Sunday, April 06, 2008

அய்யா கலைஞர் அவர்களுக்கு ஒரு கேள்வி..???

அய்யா கலைஞர் அவர்களே!!!

இந்த ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு சென்ற மாதம் நீங்கள் அடிக்கல் நாட்டும் போது கர்நாடகாவில் என்ன ஜனநாயக ஆட்சியா நடந்து கொண்டிருந்து.

இப்போது மட்டும் என்ன மாற்றம் .மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி வரட்டும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று திடீர் பல்டி..?

எதன் அடிப்படையில் "நீங்கள் பேச்சு வார்த்தை" நடத்த போறிங்க சொல்லுங்க

முதன் முறையாக தமிழக மக்கள் ஒருமித்த முறையில் கன்னட வெறியர்களுக்கு எதிரிப்பு தெரிவித்தனர்.

இடையில் எட்டப்பராக நீங்கள் திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய அவசியமென்ன.?

அன்று காவேரி பிரச்சினையில் தமிழகத்தில் எதிர்ப்பு கூர்மைப்பட்டு வரும்வேளையில் ரஜினி தனித்து உண்ணாவிரதமிருந்து போராட்டத்தின் கூர்மையை மழங்கடித்தார்.

இன்று நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

அந்த ரஜினி கூட இந்த விஷயத்தில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

ஆனால் ஆறுகோடி மக்களின் பிரதிநிதியான நீங்கள் "பேசிப்ப்பார்க்கலாம்" என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீர்கள்.

இப்பிரச்சினையின் ஆரம்பித்தில் வாய்மூடி மெளனம் காத்த செயலலிதா கூட தங்களை தாக்கி பேச வாய்பளித்துள்ளீர்கள்.

என்ன சப்பைகட்டு கட்டப்போகிறீர்கள்.? கர்நாடகத்தமிழர்களின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போட்டேன் என்று நீலிகண்ணீர் வடிக்காதீர்கள்

எங்கள் நலன் என்ற பெயரில் உங்கள் மக்களை தவிக்க வைக்காதீர்கள்.

வேண்டாம் எங்களை நாங்களே பார்த்துகொள்கிறோம்.எங்களின் தவித்த வாய்க்கு இந்த கர்னாடக அரசு தராளமாகவே தண்ணீர் தருகிறது.


அரவிந்தன்
கர்னாடக தமிழன்

26 comments:

ச்சின்னப் பையன் said...

சரியா சொன்னீங்க...

Anonymous said...

தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பதற்காகத்தான் என்று கலைஞர் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறில்லையே. பாரதத்தின் புத்திரர்கள் நாம் சண்டையிட்டால் எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடாதா. நாம் வல்லரசாக வீர நடை போட வேண்டாமா?

பாரத் மாதா கீ ஜே.

Anonymous said...

வழக்கம் போல பெங்களூர் எங்களூர் பெங்களூர் தமிழர்களின் சொத்து என்று ப்ரிகேட் ரோட் கண்டோண்ட்மெண்ட் அல்சூர் மூந்திர சந்து இங்க எல்லாம் கரியால கிறுக்குவது போல அல்ல இந்த விடயம். கலைஞரின் ராஜ தந்திரம் உங்களுக்கு புரியவில்லை

Anonymous said...

The name of DMK chief K Karunanidhi's daughter Kanimozhi was high on the agenda, but the southern ally is understood to have declined to accept the offer for the moment in view of the current political situation in the wake of the controversy surrounding the Hogenakkal project, they added.

http://www.hindu.com/thehindu/holnus/000200804061761.htm

ஒக்கேனக்கல் பிரச்சனையால் தன் மகளுக்கு பதவி வேண்டாம் என்று சொன்னவர் தான் எங்கள் தலைவர்

அரவிந்தன் said...

அனானியாரே

என்ன பெரிய ராஜதந்திரம் இருக்கு சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளுகிறோம்

Anonymous said...

//என்ன பெரிய ராஜதந்திரம் இருக்கு சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளுகிறோம்//

பெங்களூர் சுவற்றில் இலங்கை தொடர்பாக கிறுக்குவதை சிலாகிக்கும் உங்களுக்கு புரியவைப்பது எப்படி?

