பிரபல தெலுங்க நடிகர் சோபன் பாபு நேற்று காலை சென்னையில் மாராடைப்பால் மரணமடைந்தார்.
இவருக்கு வயது 73. எராளமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார்.
அன்னாரது உடல் தகனம் இன்று சென்னையில் நடக்கிறது.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலி
இவர் பிரபல தமிழக அரசியல் புள்ளியுடன் ஒருகாலத்தில் இணைத்து பேசப்பட்டவர்.
விவாகரத்து பெற்ற பின்னரும் நடிகர் இரகுவரன் மரணத்திற்க்கு முன்னாள் மனனவி ரோகினி வந்திருந்தார்.
அதுப்போல் சோபன் பாபுவின் மரணத்திற்கும் அந்த அரசியல் புள்ளி வருவாரா
அரவிந்தன்
2 comments:
உங்க பதிவு ஜெ ஜே என பிரமாதமாக இருக்கு சார்.
புள்ளிராஜா
தமிழகத்தின் மற்றொரு பெரும்புள்ளி ஒருவருக்கு பல தொடுப்புகள் உண்டு என்று(ம்) கூட கேள்வி. அவர்களது சுக துக்கங்களுக்கு அவர் போயிருக்கிறாரா என்று கேள்வி எழுப்ப தைரியம் உண்டா?
அதுவுமில்லாமல் ரகுவரனின் மனைவியாக இருந்தார் ரோகிணி. பிறகு விவாகரத்து பெற்றார். நீங்கள் குறிப்பிடும் சோபன்பாபு மேட்டர் அப்படியா? எழுத இடம் இலவசமாக இருக்கிறது என்பதற்காக எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்ககூடாது. உங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி தரக்குறைவாக இப்படி எவனாவது பேசினால் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பீர்களா?
மற்றொரு அரசியல்வாதி குறித்து பல தகவல்கள் இப்படி உண்டு.
துணைவியார் என்று குறிப்பிட்டுள்ளவரை அவர் என்ன திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதை தைரியமாக அறிவிக்க முடியுமா? ரிஜிஸ்தர் திருமணமா, சீர்திருத்த திருமணமா, அல்லது எப்படி? அப்படி திருமணம் செய்து கொள்ளவில்லையெனில் அந்தப் பெண்மணி யார்? இப்படி நிறைய கேள்விகள் எதிர்தரப்பிலும் கேட்க முடியும்.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது நியாயமா?
மனசாட்சியை கேட்டுக் கொள்ளுங்கள்.
Post a Comment