Monday, June 23, 2008

யாரிடம் சொல்லி அழ

அன்பு நண்பர்களே,

எனது மனைவி கடுமையான மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்ற வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த பதினோரு வருட திருமண வாழ்க்கையில் முதன்முறையாக மருத்துவமனை வாசம்.

தற்பொழுது மருத்துவமனை சிகிச்சை முடிந்து ,வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

மஞ்சள் காமாலையின் வீரியம் சிறிதே குறைந்துள்ளது.கடுமையான பத்திய சாப்பாடும்,நல்ல ஒய்வும்தான் விரைவில் நோயின் கடுமை குறைய எதுவாகவுள்ளது.

மஞ்சள் காமாலையின் தாக்கத்தால் எடை குறைந்து மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு வீட்டில் வெறுமை..தனிமை மிகவும் வாட்டி வதைக்கிறது.(மனைவி தற்சமயம் அவங்க அம்மா வீட்டில் ஒய்வு எடுக்கிறார்).

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அவளை ,தற்சமயம் பார்க்க முடியாமல் நான் படும் வேதனையை யாரிடம் சொல்லி அழ

நாற்பது வயதினை நெருங்கும் ஒரு ஆண் மகன் தன்னுடைய இந்த வேதனைய யாரிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.?

அரவிந்தன்

11 comments:

கோவி.கண்ணன் said...

தங்கள் மனைவி மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு... நிச்சயம் விரைவில் அவர் நலமடைந்து உங்களுடன் மகிழ்ந்திருக்க வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.

பிரேம்ஜி said...

அரவிந்தன்.வருந்த வேண்டாம். தங்கள் மனைவி விரைவில் குணமடைந்து திரும்புவார்கள்.

வெட்டிப்பயல் said...

இதுவும் கடந்து போகும்...

நல்ல புத்தகம் வாங்கி படிக்கவும்.

Anonymous said...

மீண்டும் எல்லாம் விரைவில் இய‌ல்புக்கு வ‌ர‌ அன்பும் பிரார்த்த‌னைக‌ளும்.

இட்லி வடைகறி said...

அரவிந்தன்

கவலை வேண்டாம், தங்கள் மனைவி கூடிய விரைவில் குணமடைந்து உங்கள் இல்லறம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

Anonymous said...

இல்லத்தரசியை
இத்யத்தரசியாக
உணர்ந்து உய்ர்ந்திட
உண்மை புரிந்திட
இன்பம் நிறைந்திடும்
வாழ்வும் இனித்திடும்.

Anonymous said...

மீண்டும் இய‌ல்புக்கு வ‌ர‌ அன்பும் பிரார்த்த‌னை

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அரவிந்தன், விரைவில் உங்கள் மனைவிக்குக் குணமாகி இயல்நிலைக்கு உங்கள் வாழ்வு திரும்ப வேண்டுகிறேன்.

சரண் said...

தங்கள் மனைவி மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு, நிச்சயம் விரைவில் அவர் நலமடைவார்.

தாய் நாட்டிற்கு சென்றிருக்கும் என் மனைவியை ஒரு மாதமாக பிரிந்திருக்கும் என்னால் உங்கள் வேதனையை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

என்னுடய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எனக்கு மஞ்சள் காமாலை வந்து சரியான பிறகுதான், என் உடல் முன்பிருந்ததை விட ஊக்கம் அடைந்தது. இதேதான் நான் பலரிடம் கேள்விப்பட்டது கூட. இப்போது உங்கள் மனைவியின் உடல் மெலிவடைந்தாலும், விரைவில் ஊக்கம் பெறும்.

மேலும், சிறிது நாட்கள் பிரிந்திருத்தல் உங்களது அன்பை மேலும் வலுவாக்கும்.

உங்கள் மனைவி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

FunScribbler said...

கவலை வேணாம் அண்ணா! விரைவில் எல்லாம் இயல்பு நிலைமைக்கு வந்துவிடும்!

Divya said...

அரவிந்தன் முதன் முறையாக உங்கள் வலைதளம் வருகிறேன்.......உங்கள் மனைவி உடல் நிலை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

விரைவில் உங்கள் அன்பு மனைவி பரிபூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,

கவலை படாதிருங்கள்.