Wednesday, January 19, 2005

எட்டரை மணின்னா...???

நான் ஒரு அழைப்பு மையத்தில் பணிபுரிவதால் சில நாட்கள் இரவு பணிக்குச் செல்ல வேண்டியிக்கும்.நேற்று இரவு வேலைக்குச்சென்று காலையில் வீட்ற்க்கு வந்தேன்.நான் வரும்போது என்மகள் பள்ளிச்செல்ல தயாராகிகொண்ட்டிருந்தாள்.அப்பா இன்று உங்களுக்கு ஆபிஸ் லீவா என்று கேட்டாள்? இல்லையம்மா இரவு மீண்டும் செல்ல வேண்டும் என்றேன்.எப்போ என்றாள்?எட்டரை மணிக்கு என்றேன். எட்டரைன்னா எந்த சீரியல் வரும் போது என்றாள்..செவ்வாய எட்டரை மணிக்கு எந்த சீரியல் என்று சிற்றவிற்க்கு எட்டவில்லை. உஷாராக சன் செய்திக்கு பின்னர் என்று சமாளித்தேன்...அப்ப்பாவுக்கு இதுகூட தெரியல எட்டரை மணிக்கு சுப்பர் டெண் பாடல்கள் என்று சொல்லி சிரிக்கிறாள்....

1 comment:

Narain Rajagopalan said...

நல்லா வளர்க்கிறிங்க, குழந்த்தைகளை. நீங்க முதல்ல, சன் டிவி schedule-அ மனப்பாடம் பண்ணுங்க