Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வன் வீரச்சாவு.தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் திரு.தமிழ்ச்செல்வன் இன்று காலை ஸ்ரீலங்கா அரசின் விமானப்படைப்தாக்குதலால் வீர மரணமடைந்துள்ளார்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவகையில் ஈழ மக்களின் இனப்போராட்டத்தில் அக்கரை கொண்டுள்ள ஒவ்வொரு தமிழ் பதிவரும் இன்று ஒரு நாள் புதிய பதிவு எது இடாமல்(தமிழ்செல்வன் தொடர்பான பதிவுகள் மட்டும் விதிவிலக்கு) அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

வருத்ததுடன்
அரவிந்தன்

7 comments:

லக்கிலுக் said...

உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பதிவு மட்டுமல்ல. எங்கும் பின்னூட்டங்களும் போடமாட்டேன்.

Kasi Arumugam said...

அரவிந்தன்,
தமிழ்ச்செல்வன் பற்றிய செய்திகள் வரலாமே. மற்ற பொருளில் எழுதுபவருக்கு இந்த வேண்டுகோள் வைக்கப்படலாம்.

அரவிந்தன் said...

நன்றி காசி,

நீங்கள் சொல்வதும் சரிதான்.பதிவினை சற்றே மாற்றிவிடுகிறேன்.தமிழ்ச்செல்வன் தொடார்பான பதிவுகள் மட்டும் எழுதலாம் என்று.

அரவிந்தன்

thiagu1973 said...

உங்கள் வேண்டுகோளை கவனிக்க தவறிட்டேன் நண்பரே

தமிழ் said...

இதை அனைவரும் ஏற்போம்.

Thamizhan said...

எதிரியையும் புன்சிரிப்பில்

வரவேற்ற வீரனே!

உன் முடிவில் மகிழ்வடையும்

வீணர் முடிவு நெருங்கிவிட்டது!

Anonymous said...

எனக்கு மனவருத்தமாக இருக்கிறது

என்னுடய அலுவலகத்தில் காசு சேர்க்கின்றார்கள் சிங்களவர்கள். வெற்றியை கொண்டாடுவதற்கு....என்னிடமும் வந்து கேட்டார்கள்...நெஞ்சு வலிக்கிறது...உயிர் என்று சொல்கிறீர்கள்..நாங்கள் இராணுவம் இறந்தால் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறோமா????

துரோகிகள் இருக்கும் வரை சிங்கள்வர்களுக்கு வெற்றி தான்....

நான் ஒரு நாளும் பிரித்து பார்ப்பதில்லை...எப்பொழுது இந்த அலுவலகம் வந்தேனோ......90% வீதமான சிங்களவர்கள் மிருகம் என்பதை உணர்ந்து கொண்டேன்.