நீங்க சொகுசா கலவரத்துல இருந்து தப்பி விடுவீங்க. பெங்களூரின் பெருண்பாண்மையான தமிழர்கள் சேரிகளில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் நிலை என்னவாகும்?

அரவிந்தன் said...

//நீங்க சொகுசா கலவரத்துல இருந்து தப்பி விடுவீங்க. பெங்களூரின் பெருண்பாண்மையான தமிழர்கள் சேரிகளில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் நிலை என்னவாகும்//

இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை..கலவர பூமியான ஸ்ரீராமபுரம் போன்ற இடங்களில் இந்த முறை எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.

திரையரங்கங்களும் தமிழ்ச்சங்கமும்,பேருந்துகளையும் தவிர வேறு எந்த தாக்குதலும் நடக்கவில்லை இம்முறை.

முதன் முறையாக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வந்தது.

பாதிக்கப்பட்டபோதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போழுது எங்கள் நலன் குறித்து நீலிக்கண்ணீர் எதற்கு.

அரவிந்தன்

Anonymous said...

//இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை..கலவர பூமியான ஸ்ரீராமபுரம் போன்ற இடங்களில் இந்த முறை எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.

திரையரங்கங்களும் தமிழ்ச்சங்கமும்,பேருந்துகளையும் தவிர வேறு எந்த தாக்குதலும் நடக்கவில்லை இம்முறை.

முதன் முறையாக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வந்தது.

பாதிக்கப்பட்டபோதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போழுது எங்கள் நலன் குறித்து நீலிக்கண்ணீர் எதற்கு.

அரவிந்தன்//

அண்ணா
உலகமமே தலை புரண்டாலும் விவேக் நகர் பாலாஜி தியேட்டரில் தமிழ் படம் தான் போடுவாங்க.. இப்ப என்ன படம் ஓடுந்த்ங்கோ??

உங்க தோஸ்து பெங்களூர் சுவற்றில் கரியால் கிறுக்கும் அந்த கிறுக்கு போல பேசாதீங்கண்ணா
நீங்க ஊட்ல டிவிடில படம் பார்ப்பீங்க பெங்களூர் வாழ் சேரி தமிழர்களுக்கு ஞாயிறுகளில் வேறு என்ன பொழுது போக்கு இருக்க முடியும்??

அத வுடுங்கணா நீங்க ப்ளைடல போவீங்க அத போல எல்லாருக்கும் முடியுமா?

அரவிந்தன் said...

//நீங்க ஊட்ல டிவிடில படம் பார்ப்பீங்க பெங்களூர் வாழ் சேரி தமிழர்களுக்கு ஞாயிறுகளில் வேறு என்ன பொழுது போக்கு இருக்க முடியும்??//

தம்பி எந்த காலத்துல இருக்கிங்க.இங்கே சாதரண கட்டட வேலை செய்யற கூலித்தொழிலாளிகூட டிவிடி வாங்கி தமிழ்ப்படம் பார்க்குறான்.
தள்ளு வண்டில போட்டு சிடி விக்கர காலமிது.இந்த நேரத்தில டிவிடி-ல பெரிய மேட்டரா பேசறிங்க சரியான காமெடிதான் போங்க

Anonymous said...

//தம்பி எந்த காலத்துல இருக்கிங்க.இங்கே சாதரண கட்டட வேலை செய்யற கூலித்தொழிலாளிகூட டிவிடி வாங்கி தமிழ்ப்படம் பார்க்குறான்.
தள்ளு வண்டில போட்டு சிடி விக்கர காலமிது.இந்த நேரத்தில டிவிடி-ல பெரிய மேட்டரா பேசறிங்க சரியான காமெடிதான் போங்க//

அண்ணா
பெங்களூர்ல எந்த தமிழ் கூலி தொழிலாளியும் தள்ளு வண்டியில் டிவிடி பார்த்தது போல எனக்கு தெரியவில்லை

சரி அப்படி நடக்கிறது என்றால் எந்த இடத்தில் அது போல செய்கிறார்கள் என்று சொல்லுங்கள் நானும் அதை பார்த்து பரவசம் கொள்வேன்.

சரி போனது போகட்டும் விடுங்க
ஏதோ சம்பந்தம் இல்லாத அல்லது பெங்களூர் தமிழர்களுக்கு தேவை இல்லாத பொது இடங்களில் கிறுக்கும் ஒரு கிறுக்கனுக்கு வக்கலாத்து வாங்கும் உங்களிடம் நியாத்தை எதிர்பார்க்க முடியாது.

முடிந்தால் வண்ணார பேட்டை, விவேக் நகர் , அல்சூர் போன்ற இடங்களில் தமிழர்களின் insecurity உணர்வுகளை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்யவும்

ROSAVASANTH said...

அரவிந்தன்,


கலைஞரின் திடீர் பல்டி மிக மோசமான செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; கர்நாடக காங்கிரஸ் நலன் என்ற பிண்ணணியில் உள்ள தனது அரசியல் சார்ந்த சுய நலன் மட்டுமே இதில் உள்ளது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை; கலைஞர் விளக்கமாக அளித்தது எல்லாம் அபத்தம்; மற்றும் இந்த ராஜதந்திரம் என்பதெல்லாம் கழக கண்மணிகளின் (மற்றவர்களை விட) தங்களையே ஏமாற்றிக் கொள்ள சொல்லும் ஒரு அல்ப சால்ஜாப்பு என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.


ஆனால், தமிழுக்கும் தமிழர்களுக்கும் எல்லா தளங்களும் எதிராகவே நிலைபாடு கொள்வதையே தங்கள் பிழைப்பு என்று நம்பிக்கொண்டிருக்கும், தமிழ் நாட்டில் உடம்பு வளர்த்த உயிரினங்களும், ஏதோ தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை உள்ளதுபோன்ற நடிப்புடன் கலைஞரை திட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் (மேலும் ஊடகத்தின் வெளிப்படையான பாரபட்சங்களை கவனிக்கவும்), நாம் (அதாவது அடிப்படையில் கலைஞர்/திமுக வெறுப்பு என்பதை ரத்தத்தில் கலந்து கொள்ளாதவர்கள்) கலைஞர் இந்த முடிவு எடுப்பதற்கான அரசியல் நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.


கர்நாடகத்தில் இந்த அல்ப பிரச்சனையை வைத்து அரசியல் செய்து லாபம் சம்பாதிக்க முடியும். தமிழகத்தில் நிலமை அப்படி இல்லை. கலைஞர் தீவிரமான நிலைபாடு எடுப்பதன் மூலம் பெறக்கூடிய அரசியல் லாபம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. மாறாக காங்கிரஸின் தயவு இல்லாமல் கலைஞர் மீண்டும் வருவதோ, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதோ கூட சாதியமில்லை. அதனால் காங்கிரசிற்கு உதவுவது , குறைந்த பட்சம் காங்கிரசிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் அரசியல்ரீதியாய் திமுகவிற்கு பயனளிக்க கூடியதாக இருக்கும் வாய்ப்பு. அந்த நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார்.


மேலும் தமிழகத்தில் முதல் முறையாக பெரும் எதிர்ப்பு வந்ததாக சொல்கிறீர்கள். இதற்கு முந்தய கட்டங்களிலும் தமிழகத்தில் சத்தத்திற்கும், கோஷங்களுக்கும் எந்த பஞ்சமும் இருந்ததில்லை. ஆனால் அப்போதும் பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான்.
புதிதாய் என்ன அதிக எதிர்ப்பு இங்கே வந்தது என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. நாரயண கௌடா போன்றவர்கள் பலம் பெற்ற பிறகு நிலமை இன்னும் மோசம். கர்நாடகத்தில் மிக திட்டமிட்டு, மிக நூதனமாக, தெளிவான விளைவுகளை ஏற்படுத்தும் கன்னட ரக்ஷக வேதிகேயின் நடவடிக்கைகள் போல எதுவும் இங்கே இல்லை. கர்நாடகத்திற்கு எந்த வித பதிலடியும் கொடுக்க கூடிய நிலையில், அதை தமிழ்நாட்டு பொது மனம் ஆதரிக்கும் நிலை இங்கே இருப்பதாக தெரியவில்லை. அதனால் இந்த பிரச்சனையில் வெற்றி பெறக்கூட்டிய ஒரு நிலை யில் கலைஞர் கவிழ்த்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் இந்த பிரச்சனையை துவக்காமல் இருக்க முடியாது.

Anonymous said...

