Wednesday, August 15, 2007

ரம்மியமான மாலை பொழுதினிலே--தோழியோடு

நேற்று ஆம்பூர் சென்றுவிட்டு, என் அண்ணன் வாங்கிய நிலம் பதிவுசெய்துவிட்டு பேருந்தில் பெங்களூர் வழியில் அலைப்பேசியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வரும்பொழுது,

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த தோழியை சந்தித்தால் என்ன என்று தோன்றியது. உடனே தோழியை அலைப்பேசியில் அழைத்தேன். மாலை உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்..பார்க்க முடியுமா என்று கேட்டேன்..அதனாலென்ன பார்க்கலாமே என்றார் …

பெங்களூர் நகரத்திற்க்கு சற்று முன்னர் தோழியின் இல்லம் இருப்பதால் முக்கிய அங்காடியோ ,திரையரங்கோ அல்லது பூங்காவோ இல்லாததால் தோழியின் இல்லம் அருகே உள்ள ஆலமரத்தின் அருகே சந்திப்பது என்று முடிவு செயதோம்.

பேருந்தினிலிருந்து இறங்கி அலைப்பேசியில் மீண்டும் சந்திப்பினை உறுதிசெய்தபின்னர் ஆல மரம் நோக்கி நடக்க தொடங்கினேன்..

அந்த இடம் மற்ற ஊர்களிலிருந்து பெங்களுருக்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது …ஆலமரத்தின் அருகே குடிநீர்க்குழாய் நீண்ட வரிசையில் பிளாஸ்டிக் குடங்களும் பெண்களூம்.

நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இடத்தில்,நடுத்தெருவில் காத்திருப்பதென்பது என்பது மிகவும் அவஸ்தையான விஷயம்.

கொஞ்ச நேரத்தில் தோழியும் வந்து சேர்ந்தார்.பேசிக்கொண்டே நடக்கத்தொடங்கினோம்.குழாயடியில் உள்ளவர்களின் பார்வைகளை அலட்சியம் செய்தவாரே-


தோழி விளிம்பு நிலையில் வாழ்ந்தாலும் நல்ல இரசனை கொண்டவர்.தனித்துவமான சிந்தனைகள் கொண்டவர்…

பேசிக்கொண்டே நடந்து வந்தோம்..நல்ல உணவகம் எதும் இல்லாத்தால் பேசிக்கொண்டே நடந்து வந்தோம். தோழி ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிவதால்,பணிச்சுழலில் உள்ள பிரச்சனைகள்,அனுபவங்கள்,எதிர்பார்ப்பு என்று பேசிக்கொண்டே வந்தார்.

ஆள் அரவற்ற சாலையில்(இரு மங்கிலும் உயர்ந்த மரங்கள்) மாலை பொழுதில் தோழியுடன் நடந்து சென்றது ஒரு இனிமையான மற்றும் புதுமையான அனுபவமாக அமைந்தது …

அன்புடன்
அரவிந்தன்

No comments: