Saturday, December 18, 2004

வணக்கம்!!!நன்பர் முகுந்த் திருமண வரவேற்பிற்க்கு கடந்த புதன் கிழமை காலை பெங்களுரிலிருந்து பேருந்து மூலம் புறப்பட்டேன்.எல்லா அரசு பேருந்துகளும் தற்போது டிவிடி மூலம் படம் காட்டுகிறார்கள்.காதலர் தினம் பார்த்துக்கொண்டே சேலம் சென்றடைந்தேன்.அங்கிருந்து இன்னொரு பேருந்துமூலம் நாமக்கல் சென்று அங்கிருந்து ஒரு தானி(அதாங்க ஆட்டோ)பிடித்து திருமண அரங்கிற்க்குள் நுழைந்தபோது மாலை மணி ஆறு..
முகம் கழுவி மாற்றுடையணிந்து வெளியெ வந்தேன்.அப்போது மற்ற சென்னை நன்பர்களும் வந்து சேர்ந்தனர்.(தமிழக முதலவரின் இல்லத்தில் கணினி ஆலோசகராக பணிபுரியும் நன்பரும் முகுந்தராஜின் தமிழா நிறுவனத்தை சென்னையில் நிர்வகித்து நன்பர் ஒருவரும்).முகுந்தின் தந்தை சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலம் போல.நல்ல கூட்டம்.மாலை 6.15 மணிக்கே சாப்பட்டுக்கூடம் களை கட்ட துவங்கியது...மணமக்களை பார்த்து வாழ்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபின் நாமக்கல் ராஜா தேடினோம்.கொஞ்சம் இள வயசா தெரிந்த வர்களிடமெல்லாம் சென்று நீங்கதானே ராஜா என்று கேட்டு அசடு வழிந்தோம்..
சரி கொஞ்சம் வயத்துபாட்டை கவனிப்போன்னு அங்கே போனா சரியான கூட்டம்...பின் வழியா எதாவது என்ட்ரி கொடுக்கலாம்னு பார்த்தா எல்லா வாசலிலும் கூட்டம்.சரின்னு நம்ம நன்பர் ஒரு "பிட்" போட்டார்.மாத்திரை போட தண்ணி வேணும் என்று சொல்லி நாங்க மூவரும் உள்ளே செல்ல வழி செய்தார்.உள்ளே சென்றவுடன் நாங்க உஷாரா மூனு சீட் பிடித்து விட்டோம்.சும்மா சொல்லக்கூடாது.மிகவும் நல்ல சாப்பாடு........தலை வாழை இலையில் ஒரு "புல்" கட்டு கட்டினோம்.அப்புறம் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்....

No comments: