Tuesday, August 28, 2007

பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!

பெங்களூர் மாவட்ட்த்தில் அகரம்,ஐகண்டபுரம்,ஆவதி,பைச்சபுரம்,பேகூர்,பிண்ணமங்கலா,தொம்மளூர்,கங்காவரம்,அலசூர்,அசிகலா,எக்குண்டா,ஒசக்கோட்டை,கொண்டரள்ளி,கூடலூர்,மாகடி,நெலமங்கலா,திருமலை,ஒகட்டா, போன்ற ஊர்களில் விரவியுள்ள தமிழ்க்கல்வெட்டுகளை எல்லாம் சேர்த்தால் அவை நூற்றுக்கணக்கிலாகும்.

பெங்களுர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை தமிழ்கல்வெட்டுக்களே.

இவ்வுர்களூக்கு இன்றுள்ள தெலுங்கு,கன்னட பெயர்களை இடுவதற்க்கு முன்னர்,பெங்களூர் மாவட்டத்திலுள்ள ஊர்கள் பலவற்றிக்கு தமிழ் பெயர்களே வழங்கிவந்ததை இக்கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பழைய தமிழ் பெயர் தற்போதைய பெயர்
இருவுளியூர் இப்பலூர்
ஐவர்கண்டபுரம் ஐகண்டபுரம்
ஆகுதி ஆவதி
மடவளாகம் மடிவாளா
தும்பளூர் தொம்மளூர்
பேட்டை சிட்டி
விண்ணமங்கலம் பிண்ணமங்கலா
மண்ணை நாடு மண்ணே
நொந்தகுழி நந்தகுடி
ஒவட்டம் ஒகட்டா
நிகரிலிசோழபுரம் மாலூர்.

வரலாற்றைக்காட்டும் தமிழ் கல்வெட்டுக்களைக் கண்டு கன்னடர்கள் அஞ்சுவதற்க்கு காரணம் என்ன.?

கல்லூரிகளில் கருநாடகத்தின் வரலாற்றைக் கற்பிக்கையில் பொதுவாக கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே அவர்கள் தொடங்குவதன் காரணம் என்ன.?

பெங்களூரில் உள்ள பழங்கோயில்களில் பெரும்பாலனவை பல்லவர்களாலும் சோழர்களாலும் தமிழ் கங்கர்களாலும் கட்டப்பட்டவை.பேகூர்-ல் உள்ள சிவன் கோயில் 1000 வருடங்கள் முன்பு சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே!!!

1537-ம் ஆண்டில் பெங்களூர் நகரை நிறுவிய கெம்பே கவுடா சாதியால் பள்ளிக்கவுண்டர்(வன்னிய கவுண்டர்) என்பதால் அவர் ஒரு தமிழரேயாவார்.
தமிழரில் இன்று பலர் ஆங்கிலம் பேசி பழகுவது ஒரு பெருமையென மயங்கி கெடுவதைப்போன்று,விசய நகர அரசிற்க்கு அடங்கி ஆண்டுவந்தமையால்,இக் கெம்பே கவுடாவின் பெயரிலும் கூடக் கன்னட தெலுங்கு சாயல் தொற்றிகொண்டது.

பெங்களூரின் மண்ணின் மைந்தரான பழைய தமிழ்ர்களை கன்னடர்கள் திகிளர் என்றுதான் அழைப்பர்.தமிழரை,”தமிழர்” எனச் சொல்ல வராத கன்னடர்கள்,தமிழரை திகளர் என்று அழைக்கலாயினர்.இந்தத் திகள்ர்கள்,திகள பள்ளிகள் என்றும் திகள பறையர் என்றும் சாதியால் வேறுபடுவர்.கெம்பே கவுடா வும் ஒரு திகளராவர்.இவரது முன்னோர்கள் தமிழகத்தின் காஞ்சியிலிருந்து வந்த”முரசு ஓக்கல்” குடியினரின் வழிவந்தராவர்.


தொடரும்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Thursday, August 23, 2007

பெங்களூர் எங்களூர்! (தமிழர்கள்மண்) பகுதி-1

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது.

அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95 இலக்கம்.

அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா.? இதற்க்கு விடை காண,வரலாற்றை விவரிக்க வேண்டும்.

1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு,பழைய சென்னை மாகாண்த்திலிருந்த எல்லையோரப பகுதிகளான பெங்களூர்,கோலார் தங்கவயல்,குடகு,பெல்லாரி,சித்திரதுருகம்,கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளூடனான தனி வரலாறு உண்டு.



பத்திராவதி,சிக்கமக்ளூர்,சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள்,கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர்.
கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துகொண்டவர்கள் இவர்கள்.

ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ,இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை.

பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர்.முசுலிம்களோ,பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.கன்னடரோ,க்ருநாடக்கத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர்.தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர்.

பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும்,ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும்,பம்பாய் மாகாணத்திருந்து சில பகுதிக்ளையும்,மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையுன் இணைத்து கருநாடகம் மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறியத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.

பெங்களூரிலும்,கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் கருநாடகத்திற்க்கு பிழைப்பு தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று.

தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் “மொழிவழியில்” கன்னடருக்கு அரிந்து கொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும்.

அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள்,இப் பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல்,இப்பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லி தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர்.

இந்நிலையில்,பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம்.

பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.

கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராச ராசதேவனால் வெல்லப்பட்டன.

மாகடி பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான்.
இன்று எலவங்கா என்றழைக்கப்படும்,பெங்களுர் பகுதி சோழ வள நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.அதற்கு “இலைப்பாக்கநாடு” என்று பெயர்.
இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோள்ர்கள் ஆட்சியில் “எலவக்கா” என்றாகி பிறகு “எலவங்கா” என்று திரிந்தது.

சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலை நகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால்,தமிழ் கங்கர் எனப்பட்டனர்.


தொடரும்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Sunday, August 19, 2007

பொது இடங்களில் காதலிக்கலாமா...கூடாதா..?

இன்றிரவு 9.00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நீயா. நானா நிகழ்ச்சியில் பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் "பொது இடங்களில் காதலிக்கலாம்" அதில் தவறில்லை என்ற அணியில் நான் பேசியிருக்கிறேன்

சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன..எந்த அளவிற்க்கு தணிக்கை செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகும் என்று தெரியவில்லை..

நாமும் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்.

Wednesday, August 15, 2007

ரம்மியமான மாலை பொழுதினிலே--தோழியோடு

நேற்று ஆம்பூர் சென்றுவிட்டு, என் அண்ணன் வாங்கிய நிலம் பதிவுசெய்துவிட்டு பேருந்தில் பெங்களூர் வழியில் அலைப்பேசியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வரும்பொழுது,

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த தோழியை சந்தித்தால் என்ன என்று தோன்றியது. உடனே தோழியை அலைப்பேசியில் அழைத்தேன். மாலை உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்..பார்க்க முடியுமா என்று கேட்டேன்..அதனாலென்ன பார்க்கலாமே என்றார் …

பெங்களூர் நகரத்திற்க்கு சற்று முன்னர் தோழியின் இல்லம் இருப்பதால் முக்கிய அங்காடியோ ,திரையரங்கோ அல்லது பூங்காவோ இல்லாததால் தோழியின் இல்லம் அருகே உள்ள ஆலமரத்தின் அருகே சந்திப்பது என்று முடிவு செயதோம்.

பேருந்தினிலிருந்து இறங்கி அலைப்பேசியில் மீண்டும் சந்திப்பினை உறுதிசெய்தபின்னர் ஆல மரம் நோக்கி நடக்க தொடங்கினேன்..

அந்த இடம் மற்ற ஊர்களிலிருந்து பெங்களுருக்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது …ஆலமரத்தின் அருகே குடிநீர்க்குழாய் நீண்ட வரிசையில் பிளாஸ்டிக் குடங்களும் பெண்களூம்.

நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இடத்தில்,நடுத்தெருவில் காத்திருப்பதென்பது என்பது மிகவும் அவஸ்தையான விஷயம்.

கொஞ்ச நேரத்தில் தோழியும் வந்து சேர்ந்தார்.பேசிக்கொண்டே நடக்கத்தொடங்கினோம்.குழாயடியில் உள்ளவர்களின் பார்வைகளை அலட்சியம் செய்தவாரே-


தோழி விளிம்பு நிலையில் வாழ்ந்தாலும் நல்ல இரசனை கொண்டவர்.தனித்துவமான சிந்தனைகள் கொண்டவர்…

பேசிக்கொண்டே நடந்து வந்தோம்..நல்ல உணவகம் எதும் இல்லாத்தால் பேசிக்கொண்டே நடந்து வந்தோம். தோழி ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிவதால்,பணிச்சுழலில் உள்ள பிரச்சனைகள்,அனுபவங்கள்,எதிர்பார்ப்பு என்று பேசிக்கொண்டே வந்தார்.

