பெங்களூர் மாவட்ட்த்தில் அகரம்,ஐகண்டபுரம்,ஆவதி,பைச்சபுரம்,பேகூர்,பிண்ணமங்கலா,தொம்மளூர்,கங்காவரம்,அலசூர்,அசிகலா,எக்குண்டா,ஒசக்கோட்டை,கொண்டரள்ளி,கூடலூர்,மாகடி,நெலமங்கலா,திருமலை,ஒகட்டா, போன்ற ஊர்களில் விரவியுள்ள தமிழ்க்கல்வெட்டுகளை எல்லாம் சேர்த்தால் அவை நூற்றுக்கணக்கிலாகும்.
பெங்களுர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை தமிழ்கல்வெட்டுக்களே.
இவ்வுர்களூக்கு இன்றுள்ள தெலுங்கு,கன்னட பெயர்களை இடுவதற்க்கு முன்னர்,பெங்களூர் மாவட்டத்திலுள்ள ஊர்கள் பலவற்றிக்கு தமிழ் பெயர்களே வழங்கிவந்ததை இக்கல்வெட்டுகள் காட்டுகின்றன.
பழைய தமிழ் பெயர் தற்போதைய பெயர்
இருவுளியூர் இப்பலூர்
ஐவர்கண்டபுரம் ஐகண்டபுரம்
ஆகுதி ஆவதி
மடவளாகம் மடிவாளா
தும்பளூர் தொம்மளூர்
பேட்டை சிட்டி
விண்ணமங்கலம் பிண்ணமங்கலா
மண்ணை நாடு மண்ணே
நொந்தகுழி நந்தகுடி
ஒவட்டம் ஒகட்டா
நிகரிலிசோழபுரம் மாலூர்.
வரலாற்றைக்காட்டும் தமிழ் கல்வெட்டுக்களைக் கண்டு கன்னடர்கள் அஞ்சுவதற்க்கு காரணம் என்ன.?
கல்லூரிகளில் கருநாடகத்தின் வரலாற்றைக் கற்பிக்கையில் பொதுவாக கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே அவர்கள் தொடங்குவதன் காரணம் என்ன.?
பெங்களூரில் உள்ள பழங்கோயில்களில் பெரும்பாலனவை பல்லவர்களாலும் சோழர்களாலும் தமிழ் கங்கர்களாலும் கட்டப்பட்டவை.பேகூர்-ல் உள்ள சிவன் கோயில் 1000 வருடங்கள் முன்பு சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!
1537-ம் ஆண்டில் பெங்களூர் நகரை நிறுவிய கெம்பே கவுடா சாதியால் பள்ளிக்கவுண்டர்(வன்னிய கவுண்டர்) என்பதால் அவர் ஒரு தமிழரேயாவார்.
தமிழரில் இன்று பலர் ஆங்கிலம் பேசி பழகுவது ஒரு பெருமையென மயங்கி கெடுவதைப்போன்று,விசய நகர அரசிற்க்கு அடங்கி ஆண்டுவந்தமையால்,இக் கெம்பே கவுடாவின் பெயரிலும் கூடக் கன்னட தெலுங்கு சாயல் தொற்றிகொண்டது.
பெங்களூரின் மண்ணின் மைந்தரான பழைய தமிழ்ர்களை கன்னடர்கள் திகிளர் என்றுதான் அழைப்பர்.தமிழரை,”தமிழர்” எனச் சொல்ல வராத கன்னடர்கள்,தமிழரை திகளர் என்று அழைக்கலாயினர்.இந்தத் திகள்ர்கள்,திகள பள்ளிகள் என்றும் திகள பறையர் என்றும் சாதியால் வேறுபடுவர்.கெம்பே கவுடா வும் ஒரு திகளராவர்.இவரது முன்னோர்கள் தமிழகத்தின் காஞ்சியிலிருந்து வந்த”முரசு ஓக்கல்” குடியினரின் வழிவந்தராவர்.
தொடரும்.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
17 comments:
அய்யா, எங்கிருந்து கிடைத்தது இத்தகவல்கள்?
மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அரவிந்தன் அய்யா.
"பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!"
தலைப்பு மட்டுமல்ல உங்கள் கட்டுரையும்
அருமை
நன்றி மாசிலா..
