Tuesday, October 02, 2007

"சேது சமுத்திரம்"உருப்படாதது நாரயணுக்கு சில"நச்"கேள்விகள்!!!

//இப்போது சென்னையில் பந்த் [திமுகவின் பாஷையில் ஸ்ட்ரெக்] ஒரு வேலையும் நடக்காமல், வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு என்.டி.டி.வி ப்ராபிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன்//

போராட்டத்திற்க்கு தார்மீக அதரவு கொடுத்து வீட்டில் இருந்த உங்களுக்கு நன்றி

//இது போக, அம்பிகா சோனிக்கு கீழ் வரும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, எடுத்தேன் கவிழ்தேன் என்று, ராமர் இருந்ததை நிரூபிக்க முடியாது என்று சொல்லப் போக, பழம் நழுவி,பால்,வாய்//

இல்லாத கற்பனை கதாபாத்திரத்தை இல்லை என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்.?//ஜல்லி No.1: பி.ஜே.பி நாக்கை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன் என்று பேசிய வேந்தாந்தியினை கண்டித்திருக்கிறது. உங்களால், அதைப் போல, தமிழகத்தில் கருணாநிதியினை கண்டிக்க முடியுமா ?//

கண்டிக்க வேண்டிய அளவிற்க்கு அவர் என்ன சொன்னார்.தர்க்க ரீதியாக கேள்வி கேட்டார் அது தவறா..தர்க்க ரீதியாக கேள்வி கேட்பதும்,தலையை கொய்து வர சொல்வது ஒன்றா எந்த ஊர் நியாயம் நாரயண் இது..?1

950- முதலியார் குழு கொடுத்த அறிக்கையில் இது 9 கோடியில் முடிக்ககூடிய லாபம் தரும் திட்டம் என்று சொல்லபட்டுள்ளேதே அது தெரியுமா.இந்திய அரசாங்கத்தின் NEERI என்ற சுற்றுப்புற சுழல் அமைப்பு இத்திட்டத்திற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளேதே பார்க்கவில்லையா அல்லது பார்க்க மனமில்லையா

//சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது.//

ஏன் 30 ஆயிரம் டன் சுமக்கும் கப்பல்களே இவ்வுலகில் இல்லையா எராளமான உள்ளூர் கப்பல்கள் 30 ஆயிரம் டன் மட்டுமே சுமக்கும் திறன் கொண்டவை.

//ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாதபாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?//

எந்தவித வளர்ச்சி திட்டத்திலும் சில சுற்றுபுற சீர்கேடுகள் இருக்கத்தான் செய்யும்.அது எந்த அளவிற்க்கு நம்மை பாதிக்கச்செய்யும் என்று பார்க்கவேண்டும்.மீன் கிடைக்கவில்லையென்று இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்துவிட்டு குண்டடிப்பட்டு சாவுறான் தமிழன் இந்த லட்சனத்தில மீன் இனம் பாதிக்குதுன்னு நீங்க சொல்றிங்க.

ஒரு வளர்ச்சி திட்டத்தை இல்லாத கடவுளின் பெயரால் முட்டுக்கட்டை போடும் போது அந்த கடவுளை கேலி செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினர் சுற்றுப்புறசுழல் பாதிப்பு பற்றி மட்டும் பேசியிருந்தால் கலைஞர் ஏன் ராமனைப்பற்றி பேசியிருக்கபோகிறார்.

ராமன் பெயரால் முட்டுக்கட்டைபோட நினனைக்கும் போது அந்த ராமனை முச்சந்தியில் நிறுத்தி விமர்சனம் செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினரை "சேது சமுத்திரம் " திட்டத்தில் உள்ள பொருளாதார,சுற்றுப்புற சூழல் பற்றி மட்டும் பேச சொல்லுங்கள். அதன்பிறகு நாங்கள் ஏன் ராமரைப்பற்றி பேச போகிறோம்.?

கலைஞர் புட்டபர்த்தியை பாராட்டினார் ஆம் உண்மைதான் அதே பாபா எதாவது மக்கள் நல திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவரை முதலில் கலாய்ப்பது நாங்கள்தான்.

//நாராயணன் இந்துக்களைப் பற்றி பேசி, தன்னுடைய அடிப்படை நிறத்தினை நிறுபிக்கிறான் என்று இந்த பதிவினை நீங்கள் மொத்தமாக திசை திருப்பலாம்//


இது வரை நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இப்படியும் திசை திருப்பலாம் என்று நீங்கள் சொன்னதற்க்கு நன்றி.

தொடக்கத்திலிருந்தே திசை திருப்பல் பற்றி நீங்கள்தான் பேசிவருகிறீர்கள்.ஆக உங்கள் உள் மனது திசை திருப்பலை விரும்புகிறது.

மெல்ல பூனை பையிலிருந்து வெளி வரத் ஆரம்பித்திருக்கீறது.

அன்புடன்
அரவிந்தன்

3 comments:

மாசிலா said...

நல்ல அலசல். சரியான பதில்கள்.

உலகம் போகிற வேகத்தில், இன்றும் நாம் பழைய பஞ்சாங்க கசடுகளின் பிடிகளில் மாட்டி சிக்கி முன்னேற முடியாமல் திணறிக்கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

வெளியில் இந்தியாவை சுற்றிலும் பகைவர்கள் ஒரு புறம் என்றால், உள்ளே அதைவிட கொடூர புத்தியுடைய பாதகர்கள் இன்னும் அதிகம்.

நாட்டின் உள் இதுபோன்ற கேணையர்கள் செய்யும் கூத்துகளை கவனிக்கும் அந்நிய விச சக்திகளுக்கு நாட்டை கெடுக்க ரொம்ப வசதியாக போய்விடும்.

இது எங்கு போய் முடியுமோ?

மக்கள்தான் நம்பிக்கை இழக்காமல் தைரியத்துடன் தொடர்ந்த விழிப்புணர்வு கண்கானிப்புடன் இருந்து வரும் இளைய தலைமுறைகளுக்கு நல்லதொரு சமுதாயத்தை அமைத்து தர அயராமல் போராட வேண்டும்.

பதிவிற்கு நன்றி.

Anonymous said...

திட்டத்தை ஆரம்பிக்காது இருந்தால் பரவாயில்லை. ஏற்கெனவே
மூவாயிரம் கோடி செலவழிந்த பின் உலக வங்கியில் கடன்
எக்கச்சக்கமாக வட்டியும் ஏறிக்கொண்டிருக்கும்போது முட்டுக்கட்டை
போடுவது அபத்தம். இந்த வீணாகும் பணத்தை ராமரோ, செயலலிதாவோ
கொடுப்பார்களா? விடிய விடிய சப்ட்வேர் எழுதுபவன் இன்னும் கடுமையாக
வேலை செய்து வரி கட்டவேண்டும்.

எல்லா வளர்ச்சி திட்டங்களும் சுற்றுப்புற சூழலை அழிக்கதான் செய்கிறது.
வளர்ச்சியே வேண்டேமென்றால் மரத்தின் மீதுதான் வீடு கட்டி
குடியிருக்க வேண்டும்.

Anonymous said...

tamil naatirku thanni thaan vida maatringa.....
ada kappalaiyavathu vudugappa....