ஆள் அரவற்ற சாலையில்(இரு மங்கிலும் உயர்ந்த மரங்கள்) மாலை பொழுதில் தோழியுடன் நடந்து சென்றது ஒரு இனிமையான மற்றும் புதுமையான அனுபவமாக அமைந்தது …

அன்புடன்
அரவிந்தன்

ஜெயலலிதா வழியில் கூகுள் நிறுவனர்கள்!!!

செல்வி.ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சி காலத்தில் 1ரூபாய் சம்பளத்தில் எளிமையாக(?) வாழ்ந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே..



அவரின் அற(?) வழியை பின்பற்றி கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பேரின் வருடம் $1 மற்றுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு பணிபுரிகின்றனர்..

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.அவர்களின் சம்பள விவரம் தெரியும்.



அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது.


அன்புடன்

அரவிந்தன்


Thursday, August 09, 2007

பதிவர் பட்டறை-இதுவரை வெளிவராத புகைப்படங்கள்!!!

லக்கிலுக் எப்படி லுக் விடறார் பாருங்க


ஒருக்கா இவர்தான் "இட்லி வடையோ...சபை-ல பேசிக்கிட்டாங்க

முகம் காட்ட மறுத்த வ.வா.சங்க உறுப்பினர்



தரையில் அமர்ந்து படிக்கும் மாண்வர்கள்



கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்கய்யா..




செந்தழல் ரவி வகுப்பெடுக்கிறார்.




இந்த வேலையெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி என்கிறாரா மா.சி..?



பொன்ஸ் வகுப்பு எடுக்கும் காட்சி






Wednesday, August 08, 2007

பதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்-பகுதி-2

இப்பொழுது தலைப்பிற்க்கு வருகிறேன்..

பதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள் ..யாரிந்த எட்டப்பன்கள்..?

தமிழ் மென்பொருட்களை கொள்ளைவிலைக்கு தமிழர்கள் தலையில் இத்துனை வருடங்களாக மிளகாய் அரைத்த தமிழ் வியாபாரிகளைத்தான் சொல்கிறேன்

இவர்களுக்கு கணித்தமிழ் சங்கம் என்றொரு அமைப்பும் உண்டு..அரசாங்க அங்கீராம் பெற்று தங்களது மென்பொருட்களை விற்றதை தவிர இவர்கள் வேறு எதையும் புடுங்கவில்லை..

இதுப்போன்ற தன்னார்வ முயற்சிகளுக்கு இவர்கள் இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளிபோடாதவர்கள்..

அட ஆதரவுதான் கொடுக்கவேண்டாம்..குறைந்தபட்சம் பார்வையாளராகவாது இவர்க்ள் வந்து இருக்கவேண்டாமா..

இலவசம்,தன்னார்வம்,கட்டற்ற மென்பொருட்கள் இதுப்போன்ற வார்த்தைகளை கேட்டாலே இவர்களுக்கு அலர்ஜி வந்துவிடும்.

தமிழ் மென்பொருட்களை விற்பது ஒன்றும் தவறில்லை..ஆனால் வியாபாரிகள் மட்டுமே வாழவேண்டும், தமிழ்ர்களுக்கு இலவசமாக எதையும் கற்றுக்கொள்ளகூடாது என்பதில் இவர்கள் மிகவும் குறிப்பாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசாங்க மானியம் தருகிறது என்றால் அடித்துபிடித்து வருவார்கள்.அரசாங்கம் நடத்தும் கணினி விழா என்றால் முதல் நாளே வந்து துண்டு போட்டு இடம் பிடிப்பார்கள்.


அரசாங்கத்திடம் மானியம் பெற்று உருவாக்கிய மெண்பொருட்களை மக்களிடையே காசுக்கு விற்பதில் இவர்கள் ஜித்தர்கள்.

இனியாவது தமிழ்ர்கள் இந்த எட்டபர்களை அடையாளம் கண்டுகொள்ளட்டும்


அன்புடன்
அரவிந்தன்.
பெங்களூர்

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!! பகுதி-1

பதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்!!!


சென்னை பதிவர் பட்டறை.

நானும் ஈ-கலப்பபை படைப்பாளியமான முகுந்த-ம் சனி இரவு ரயிலேறி ஞாயிறு காலை சென்னை வந்துசேர்ந்தோம்.

தானி பிடித்து அரங்கு வந்துசேர்ந்தபொழுது மணி 9.20. பெயர் பதிந்துவிட்டு சாப்பாடு சீட்டு மறக்காமல் கேட்டு வாங்கி அரங்கினுள் சென்று அமர்ந்தோம்..

எதிர்ப்பட்ட வலைப்பதிவர்களுக்கு முகமன் தெரிவித்து கொண்டு என்னை அறிமுகத்திகொண்டேன்..

