Wednesday, August 08, 2007

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!! பகுதி-1

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!!


சென்னை பதிவர் பட்டறை.

நானும் ஈ-கலப்பபை படைப்பாளியமான முகுந்த-ம் சனி இரவு ரயிலேறி ஞாயிறு காலை சென்னை வந்துசேர்ந்தோம்.

தானி பிடித்து அரங்கு வந்துசேர்ந்தபொழுது மணி 9.20. பெயர் பதிந்துவிட்டு சாப்பாடு சீட்டு மறக்காமல் கேட்டு வாங்கி அரங்கினுள் சென்று அமர்ந்தோம்..

எதிர்ப்பட்ட வலைப்பதிவர்களுக்கு முகமன் தெரிவித்து கொண்டு என்னை அறிமுகத்திகொண்டேன்..

அரவிந்தன் என்று என் பெயரை சொன்னவுடன் அரவிந்தன் நீலகண்டனா என்று அதிர்ச்சியுடன் பலர் கேட்டனர். அந்த கேள்வியின் தொனியில் இருந்து அவருக்கு வலைப்பதிவர் மத்தியில் ரொம்ப நல்ல(?) பெயர் இருப்பதை தெரிந்துகொண்டேன்.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த காசி ஆறுமகத்திடம் என்னை அறிமுகபடுத்திகொண்டவுடன்,என்ன அரவிந்தன் உங்க கால் செண்டர் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று மிகவும் அக்கரையுடன் விசாரித்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பெங்களுரின் பெயர் வெங்காலூர் என்று என்று சில வருடங்கள் முன் நான் போட்ட மொக்கை பதிவினை நினைவுகூர்ந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக 10.30 மணிக்கு தாமதமாக வந்த உருப்படாதது நார்யணன் “ நான் அப்பவே வந்துட்டேன் தல”சும்மா கடற்கரையில் காத்து வாங்கிட்டுருந்தேன் என்று தான் ஜொல்லு விட்டு கொண்டிருந்ததை பாலிஷ்-ஆக சொன்னார்..

தல பாலாபாரதி யாருன்னு கேட்டு கடைசியாக கண்டுபிடித்தேன்..ஒரு பாசமான தம்பியை அவர் உருவில் பார்க்க முடிந்தது..கழுத்து சூட்டு தற்பொழுது குறைந்து நலமாக இருப்பதாக சொன்னார்.

டோண்டு ராகவன் பட்டறை பற்றி தன்கருத்தினை சொன்னபொழுது சென்னைபதிவர்கள் சிலர் தமுக்குள்ளே குசுகுசு என்று பேசிக்கொண்டனர் அப்படியே சற்று நமட்டு சிரிப்புடன்.


இராம்கி அய்யா சாலமன் பாப்பையா மீது அதீத கோவத்தில் இருந்தார்(சிவாஜி பட அங்கவை சங்கவை விஷயத்தில்).

சிலர் சாப்பாடு பொட்டலங்களை மீச்சம் மீதியுடன் அங்காங்கே அதற்க்கென் உள்ள தொட்டியில் போடாமல் சென்றதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

காலை தேனீர் இடைவேளையின்போது ஜெய்சங்கர் அவர்கள் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை வீட்டாரை எப்படி சிறப்பாக கவனிப்பார்களோ அதுப்போல கவனித்தார்..

தமிழி தேர்ந்த கல்லூரி பேராசிரியர் போல் வகுப்பெடுத்தார்.கூட்டம் முழுவதையும் தன் பேச்சால் கவர்ந்தார்.பார்ப்பதற்க்கு கொஞ்சம் சினிமா நடிகர் போல இருந்தார்.

கிருபா ஷங்கர் பேச்சு மிகவும் எமாற்றமளித்தது.முழுமையாக தயார்செய்து வரவில்லை என்று தெரிகிறது..

லக்கிலுக்..

தேனியைப்போல் சுறுசுறுப்பான இளைஞன்..இவனது உருவத்திற்க்கும், பேச்சிற்க்கும் சிறுதும் தொடர்பில்லை..
என்னடா மச்சி என்று தோழமையுடன் தோளில் கைப்போட்டு பேச தோன்றுகிறது அவரைப்பார்த்தவுடன்.

ஆபாசபின்னூட்டங்கள் போடுபவர்கள் மீது எதாவது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இகாரள் பிராகஷ் சொன்ன பதில்

சென்னை சைபர் கிரைம் பிரிவினர் இணையம் மூலம் நடைபெறும் பொருளாதர குற்றசாட்டுகள் மீததான புகார்க்ளுக்கு மட்டுமே உடனடி நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று சொன்னார்.


தொடரும்..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

6 comments:

Anonymous said...

அரவிந்தன் சார்,

சென்னை பட்டறைக்கு, இட்லிவடை எழுத்தாளர்கள் தேசிகன் மற்றும் கிருபா சங்கர் இருவருமே வந்திருந்து கவர் ஸ்டோரி செய்து உடனே வலைப்பதிவில் போட்டது இன்னும் ஒரு ஸ்பெஷல் நியூஸ்.

Anonymous said...

