Tuesday, July 26, 2005

ஆன்மிகவாதி(வியாதி) ரஜினிப்பற்றி சாரு....விளாசல்

ஆன்மிகவாதி(வியாதி) என்ற பெயரில் சரியான காரியவாதியாக இருக்கும் ரஜினிப்பற்றி எழுத்தாளர் சாரு தனது கோணல் பக்கங்களில் கிழிகிழியென்று கிழித்துயிருக்கிறார்..

www.charuonline.com.

9 comments:

முகமூடி said...

சாரு பிச்சை எடுக்கிறாரா.. அவருக்கு விமர்சனம் பண்ண தகுதி இருக்கிறதா - ஆமாம் எப்ப பாத்தாலும் யார் விமர்சனம் பண்ணாலும் தகுதி இருக்கான்னு கேக்கறீங்க - என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கலாமே... அவரின் கேள்விகள் ::

ரஜினி ஆன்மிகத்துக்காக இதுவரை செய்தது என்ன... (செய்ததை சொல்ல வேண்டிய அவசியம் இல் லையென்றால் குமுதத்தில் போட்டோவுடன் இமயமலை பேட்டி எதற்கு)

சந்திரமுகி ஒரிஜினல் எழுத்தாளருக்கு பணம் தராமல் பதட்டப்பட்டது எதற்கு

ஏழைகளான தமது ரசிகர்களுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று பேட்டியில் வருத்தப்படும் ரஜினி "ரஜினி 25" விழாவில் ரசிகர்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா??

முடிந்தா "தகுதி" பற்றியெல்லாம் ஆராயாமல் பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க...

குழலி / Kuzhali said...

இன்னும் நிறைய மக்கள் வருவாங்க சாருவின் மீது பாய்வதற்கு...

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

"வாசகர் பரிந்துரை/மறுமொழி சேவை" நிரலை இங்கே சென்று உங்கள் பதிவில் இணைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள் அனுமதியுடன் இந்த பதிவை ஒரு பின்னூட்டமாக என் பதிவில் இணைத்திருக்கிறேன்...

dondu(#11168674346665545885) said...

சாரு சொல்கிறார், மணிச்சித்திரத்தாழ் கதாசிரியருக்கு அவர் ஒரு லட்சம் கொடுக்கக்கூடாதா என்று.

ஏன் ஐயா கொடுக்க வேண்டும். ரஜனியா படத்தயாரிப்பாளர்? இக்கேள்வியை மணிச்சித்திரத்தாழ் கதையை படமாக்கியவரிடம் போய் கேளுங்கள். இல்லையென்றால் பிரபுவைக் கேளுங்கள்.

சாருவுக்கு பதில் கூறியாகி விட்டது. இப்போது அவருக்கு ஒரு கேள்வி.

தன் நண்பன் ஆபிதீனின் கதையைத் திருடித் தன்பெயரில் போட்டுக்கொண்ட சினேகிதத் துரோகிக்கு இதை எல்லாம் பேச மனம் கூசவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Narain Rajagopalan said...

சாரு கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லை. டோண்டு சொல்வதுப் போல ரஜினி படத்தினைப் பார்க்க முடியாது. ரஜினி தான் தயாரிப்பாளரையும், கதையும் நிச்சயிப்பது. அவ்வாறு நிச்சயிக்கும்போது அந்த கதையின் ரிஷி/நதிமூலங்களைப் பார்ப்பது நல்லது. அமிதாப்பச்சனின் படங்களை தமிழில் செய்தப்போது அதற்கான உரிய உரிமையைக் கொடுத்தவர்கள், ஒரு ஏழை மலையாள கதாசிரியனுக்கு கொடுக்க வேண்டும் என்னும்போது பாரபட்சம் பார்ப்பது ஏன்? சரி, ரஜினிக்கு இது தெரியவில்லையென்றே வைத்துக் கொள்வோம். ஆ.வியில் வந்த பிறகாவது ஏதாவது செய்திருக்கலாம் அல்லவா. இங்கே பிரச்சனை எவ்வளவு தருவது என்பது அல்ல. இது ஒரு தொழில் தர்மம் [professional ethics]அவ்வளவுதான். மேலும் ஆன்மிகம், இறைவியல் பேசுபவர் ஆன்மீக சிந்தனை வளர என்ன செய்தார் என்பது தான் கேள்வி.