அரவிந்தன் என்று என் பெயரை சொன்னவுடன் அரவிந்தன் நீலகண்டனா என்று அதிர்ச்சியுடன் பலர் கேட்டனர். அந்த கேள்வியின் தொனியில் இருந்து அவருக்கு வலைப்பதிவர் மத்தியில் ரொம்ப நல்ல(?) பெயர் இருப்பதை தெரிந்துகொண்டேன்.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த காசி ஆறுமகத்திடம் என்னை அறிமுகபடுத்திகொண்டவுடன்,என்ன அரவிந்தன் உங்க கால் செண்டர் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று மிகவும் அக்கரையுடன் விசாரித்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பெங்களுரின் பெயர் வெங்காலூர் என்று என்று சில வருடங்கள் முன் நான் போட்ட மொக்கை பதிவினை நினைவுகூர்ந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக 10.30 மணிக்கு தாமதமாக வந்த உருப்படாதது நார்யணன் “ நான் அப்பவே வந்துட்டேன் தல”சும்மா கடற்கரையில் காத்து வாங்கிட்டுருந்தேன் என்று தான் ஜொல்லு விட்டு கொண்டிருந்ததை பாலிஷ்-ஆக சொன்னார்..

தல பாலாபாரதி யாருன்னு கேட்டு கடைசியாக கண்டுபிடித்தேன்..ஒரு பாசமான தம்பியை அவர் உருவில் பார்க்க முடிந்தது..கழுத்து சூட்டு தற்பொழுது குறைந்து நலமாக இருப்பதாக சொன்னார்.

டோண்டு ராகவன் பட்டறை பற்றி தன்கருத்தினை சொன்னபொழுது சென்னைபதிவர்கள் சிலர் தமுக்குள்ளே குசுகுசு என்று பேசிக்கொண்டனர் அப்படியே சற்று நமட்டு சிரிப்புடன்.


இராம்கி அய்யா சாலமன் பாப்பையா மீது அதீத கோவத்தில் இருந்தார்(சிவாஜி பட அங்கவை சங்கவை விஷயத்தில்).

சிலர் சாப்பாடு பொட்டலங்களை மீச்சம் மீதியுடன் அங்காங்கே அதற்க்கென் உள்ள தொட்டியில் போடாமல் சென்றதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

காலை தேனீர் இடைவேளையின்போது ஜெய்சங்கர் அவர்கள் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை வீட்டாரை எப்படி சிறப்பாக கவனிப்பார்களோ அதுப்போல கவனித்தார்..

தமிழி தேர்ந்த கல்லூரி பேராசிரியர் போல் வகுப்பெடுத்தார்.கூட்டம் முழுவதையும் தன் பேச்சால் கவர்ந்தார்.பார்ப்பதற்க்கு கொஞ்சம் சினிமா நடிகர் போல இருந்தார்.

கிருபா ஷங்கர் பேச்சு மிகவும் எமாற்றமளித்தது.முழுமையாக தயார்செய்து வரவில்லை என்று தெரிகிறது..

லக்கிலுக்..

தேனியைப்போல் சுறுசுறுப்பான இளைஞன்..இவனது உருவத்திற்க்கும், பேச்சிற்க்கும் சிறுதும் தொடர்பில்லை..
என்னடா மச்சி என்று தோழமையுடன் தோளில் கைப்போட்டு பேச தோன்றுகிறது அவரைப்பார்த்தவுடன்.

ஆபாசபின்னூட்டங்கள் போடுபவர்கள் மீது எதாவது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இகாரள் பிராகஷ் சொன்ன பதில்

சென்னை சைபர் கிரைம் பிரிவினர் இணையம் மூலம் நடைபெறும் பொருளாதர குற்றசாட்டுகள் மீததான புகார்க்ளுக்கு மட்டுமே உடனடி நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று சொன்னார்.


தொடரும்..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Friday, August 03, 2007

பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

சமீபத்தில் என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் கேட்டேன் சிங்கம் சிங்களாக வேட்டைக்குச் செல்லாதே லாஜிக் உதைக்குதே என்றேன்.

.அதற்க்கு அவர் ரஜினி சொல்ற பன்ச் டையாலாக்-ஐ கேட்டு அனுபவியுங்க ஆராயதிங்க.. அன்று பாட்சா வில் ரஜினி சொன்ன "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" அதில்கூட லாஜிக் கிடையாது(1 என்றும் 100 ஆகாது என்ற லாஜிக்)..

ஆனால் அன்று தமிழ்நாடே அந்த வசனத்தை பேசி மகிழ்ந்தது..

ஆகவே பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

அன்புடன்
அரவிந்தன்