//ஆபாசபின்னூட்டங்கள் போடுபவர்கள் மீது எதாவது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இகாரள் பிராகஷ் சொன்ன பதில்

சென்னை சைபர் கிரைம் பிரிவினர் இணையம் மூலம் நடைபெறும் பொருளாதர குற்றசாட்டுகள் மீததான புகார்க்ளுக்கு மட்டுமே உடனடி நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று சொன்னார்.
//

அப்படி என்றால் இணையத்தில் இருக்கும் மதி, பெயரிலி படங்களை திருடியது மற்றும் எம்கேகுமாரின் நாடுபோற்றும் நாயகன் என்ற கதையை திருடி அச்சடித்தது தொடர்பாக கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி மீதும் பாராகவன் மீதும் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க சொட்டை பிரகாஷ் உதவுவாரா?

Anonymous said...

//அரவிந்தன் என்று என் பெயரை சொன்னவுடன் அரவிந்தன் நீலகண்டனா என்று அதிர்ச்சியுடன் பலர் கேட்டனர். அந்த கேள்வியின் தொனியில் இருந்து அவருக்கு வலைப்பதிவர் மத்தியில் ரொம்ப நல்ல(?) பெயர் இருப்பதை தெரிந்துகொண்டேன்.
//

அரவிந்தன் நீலகுண்டனை பிராமண சாதியில் சேர்த்துக் கொள்வதாக டோண்டு ராகவனும் கிச்சு எஸ்கேயும் சொல்லி இருக்காங்களாம்!

Anonymous said...

//டோண்டு ராகவன் பட்டறை பற்றி தன்கருத்தினை சொன்னபொழுது சென்னைபதிவர்கள் சிலர் தமுக்குள்ளே குசுகுசு என்று பேசிக்கொண்டனர் அப்படியே சற்று நமட்டு சிரிப்புடன்.//

அந்த ஆளுகூட யாருமே பேசலையாம். அவனது அல்லக் கைகளான உண்மைத் தமிழன் மற்றும் அதியமான் ரெண்டு பேரும்தான் வாலாட்டினார்களாம்!

லக்கிலுக் said...

தலைப்பு அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. பதிவு மகிழ்விக்கிறது. பின்னூட்டங்கள் புன்னகைக்க வைக்கிறது :-)))))))

Anonymous said...

//அரவிந்தன் என்று என் பெயரை சொன்னவுடன் அரவிந்தன் நீலகண்டனா என்று அதிர்ச்சியுடன் பலர் கேட்டனர். அந்த கேள்வியின் தொனியில் இருந்து அவருக்கு வலைப்பதிவர் மத்தியில் ரொம்ப நல்ல(?) பெயர் இருப்பதை தெரிந்துகொண்டேன்.//

உண்மையைக் கூறினால் நிகழ்ச்சியில் மதியம் வரை உங்களை நான், தமிழ் இணையத்தில் நல்ல(!) பெயரெடுத்த "அந்த" அரவிந்தன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மதிய வேளையில் தயிர் சாதத்தை ருசித்துக் கொண்டிருக்கும் பொழுது பேச்சினிடையே ஒருவர் உங்களை அந்த "நல்ல" மனுசன் இல்லை என கூறிய பொழுது தான் நீங்கள் அந்த நீல கண்டன் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

நிகழ்ச்சி நான் எதிர்பார்த்தது போன்றே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. என்னை மிகவும் கவர்ந்தது சகோதரர் பினாத்தல் சுரேஷ் அவர்களின் ப்ளாஷ் வகுப்பு தான். மனுசன் என்னமாய் கலக்குகிறார்! அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி சுரேஷ்.

வேறு குறிப்பிட்டு கூற வேண்டுமெனில் சகோதரி பொன்ஸ் அவர்களின் அதிகார தோரணையிலான விளக்கத்தை கூறலாம். கேட்ட சந்தேகத்தை அழகாக புரியும்படி விளக்கி தந்தார்கள். ஒரு டீச்சருக்குண்டான அனைத்து அம்சங்களும்(அன்புடன் கூடிய கண்டிப்பு, ஈடுபாடு...) அவர்களிடம் நிரம்பி இருந்ததை காண முடிந்தது. சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

மனதில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் நமது பெண் கற்பு புகழ் டோண்டு சார் தான். மனுசனுக்கு என்ன தோல் கட்டியப்பா? பாதுகாப்பாக உறவு கொள்ள பெண்களுக்கு ஆலோசனை கூறியதிலிருந்து அநேக விஷயங்களில் கையும் களவுமாக வலைப்பதிவர்களிடம் மாட்டி நோண்டி நொங்கெடுத்த பின்பும், எவ்வித கூச்சமோ, முகத்தில் எந்த ஒரு சலனமோ இன்றி மனுசன் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் தலை நிமிர்த்தி எப்படி தான் நடந்தாரோ?

இதில் கிடைப்பவர்களிடமெல்லாம் வாய் சவடால் வேறு. சரியான ஜென்மம் தான் என நினைத்துக் கொண்டேன்.

என்னிடம் கேட்டால் இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சியில் இருந்த ஒரே கரும்புள்ளி என இதனைத் தான் குறிப்பிடுவேன்.

அன்புடன்
இறை நேசன்.