Friday, October 12, 2007

நட்சத்திர பதிவர் வள்ளி-க்கு சில "நச்" கேள்விகள்

நட்சத்திர பதிவர் இ.கா.வள்ளி எழுதிய பெங்களுரில் தமிழர்களின் அலும்பு என்ற பதிவினை படித்தவுடன் பதிவர் வள்ளி-க்கு என்னுடைய கேள்விகளை பின்னூட்டமாக இட்டேன்.இதுவரை அதுப வெளியிடப்படததால் அவற்றை இங்கே வெளியிடுகிறேன்.


//சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின்

அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில்

ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப்

பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...//


இதனை யார் எழுதியது என்றும் எனக்கு

தெரியும்.இதிலென்ன தவறு கண்டீர்கள். பெங்களுர்

என்பதால தமிழ் என்ன உலகின் கடைசி மொழியாக

மாறிவிடுமா..உலகின் எந்த விடத்திலும் தமிழே முதன்

மொழி.


//அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக்

கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட

வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில்

ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று

கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை

விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது

என்று நக்கல் விட வேண்டியது.//


தமிழ் வீட்டு விஷேங்களில் தமிழ் பாட்டு போடாமல்

வங்காள,ஒரியா பாட்டா போடுவார்கள்.?


//
கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட

நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது,

அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும்.

நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு

கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்//


சும்மாயிருங்க வள்ளி,உங்களை மாதிரி இப்ப

வந்தவங்களுக்கு வேண்டுமான ராஜ்குமார் தெரியாமா

இருக்கலாம்.இங்கேயெ இருக்கிற தமிழர்கள்

எல்லோருக்கும் ராஜ்குமார் நல்லா தெரியும்.



//அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து

தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு

அலையவேண்டியது//

இப்படி சொல்றதுல உங்களுக்கென்ன

கஷ்டம்.உண்மைதானே உங்களுக்கென்ன கசக்குது.

தமிழ் நாட்டில் கூட தமிழ் படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம்.இங்கே அப்படி முடியாது.யாரயிருந்தாலும் கன்னடம் படித்தே தீரவேண்டும்.

பெங்களூர் தமிழ்சங்கம் இதுவரை 50,000(ஐம்பாதயிரம்) மேற்ப்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு..

கூந்தல் இருக்கிறவ அள்ளி முடிச்சிக்கிறா இதுல உங்களுகென்ன சலிப்போ தெரியல

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

5 comments:

Anonymous said...

இந்த பதிவு...கோவத்தினாலா அல்லது ஆதங்கத்தினாலா?

ரவி said...

இ.கா.வள்ளிக்கு பெங்களூர் தமிழ் சங்கம் என்பது எங்கே இருக்கு என்பது தெரியுமா என்பது சந்தேகம்...

பெங்களூரில் உள்ள மொத்த தமிழர்கள் எண்ணிக்கை என்ன என்று அவர்கள் சொல்லிவிட்டால் நான் பதிவு எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்...

Anonymous said...

எனக்கும் நட்சத்திரப்பதிவுகள படிக்கும் கொஞ்சம் போது லூசுத்தனமாத்தான் இருந்துது. இந்த மாதிரி படிவு போட்டா ஒடனே "இவனுகளுக்கு பொச்செரிச்சல்" நு நெனச்சிக்குவாங்கப்பா.

Anonymous said...

//இ.கா.வள்ளிக்கு பெங்களூர் தமிழ் சங்கம் என்பது எங்கே இருக்கு என்பது தெரியுமா என்பது சந்தேகம்...

//

அய்யா எனக்கு அது தெரியாதுனு உங்களுக்கு யார் சொன்னா, பெங்களூரரில் உள்ள தமிழர்களின் நிலையை சீரியஸாகப் ப்படவேண்டுமென்றால் என் நட்சத்திர வாரம் போதாது... உங்களைப்போல் இங்கேயே பிறந்து வளராவிட்டாலும் வந்த 3 ஆண்டுகளில் நிறைய படித்து தெறிந்து கொண்டு தான் இருக்கின்றேன்...

//
பெங்களூரில் உள்ள மொத்த தமிழர்கள் எண்ணிக்கை என்ன என்று அவர்கள் சொல்லிவிட்டால் நான் பதிவு எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்...
//

எதாவது புள்ளிவிபரத்தைப்பார்த்தால் தெரியப்போகின்றது... அல்லது நானே வீட்டுக்குவீடு போய் கணக்கெடுக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா? எனக்கு தான் விளங்கள.....!?

Anonymous said...

அரவிந்தன், உங்களுடைய அனைத்து ஆதங்களையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன், ஒரு நகைச்சுவைப்பதிவு போடலாமேனு மாட்டிக்கொண்டேன்னு நினக்கின்றேன்... நானெல்லாம் என்னென்ன அலும்பு பண்ணுவோம் தெரியுமா?

அலுவலகத்தில் உள்ள தொலைகாட்சிப்பெட்டியில் சன் மியூசிக்கே தான் ஓடும், அலுவலக கேபில் தமிழ்பாட்டைப்போடச்சொல்லி கேட்காததால் "அராஸ்மென்ட்டுனு" மாட்டிவிட்டு ஓட்டுநரையே நீக்கியதெல்லாம் உண்டு... கூலாக தமிழ் வெப்சைட் பார்ப்பது, உலகிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்து, தமிழில தான் நிறைய வலையில் உள்ளதாகக் கூறிக்கொள்வது... "சாகர்" உணவு விடுதிகளைப் பார்த்து முகம் சுழித்துவிட்டு கால் கூட பட்டதில்லை என்று கூறிக்கொண்டு அலைவது என்று.. பலப் பல...

மனதை மெய்யாலுமே புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்க ஆயத்தமாயுள்ளேன்