Thursday, August 23, 2007

பெங்களூர் எங்களூர்! (தமிழர்கள்மண்) பகுதி-1

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது.

அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95 இலக்கம்.

அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா.? இதற்க்கு விடை காண,வரலாற்றை விவரிக்க வேண்டும்.

1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு,பழைய சென்னை மாகாண்த்திலிருந்த எல்லையோரப பகுதிகளான பெங்களூர்,கோலார் தங்கவயல்,குடகு,பெல்லாரி,சித்திரதுருகம்,கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளூடனான தனி வரலாறு உண்டு.



பத்திராவதி,சிக்கமக்ளூர்,சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள்,கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர்.
கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துகொண்டவர்கள் இவர்கள்.

ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ,இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை.

பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர்.முசுலிம்களோ,பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.கன்னடரோ,க்ருநாடக்கத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர்.தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர்.

பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும்,ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும்,பம்பாய் மாகாணத்திருந்து சில பகுதிக்ளையும்,மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையுன் இணைத்து கருநாடகம் மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறியத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.

பெங்களூரிலும்,கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் கருநாடகத்திற்க்கு பிழைப்பு தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று.

தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் “மொழிவழியில்” கன்னடருக்கு அரிந்து கொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும்.

அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள்,இப் பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல்,இப்பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லி தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர்.

இந்நிலையில்,பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம்.

பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.

கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராச ராசதேவனால் வெல்லப்பட்டன.

மாகடி பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான்.
இன்று எலவங்கா என்றழைக்கப்படும்,பெங்களுர் பகுதி சோழ வள நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.அதற்கு “இலைப்பாக்கநாடு” என்று பெயர்.
இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோள்ர்கள் ஆட்சியில் “எலவக்கா” என்றாகி பிறகு “எலவங்கா” என்று திரிந்தது.

சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலை நகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால்,தமிழ் கங்கர் எனப்பட்டனர்.


தொடரும்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

7 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

தொடர் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

ஆர்வமாக அடுத்தப் பதிவை எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

அருமையான பதிவு...

Narain Rajagopalan said...

இப்பதிவில் சொல்லியிருக்கக் கூடிய விசயங்களுக்கான ஆதார சுட்டிகள், புத்தகங்கள் பற்றிய விவரங்கள் தர முடியுமா ? ஹொய்சாளர்கள் பற்றி ஒரு அருமையான ஆங்கில புத்தகத்தினை போரம் லேண்ட்மார்க்கில் பார்த்ததாக நினைவு...

Anonymous said...

Good one! Intresting and want to know more in depth...
Keep up the good work

ஷைலஜா said...

அரவிந்தன்
இப்போதான் இதைப்படிச்சேன்
விவரமா எழுதி இருக்கீங்க! பாராட்டுக்கள்.

உங்க ஐடி போன் எண் கேஆரெஸ் கேட்டார் எனக்கு அனுப்பினாலும் சரி

Pravin Amuthan said...

Hi Thamilians,

We know that Sri lankan Govt is kiling our innocents tamilians in the name of war against terrorism and india is helping srilanka, i am from chennai and working in bangalore, we friends are discussing to protest against indian support to srilankan govt in bangalore. Please join us. please comtact me pravinche@gmail.com

கிருஷ்ண மூர்த்தி S said...

விட்டா லெமூரியா கண்டத்துல இருந்து ஆரம்பிச்சு உலகின் மொதக்கொரங்கே தமிழ்க்குரங்குதான்னு தீசிசே எழுதுவீங்க போல! ஷைலஜா அக்கா நம்பர் இருந்தா எனக்கு அனுப்பி வைங்க!