப்.எம் - என்கிற பண்பலையை ஏற்படுத்தி -இந்தி-ப்பாடல்களை ஒலிபரப்பினார்கள். (கருத்துப்பிரிதல் ஏற்படும் முன்னர் :- தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு - பெங்களூரில் இந்திப்பாடல்களை ஒலிபரப்பி வருவாய். அடடா. தமிழா.. கூல்.)


Anonymous said...

தல - ஒரு விஷயத்தை விட்டுவிட்டீர்களே :-) அந்த சிடிக்களில் நேற்று ரிலீசான தமிழ்ப்படங்களும் உண்டு என்பது தான் அது. குசேலன் சிடி வேணும்னா வரும் ஞாயிறு அல்லது திங்களில் கிடைக்கும்னு எழுதியிருந்தீங்கன்னா மக்கள் வந்து சும்மா கும்மியிருப்பாங்களே.

இன்னும் சில துக்கடாக்கள்

* ஒவ்வொரு ஏரியாவிலும் பூங்காக்கள் - அவற்றின் சிறந்த பராமரிப்பு - வாக்கிங் செல்வதற்கு ஏற்ற நடைபாதை வழிகள் - அதை பொறுப்பாய் உபயோகப்படுத்தும் பயனர்கள்

* சென்னையைப் போல் இல்லாமல் இன்னும் பெரும்பான்மையான சாலைகளில் இரண்டு பக்கமும் 3 அடி நடைபாதைகள். பெரும்பாலும் சிமெண்டு போடப்பட்டு நடப்பதற்கு வழி உண்டு (என்ன சில சமயம் யாராவது வெட்டி வைப்பார்கள் இல்லை 2 சக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துவார்கள்

* இளஞ்சோடிகளுக்கு சூடேற்றும் வசதியான ஆடி மாச க்ளைமேட்

* தெருவுக்கு நாலு வைன் ஷாப் இருந்தாலும் தமிழகம் போல் யாரும் குடித்துவிட்டு கலாட்டா எல்லாம் செய்வதில்லை

* ரூ 4 அல்லது ரூ5 ல் அருமையான ஃபில்டர் காஃபி கிடைக்கும் சாகர் மற்றும் தர்ஷனி உணவகங்கள்

* எல்லா உணவகங்களிலும் அநேகமாக அக்வா கார்ட் எனப்படும் நீர் சுத்திகரிப்பு இயங்கிகள் வைத்திருப்பது. ஸ்பூன்களை வென்னீரில் கொத்திக்க வைத்து கொடுப்பது

* தமிழக நெடுந்தூர அரசு போக்குவரத்து கழக பஸ்களை விட கர்நாடக அரசுப் பேருந்துகள் கால் நீட்டவும் முதுகுவலிவராத இருக்கைகள்

* 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா.. இவன் ரொம்ப நல்லவன்' மாதிரி பஸ் கட்டணத்தை ஏற்றினாலும் யாரும் அது பற்றி போராடாமல் கேட்கிற காசை கொடுத்துச் செல்ல ரெடியாக இருப்பது (சென்னையில் ரூ 3.50க்கு செல்லும் தூரத்திற்கு பெங்களூரில் ரூ7 அல்லது ரூ9 கட்டணம் - சாதாரண பேருந்து)

Anonymous said...

நானும் சில வருடங்களாக பெங்களூர் வந்து சில வருடம் ஆகி விட்டது...

பெங்களூர் வாழ்கைகளை இதே பதிவில் எழுதி விட்டார்கள்.. எனக்கு தெரிந்த சில நல்லது

* பிரிகேட் ரோட்டில் ஒரு தடவை வாங்கிய புது ஷு பல் இளித்து விட்டது.ஷீ தைக்க சென்ற போது ரோட்டில் ஓரமாக அமர்ந்து இருந்த ஒரு முதியவர் இந்துவில் வருமே அது மாதிரி ஆங்கிலம் பேச நான் அப்படியே ஆடி போய் விட்டேன்..

அப்படியே சென்னையில் படு கேவலமாக எனக்கும் ஆங்கிலம் தெரியும் என்று தப்பு தப்பாக ஆங்கிலம் பேசும் ஆட்கள் நினைவு வந்தது..

* நமக்கு இந்தி கன்னட இரண்டும் கொத்தில்லாவா .. நோ பிராப்ளம் ஆங்கிலத்தில் பேசு... இப்போது கூட என் வீட்டுக்கு வந்து நந்தினி மீல்ஸ் கொடுத்து விட்டு போன பையனோடு பேசிய மொழி ஆங்கிலம்..

mynah said...

அரவிந்தன்
பெங்களூரைப் பற்றி நல்ல துணுக்குகளைச் சொன்னதற்கு நன்றி. பொதுவாக தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வரும் சிலர் தங்களது வலைத்தளத்தில் பெங்களூரைப் பற்றி மாற்றுக் கருத்துகளை எழுதியிருப்பதைப் படித்து மனம் புண்ணாகியிருந்த எனக்கு உங்கள் கட்டுரை மருந்தாக் இருந்தது. மொழி வெறி பெங்களூரில் அதிகம் என்றும் இதனால் தங்கள் வேலையை விட்டு விட்டுத் திரும்பவும் தமிழ்நாடு சென்றுவிட்டதாகவும், மீண்டும் பெங்களூர் பக்கமே வரமாட்டேன் என்றும் தனது வலைத்தளத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். நான் வெகு காலமாக பெங்களூரில் இருப்பதால் இந்தச் செய்தியைப் படித்து மனம் நொந்தது. மாறாக உங்கள் பகிர்வு மகிழ்ச்சியை அளித்தது. நன்றி
மைதிலி