Monday, October 01, 2007

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.?

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றம்.

.மக்கள் தங்களின் உணர்வுகளை அறவழியில் வெளிபடுத்தியும் அதனை கிண்டல் செய்யும் இட்லி வடைகள்.(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)

பொருளாதார வளம் தரும் திட்டங்களை இல்லாத ராமன் பெயரில் தடைப்போட நினைக்கும் பரதேசி கட்சிகள்..

வருடகனக்கில் காவேரி,முல்லை பெரியாறு பிரச்சினைக்கு நிரந்த முடிவு சொல்லாத ---நீதிமன்றம்., சொன்ன தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசினை கலைக்க சொல்ல தைரியம் இல்லாத ....நீதிமன்றம்

12 வருடங்களாக இழத்தடிக்கும் ஜெயலலிதான மீதான அன்னிய செலவாணி வழக்கை இன்னும் முடிக்காம இருக்கும் ....நீதிமன்றம்.

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்

அன்புடன்
அரவிந்தன்

5 comments:

Thamizhan said...

ஊரையும் உலகத்தையும் ஏமாற்றப் பார்க்கும் அறிவு ஜீவிகள் அவமானப் பட்டுப் போவது தான் தெரிகிறது.
கோவில் கருவறைகள் 30 ஆண்டு போராட்டத்தின் பின்னர் திறக்கப் பட வைத்துள்ளவர்கள்,இந்திய இன வாதத்தின் கருவறையாம் உச்ச அநீதி மன்றத்தின் கதவுகளை உடைத்துத் திறக்க வைக்கப் போகிறார்கள்.

அப்போதுதான் படித்து விட்டதாக நினைக்கும் இனவாத,மத வாதக் கோமாளிகள் அறிவு பெறுவார்கள்.

Anonymous said...

ஓய மாட்டோம்.. ஓயமாட்டோம்

முக அழகிரி தலைமை நீதிபதியாக தமிழர் தலைவரால் நியமனம் செய்யப்படும் வரை ஓயமாட்டோம்.

வாழ்க திராவிடம் வாழ்க கலைஞர்

அரவிந்தன் said...

அனானி

நியாயமான பிரச்சினையை நேர்மையான முறையில் எழுதினால் அதனை பகடி செய்ய நினைக்கிறீர்கள்.

சேது சமுத்திரம் பிரச்சினையை மட்டும் நாம் விவாதிப்போம்.

மு.க.அழகிரிப்பற்றி வேறோரு நேரத்தில் பேசலாம்

Anonymous said...

Hello Aravind..

Your Anger on the Political Parties are justified. But I dont agree with your comments on Courts.

People from different states become Judges and they are not biased like the political parties. They go by law and give the judgement.

so you can blame the laws of Indian govt or democracy which gives us the right.

This comment is by Sathish Kumar.S.G.

Anonymous said...

//(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)//

che che appadiyellam illai....anaal yenna kadagalai thirnathaal kalladi thaan vizhilum..