தொடரின் இறுதியில்,இத் தொடர் எழுத உதவிய அனைத்து தகவகள்,குறிப்புகள் ஆதாரங்களை இவற்றை முழுமமையாக தருகிறேன்.
அன்புடன்
அரவிந்தன்
//மடவளாகம் மடிவாளா//
சுவாரசியமாக இருக்கிறதே!!!
சுவாரஸ்யமாக இருக்கிறது.தனித்தமிழில் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்
கட்டுரை அருமை. அருமையான தெரியாத தகவல்கள்.
விரைவில் பெங்களூர் நம் வசமாகட்டும் :)))
அப்படி போடு அரிவாளு!
புள்ளிராஜா
தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழ் தாயாக இருக்கும்போது, இது ஒன்றும் ஆச்சரியப்படும் செய்தி இல்லையே..
சுவாராசியமான தகவல்கள்! வாழ்த்துக்கள், தொடருங்கள்!
நான் ஒரு அனுமானமாக தான் நினைத்தேன் தமிழர் தான் ஆண்டிருக்கவேண்டும் என்று..
ஆனால் தொடர்ச்சியாக பெங்களுர்க்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்புகள் வெளி வருகின்றது..
அது பற்றி..கன்னடர்கள்..என்ன சொல்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்...
பெங்களுரில் சோழர் ஆட்சியா..?
மிகவும் சுவாரஸ்யமான விசயங்கள்... கன்னடக்காரர்களை ஒம்பிழுக்க நிறைய விசயங்களைக் கூறிஉள்ளீர்கள்.. நன்றி.. உங்கள் நடையும் அருமை...
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்யா உடம்பை ரணகளமாக்கிடுறீங்க!
இது வரைக்கும் வாங்குன உதை பத்தாதா?
மர்ம வீரன்,
உன்மையை உலகுக்கு எடுத்து சொல்லவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.இனிமேல் உதை வாங்கப்போவது தமிழினம் அல்ல.
அதெல்லாம் 91-ம் முடிந்துவிட்டது.
அன்புடன்
அரவிந்தன்
TBCB,
இதுப்பற்றி கன்னடர்கள் மறுத்து எதும் பேச முடியாது.கன்னட அரசாங்கத்தின் இணையத்தளத்தில் கூட பெங்களூர் மாவட்டம் நிகரிலி சோழபுரம் என்றைழைக்கப்பட்டதாக் எழுதியிருக்கிறார்கள்.
எந்த கன்னட அரசனும் பெங்களுர் மாவட்டத்தை 9-ம் நூற்றாண்டிலிருந்த ஆண்டதாக தகவல் இல்லை.
இவ்வளவு ஏன் கன்னட மொழியின் ஆரம்பமே கி.பி.ஏழாம் நூற்றாண்டுதான்.
பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழன். பெங்களூர் நகரின் முக்கிய இடமான லால்பாக் பூங்கா அமைக்கும் பணியில் ஈடுப்பட்டது முழுமையாக திகள்ர்கள் என்ற தமிழர்கள்.
இன்றைய பெங்களூர் நகரின் அருகில் இருக்கும் பேகூர் என்ற ஊரை 10-ம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவன் தமிழன்.
அனைத்து கன்னட அரசு ஆவணங்களும் இதை ஏற்றுக்கொள்கின்றன.
ஆகவேத்தான் உறுதியாக சொல்கிறேன்.இறும்மாப்புடன் சொல்கிறேன்.
பெங்களூர் எங்களூர்!!!
அன்புடன்
அரவிந்தன்
அரவிந்தன்,
வாழ்த்துக்கள். நிறைய குறிப்புகள், செய்திகள். சிறப்பாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.
சிறப்பான இடுகை !
"முரசு ஒக்கல்" என்பதற்க்கான ஆதாரம் என்ன சகோ? 'ஒக்கல்' என்றால் குடி என்று பொருள்... முரசு ஒக்கல் என்றால் முரசு குடி! ஆக கெம்ப கௌடாவின் முன்னோர்கள் முரசு ஒக்கல் என்பதற்க்கு ஏதேனும் ஆதாரம் இருக்கா?
Post a Comment