ஆபிதின் கதைகளை ஏன் சாரு திருடினார் என்பதை சாருவுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக் கொள்ளுங்கள். இதுப் போல இன்னமும் நிறைய விஷயங்களை நான் தானதருமம் பண்ண இயலும். ப்ரேம்-ரமேஷ் தான் ஸீரோ டிகிரி எழுதியது என்பதும், ரவிக்குமார் பிள்ளை கெடுத்தாள் வினை தலித் பற்றி பேசவேயில்லை என்பது போல நிறைய விதயங்கள் சொல்ல இயலும். அப்படியே சாரு திருடியிருந்தாலும், இன்னொரு விதயத்தினை சொல்லக்கூடாது என்பது பாசிஸம்.

எனக்கு சமைக்கத் தெரியாது, அதனால், சாம்பாரில் உப்பில்லை என்றால் உடனே நீங்கள், உங்களுக்குத் தான் சமைக்கத் தெரியாதே, நீங்கள் எப்படி இதை சொல்ல முடியும் என்பது போலதான் இது.

நாடோடி, சாரு யாரை புகழ்ந்தார் என்று கொஞ்சம் விளக்கமுடியுமா.

Raja said...

ஆன்மிகம் அவரது விருப்பம். சாரு சொல்வது போல தலைவர் போட்டாகிராபர் எல்லாம் கூட்டி செல்ல வில்லை. அவரது நண்பர் எடுத்த படம் தான் அவை. வேண்டுமானல் அனைத்து படங்களையும் ரஜினி ராம்கியிடம் உள்ளது.

பாவம் சாரு ராகவேந்திரா படம் பார்க்கவில்லை போலும்.
அந்த பேட்டியில் பாசில் நல்ல விலைக்கு கதையை விற்று விட்டு எனக்கு எதுவும் தராமல் விட்டு விட்டார் என கூறியதையும் படிக்கவும்.

ரஜினி என்ன செய்கிறார் ஏழை மக்களுக்கு என்று தெரிய வேண்டுமானல் மாலை வேளைகளில் ராகவேந்திரா மன்டபத்துக்கு செல்லவும்.

ரஜினி 25 க்கு நன்கொடை ஒன்னும் வசூலிக்கலையே. உன்டியல் குலுக்கவும் இல்லை. சினிமா கட்டணம் போல் ரஜினி 25 க்கும் கட்டணம் வசூலித்தார். அவ்வளவுதானே

ரஜினி எதாவது செய்ய வேண்டும் என ஒரு கூட்டம் பிச்சைக்காரனை போல் அழைகிறது ஏன் என்று தெரியவில்லை.

Narain Rajagopalan said...

//ரஜினி எதாவது செய்ய வேண்டும் என ஒரு கூட்டம் பிச்சைக்காரனை போல் அழைகிறது ஏன் என்று தெரியவில்லை.//

அதானே, அவரே பாவம். அவரை போய் டார்ச்சர் பண்ணிக்கிட்டு.

dondu(#11168674346665545885) said...

"சரி, ரஜினிக்கு இது தெரியவில்லையென்றே வைத்துக் கொள்வோம். ஆ.வியில் வந்த பிறகாவது ஏதாவது செய்திருக்கலாம் அல்லவா. இங்கே பிரச்சனை எவ்வளவு தருவது என்பது அல்ல. இது ஒரு தொழில் தர்மம் [professional ethics]அவ்வளவுதான்."

நானும் அதைத்தான் கூறுகிறேன். professional ethics என்பது இங்கே பொருந்தாது, ஏனெனில் அவர் தயாரிப்பாளர் அல்ல, அவ்வளவுதான். அதிலும் இப்பதிவாளர் ரஜனி தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு லஷம் தர வேண்டும் என்பது சரியேயில்லை.

ரஜனி பாபா படத்தில் கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தகர்களுக்கு பணம் திருப்பித் தந்தார், தயாரிப்பாளர் என்னும் முறையில். அது அவராக விருப்பப்பட்டு கொடுத்தது. கொடுத்திருக்க வேண்டியதே இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. வேறு யாரும் அதை இது வரை செய்ததேயில்லை. இதற்கு என்ன கூறுகிறீர்கள்.

மற்றப்படி சாரு அவர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிந்ததால்தான் கேட்டேன். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்