பிரபல தெலுங்க நடிகர் சோபன் பாபு நேற்று காலை சென்னையில் மாராடைப்பால் மரணமடைந்தார்.
இவருக்கு வயது 73. எராளமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார்.
அன்னாரது உடல் தகனம் இன்று சென்னையில் நடக்கிறது.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலி
இவர் பிரபல தமிழக அரசியல் புள்ளியுடன் ஒருகாலத்தில் இணைத்து பேசப்பட்டவர்.
விவாகரத்து பெற்ற பின்னரும் நடிகர் இரகுவரன் மரணத்திற்க்கு முன்னாள் மனனவி ரோகினி வந்திருந்தார்.
அதுப்போல் சோபன் பாபுவின் மரணத்திற்கும் அந்த அரசியல் புள்ளி வருவாரா
அரவிந்தன்
Friday, March 21, 2008
Saturday, March 01, 2008
எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி

பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன் இறந்துபோன மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவர் எழுதிய " அது ஒரு நிலா காலம்" என்ற தொடரின் மூலம் அவர் எழுத்து எனக்கு அறிமுகமாகியது.
நான் வெகுவாக விரும்பி படித்த தொடரது.
எனது கண்ணீர் அஞ்சலி
அரவிந்தன்
Thursday, February 28, 2008
எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!!!

பல முறை உங்களை கடுஞ்சொல்லால் வசை பாடியிருக்கிறேன் அம்பலம் விவாதகளங்களில்.
ஒரு முறையேனும் சினம் கொள்ளாது பதில் அளித்த உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வரும்.
உங்களை கடுமையாக குற்றம்சாட்டி எழுதி வந்த எங்கள் கண்களிலும் கண்ணீர் துளிகள்.
உங்கள் எழுத்துகள் எங்களை விட்டு என்றும் பிரியாது.
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!!
Monday, November 26, 2007
சகரத்தை மீட்போம்
காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாக சகரத்தை "ச" (cha) என்று சரியாகவே ஒலிப்பர்.
காவிரிக்கு வடக்கே அச் சகரம் ஸகரம்மகிச் சோறு (choru) என்பது ஸோறு என்றும், செல்வம்(Chelvam) என்பது ஸெல்வம்(selvam) ஏன்றும் திரிந்து ஒலிக்கும். சகரம் அவ்வாறு ஸகரமாவது தமிழ் எதிர்ப்பை தானறிந்த தன்வினையாகக்கொண்ட பார்பபானருக்கு எடுத்த கையாகியது.. அந்த ஸகரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (sha)ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
நேற்று வரை அவாள் இவாள் எனப் பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னாரெனக் காட்டிக்கொண்டனர். அந்த அவாள்,இவாள் சாதிநடை இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டமையால்,இன்று சகரத்தை ஷகரமாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.
க-------ங
ச-------ஞ
ட-------ண
த--------ந
ப--------ம
ஆகிய தமிழ் உயிர்ர்மெய்யெழுத்துக்களீல்,க,ச,ட,த,ப முதலான வல்லின் உயிர்மெய் எழுத்துக்களை விரிவாக்கியதாலேயே வட மொழிகளில் ka,kha,ga,gha போன்ற வருக்க ஒலியன்கள் தோன்றின. அவற்றில் "ச" வரிசையில் சகரமே (cha)முதல் எழுத்தாகும்.இதுவே தமிழில் ஸகரம் முதல் எழுத்தாக வரமுடியாது என்பதைக் காட்டும்.தமிழில்,அச்சகரமே ஒரு சொல்லுக்கு இடையில் ஸகரமாக ஒலிக்குமேயின்றி,ஸகரம் முதல் எழுத்தாக வரவே வராது. சகரம் (cha) மட்டுமே முதல் எழுத்தாக வரும்.அதனாலேயே ஸகரம் முதலான வடவொலி எழுத்துக்கள் வடிக்கப்பட்டன.
சரியாக ஒலிப்பதன் வாயிலாகச் சகரத்தை மீட்பது தமிழைக் கண்ணெனப் பேணும் தமிழ்காப்பு வினையேயின்றி வேறில்லை.
கருத்து உதவி:பெங்களூர் அறிஞர் குணா அவர்கள்
அன்புடன்

Saturday, November 17, 2007
சைக்கிள்-ல் டீ விற்க்கும் பெங்களூர் தமிழர்-ஆர்குட்-ல் ஹீரோ

பெங்களூர் மையப்பகுதியில் இருக்கும் எம்.ஜி சாலை,பிரிகேடு சாலை சந்திப்பில் இவரை இரவு நேரங்களில் பார்க்கலாம். தனது சைக்கிளில் நடமாடும் டீக்கடையை வெற்றிகரமாக 10 வருடங்களாக நடத்தி வருகிறார்.
ஆர்குட்-ல இவருக்காக மூன்று குழுமங்கள் செயல்படுகின்றன.அதில் முக்கியமானது முனிசாமி எம்.ஜி ரோடு என்ற பெயரில் செயல்படும் குழுமம்
இதில் 500-க்கும் மேற்ப்பட்டவர்கள் அங்கத்தினராக உள்ளனர். இந்த சைக்கிள் கடை டீக்கடைக்காரைப்பற்றி சுவையான விவதாங்கள்.முனிசாமி-யின் சொத்து மதிப்பு என்ன ,முனிசாமியின் கடையில் பிடித்தது என்ன,போலிஸ் தொல்லையில் இருந்து இவர் எப்படி தப்பிக்கிறார்.முனிசாமியின் காணமல் போன் உதவியாளர் போன்ற சுவையான விவாதங்கள்.
சாலையில் இரவுநேரத்தில் சைக்கிள்-ல் டீ விற்று பிழைப்பு நடத்தும் இந்த தமிழரை ஆர்குட்-ல் ஒரு ஹீரோ அளவிற்க்கு பெருமைபடுத்தியிருக்கும் பெங்களூர் இளைஞர்களூக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள்
அன்புடன்
அரவிந்தன்
Wednesday, November 14, 2007
அழகான ரோடுதான் அதுமேல அழகான பொண்ணுங்கதான்
சென்ற வருடம் அலுவலக நண்பர்களோடு வாரயிறுதியில் சுற்றுலா சென்ற போது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலையில் எடுத்த புகைப்படங்கள். எல்லோரும் புகைப்பட போட்டிக்கு ஆளிலில்லாத சாலைகளை படம்பிடித்து போட்டார்கள், நாம கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பொண்ணுங்களையும் படம் பிடித்து போட்டு இருக்கேன்.
அன்புடன்
அரவிந்தன்
Wednesday, November 07, 2007
சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.
சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)
சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.
உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்
முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.
முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு சுடிதார் மூலம் முழுவதும் மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன
பெண்யியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன

Subscribe to:
Posts (Atom)