சரிஙண்ணா இன்னிக்கு ராவுக்கு நான் தர்மபுரி போவனும் ஏதாச்சும் பஸ போவதுங்களா??

எந்த பேருந்தும் போகவில்லை என்பது ஏஸி ரூமில் இருந்து கொண்டு பேசும் உங்களுக்கு தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும்

அரவிந்தன் said...

//முடிந்தால் வண்ணார பேட்டை, விவேக் நகர் , அல்சூர் போன்ற இடங்களில் தமிழர்களின் insecurity உணர்வுகளை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்யவும்//

நானே நேரில் நீலசந்திரா,ஆஸ்டின் டவுன்,அல்சூர்,விவேக் நகர்,வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களுக்கு நேரில் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.

பலரிடமும் தொடர்ந்து பேசியும் வருகிறேன். எந்த வித பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை.

அரவிந்தன்

Anonymous said...

//பலரிடமும் தொடர்ந்து பேசியும் வருகிறேன். எந்த வித பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை.//

இது வரை நடக்கவில்லை என்றால் ??

தலைவர் கலைஞரின் அறிக்கை இனிமேலும் நடக்கவிடாமல் செய்யும்

அது தான் உங்களுக்கும் தலைவர் கலைஞரின் ராஜ தந்திரத்துக்கும் உள்ள வித்யாசம்..

( என் பேருந்து தொடர்பான பின்னோட்டம் மாயம் ஆகி போனது?? என்ன நோக்கம்?

அரவிந்தன் said...

//சரிஙண்ணா இன்னிக்கு ராவுக்கு நான் தர்மபுரி போவனும் ஏதாச்சும் பஸ போவதுங்களா??//

எதும் போகவில்லை என்பது நிஜம்.

சொல்லியிருந்தால் என்னுடைய நண்பர் ஒருவர் காரில் தர்மபுரி சென்றார். உங்களை அனுப்பி வைத்திருப்பேன்

அரவிந்தன்

Anonymous said...

அண்ணா
சரி மேட்டருக்கு வரேன்

தமிழ்நாட்டில் தீவிர தமிழ் ஆதரவாளர்கள்
ஒரு பள்ளிகூடத்தை அடித்து நொருக்கியது சரியா?

ஒசுரில் ஒரு பேருந்தை எரித்தது சரியா?

இன்னும் பல பல சொல்லாம்

ஏன் தலைவர் கலைஞர் நினைத்தால் கர்நாடாகவிற்க்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்தலாம்

இது எல்லாம் நல்ல முன் உதாரணமாக இருக்காது என்று ராஜ தந்திரமாக அவர் செய்த உதவியை அவர் மேல் பழி போடும் இந்த செய்கை செய் நன்றி அறியா பேதமை உணர்வை வெளிப்படுத்துகிறது

(பார்பான் ரோசாவசந்த் சந்தில் சிந்து பாட நினைக்கிறார்)

Anonymous said...

//சொல்லியிருந்தால் என்னுடைய நண்பர் ஒருவர் காரில் தர்மபுரி சென்றார். உங்களை அனுப்பி வைத்திருப்பேன்//

அண்ணா

கூலி தொழிலாளி எல்லாம் கார் வைத்து இருக்கும் அளவிற்க்கு நம் நாடு இன்னமும் முன்னறவில்லை

மீண்டும் சொல்கிறேன் தலைவர் கலைஞர் எடுத்த முடிவு சமுதாயத்தில் பின் தங்கி இருக்கும் ஆட்களுக்காக

அரவிந்தன் said...

//அண்ணா
சரி மேட்டருக்கு வரேன்//

தம்பி

நானும் விஷயத்திற்க்கு வருகிறேன்.

உங்களுடைய கேம் பிளான் என்ன.

புதிய ஆட்சி இங்கு மலர்ந்தவுடன் நீங்க என்ன செய்ய போறிங்க.
எதன் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்த போறிங்க.

இந்த விஷயத்துல கர்னாடகவின் ஸ்டேக் என்பது எதுவும் இல்லாத நிலையில் எதற்காக இந்த தாமதம்.?

இரண்டு மாதம் கழித்து என்ன செய்வதாக உத்தேசம்.?

உதயதேவன் said...

தமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே!!!
இனி ஒரு விதி செய்வோம்!!! எங்கள் சக்தி என்னவென்பதை இனிவரும் காலம் உலகிற்கு உரைக்கும்.... உணர்வில் உறைக்காத பிணங்களே.... இனி நீங்கள் தமிழன் என்று
சொல்ல வேண்டாம்!!!!

Anonymous said...

அண்ணா
நாடு இல்லாத அகதி நாய்கள் போல சிந்திக்க வேண்டாம்

எனக்கு அகதிகள் பேரில் எந்த வித அக்கறையும் கிடையாது. தன் தலையில் அவனுங்களே மண் அல்லி போட்டது போல இந்திய தமிழன் தலை குணிய கூடாது

பொறுத்து இருண்து பார்க்கவும்

அரவிந்தன் said...

//தமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே!!!
இனி ஒரு விதி செய்வோம்!!! எங்கள் சக்தி என்னவென்பதை இனிவரும் காலம் உலகிற்கு உரைக்கும்.... உணர்வில் உறைக்காத பிணங்களே.... இனி நீங்கள் தமிழன் என்று
சொல்ல வேண்டாம்!!!!//

கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் நண்பரே.

Anonymous said...

ஒரு அகதி குவார்ட்டர் அடிச்சுட்டு உளறிட்டு போகுது இது கூட தெரியலையா??

//கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் நண்பரே.//

Anonymous said...

நீங்க பெங்களூர்ல பொறந்து வளர்ந்தா தான் இந்த பிரச்சனையின் வீரியும் புரியும்
நீங்க சென்னைகாரங்க
தேவை இல்லாம நீங்களும் பெங்களூர் தமிழன்னு சொல்லி எங்க பேரை கெடுக்காதீங்க

எங்களூக்கு இலங்கை தமிழர்களால் மட்டும் அல்ல உங்களை போல ஆட்களால் மேலும் பேரு கெட்டு போகுது

அரவிந்தன் said...

//நீங்க சென்னைகாரங்க
தேவை இல்லாம நீங்களும் பெங்களூர் தமிழன்னு சொல்லி எங்க பேரை கெடுக்காதீங்க

எங்களூக்கு இலங்கை தமிழர்களால் மட்டும் அல்ல உங்களை போல ஆட்களால் மேலும் பேரு கெட்டு போகுது//


பிரச்சினை வீரியம் எனக்கு நன்றாக தெரியும்.

கர்னாடகவில் எல்லாத்தரப்பட்ட தமிழர் பிரச்சினைகளையும் நான் நன்கறிவேன்.

எனக்கு நீங்க சொல்லித்தர தேவையில்லை.

அரவிந்தன் said...

//எங்களூக்கு இலங்கை தமிழர்களால் மட்டும் அல்ல உங்களை போல ஆட்களால் மேலும் பேரு கெட்டு போகுது//

விவாதத்தை திசைதிருப்பாதே அனானியாரே

rm_slv said...

நல்ல காரசாரமான விவாதம், அரவிந்தன் நினைப்பதைபோல உடனடியாக என்னசெய்து விட முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேணும், திட்டம் சம்பந்தமான வெளிப்படையான பணிகளைத்தவிர்த்து மற்ற வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கும் என நான் நினைக்கிறேன்.

புதிய அரசு வந்தவுடந்தான் எதுவும் செய்ய முடியும், ஏனனில் இப்போது இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றால், தற்ப்போதை அரசு தேர்தெடுக்கும் அரசு வரும் வரை காலக்கெடு கேட்டால் அதை நீதிமன்றம் ஏற்கும், கூடவே அது முல்லை பெரியாரு பிரச்சினையில் பேசிதீர்த்துக்கொள்ளுங்கள் எனசொன்னதுபோல் சொல்லி கழண்டு கொண்டால் என்ன செய்வீர்கள்,

இதில் கலைஞர் எப்படி செயல்படவேண்டும் என்று அரவிந்தன் எதிர்பார்க்கிறார் என்று புரியவில்லை திட்டம் செயல் வடிவம் என்னவென்றே யாருக்கும் தெரியாது அது எந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது, அதனால்தான் இது சம்பந்தமாக ஜெ தவிர மற்ற தலைவர்கள் மேம்போக்கான எதிர்ப்போடு விட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்,ஆகையால் சற்று பொறுத்திருந்து பார்பது நல்லது