Sunday, September 06, 2009

லக்கி யுவகிருஷ்ணா வுக்கு நச் கேள்விகள்!!!

பதிவர் லக்கி என்றழைக்கப்படும் யுவகிருஷ்ணா அவர்களின் உதிரத்துணி என்ற பதிவிற்க்கான எதிர் பதிவு

//இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன்//

என்ன லக்கி உண்மையிலே தெரியாதா அல்லது தெரியாதமாதிரி நடிக்கின்றீர்க்ளா..
80-களின் இறுதி வரை யாழ் மாவட்டத்தில் காவல் துறை உட்பட அனைத்து அரசு துறைகளும் முழுமையாக தமிழர்களால் நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் யாழ் நகரில் செயல்பட்ட அரசு காவல்துறை சிங்கள அரசு சார்பாகத்தானே செயல்பட்டிருக்கும்.

ஈழப்போரட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களின் வரலாறு தெரிந்துகொள்ளாமல் போனது யார் தவறு லக்கி.?


//முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்//

இதில் என்ன புரிதலில் தவறு கண்டீர்.?

வரலாறு புரியாமல் தமிழர்களின் உணர்வினை கொச்சைபடுத்தார்தீர்கள் லக்கி.

தமிழர்கள் என்ன கடந்த முப்பதாண்டுகளாக சிங்களவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டார்களா.

சிங்களன் மட்டும் தமிழனை கொல்லவில்லை,தமிழனும் தமிழனை கொன்றான் என்ற கருத்தியலை நிறுவப்பார்பதன் அவசியம் என்ன.?

30,000 தமிழர்கள் ஓர் இரவில கொல்லப்பட்டத்தை கண்டு மனமொடிந்து வருத்தப்பட்டவர்கள் எல்லாம் முட்டாள்களா.?


//விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.//

நான் கூட நினைத்தேன் லக்கி ”தமிழனத் தலைவர்” தமிழர்களுக்கு எதாவது துன்பம் வந்தால் பதவியை துறந்தாவது தமிழர்களை காப்பாற்றுவார் என்று.

30,000 தமிழர்கள் கொல்லப்பட்ட அன்று பதவிக்காக டெல்லி நகரில் காவடி தூக்கிகொண்டு அலைந்தவரும் ஒரு தமிழர்தானே லக்கி.அன்று டெல்லியில் பதவிக்காக அலைந்தை பார்த்தபோது எனக்கு எற்ப்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை லக்கி.


இப்படியிருக்கையில் காவல்துறையில் இருந்த ஒரு தமிழன் கொடுமைபடுத்திய ஒரு சம்பவத்தினை வைத்துகொண்டு தமிழர்களின் உணர்வினை கேள்விகுறியாக்காதீர்கள் லக்கி

புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் புலி எதிர்ப்பு புராணம் பாடி பிழைப்பு நடத்தும் சோபா சக்தியின் புலியெதிர்ப்பு அரசியலை வேறு வகையில் நிறுவப்பார்க்கும் ஒரு செயலாகவே உங்கள் பதிவினை பார்க்கின்றேன்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

8 comments:

Jerry Eshananda said...

வழி மொழிகிறேன்.

Anonymous said...

வழி மொழிகிறேன்.
MAthi

ரவி said...

முழுமையாக வழிமொழிகிறேன்.

சோபா சக்தி பதிவுக்கெல்லாம் லிங்க் கொடுத்தால் துட்டு வாங்கிட்டதாக கெட்ட பெயர் வரும் என்பதை யுவக்ருஷ்ணாவிடம் தெரிவித்துவிடுங்கள்.

புரட்சிகர தமிழ்தேசியன் said...

கலைஞரை திட்டினால் ஜெ ஆதரவாளர்..ஜெ யை திட்டினால் கலைஞர் ஆதரவாளர் இப்படித்தான் இந்த திராவிட கழிவுகள் மக்களை இங்கு சிந்திக்க வைத்துள்ளன.. ஈர விறகு தமிழன் என்று குமுதத்தில் ஒரு கட்டுரை கலைஞரை சாடி ஒருவர் வரைந்தார்.. அதற்கு முரசொலியில் நேர் வினை கருநாகம் இப்படித்தான் எழுதி இருந்தது" நம்மை இவ்வளவு சொல்கிறாரே அந்த ஈர விறகு தமிழன் அவருக்கு ஜெயலலிதாக்கும் ஏதோ ஒரு பாபுக்கும்(பெயர் நினைவில் இல்லை) உள்ள தொடர்பு தெரியுமா?" என அய்யா அறிவுள்ளவர்கள் சற்று சிந்தியுங்கள் கட்டுரை ஈழதமிழர்களுக்கு எதுவும் கருநாகம் செய்யவில்லை என்பது.. அதற்கு பதில் செயலலிதாவிற்கு யார் யாருடன் தொடர்பு என்பதா?

இவர்களை சொல்லி குற்றம் இல்லை.. மக்கள் இந்த இரண்டையும் தாண்டி சிந்திக்க தலைபட்டால் இவர்கள் வயிற்று கஞ்சிக்கு அதோ கதிதான்..
தோழர்! லக்கிலுக் அவரின் பதில் இப்படித்தான் இருக்கும். கொடநாட்டில் ஒய்வு எடுத்துகொண்டிருக்கு உங்கள் ஈழதாய் ஈழத்திற்கு என்ன செய்து கிழித்தார்?

ரவி said...

லக்கி பற்றிய அநாகரீக பின்னூட்டம் ஒன்று உள்ளது, கொஞ்சம் நீக்குங்களேன்

அரவிந்தன் said...

செந்தழல் இரவி,

அந்த அநாகரிக பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

Anonymous said...

//செந்தழல் ரவி said...
லக்கி பற்றிய அநாகரீக பின்னூட்டம் ஒன்று உள்ளது, கொஞ்சம் நீக்குங்களேன்//

ரவி அந்த பின்னூட்டத்தை நீங்களே போட்டு நீங்களே அழிக்க சொல்றீங்க. நல்லா போடுறீங்க சார் வேஷம்.

The Kid said...

நீங்க ரொம்ப நல்ல எழுதறிங்க...

Would you like to see other writers? www.zeole.com This is a website that I am creating, as a way to help everyone share ideas to a whole community...

அது என்னுடைய ஒரு சிறு முயற்சி. வந்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தால், உங்கள் ப்ளாகை விளம்பரம் செய்து பாருங்கள். உங்கள் ப்ளாக் சென்னை முழுவதும் பிரபலம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

Try zeole.com ... A few other writers are trying it right now.

:)