இன்று சென்னையில் மேலும் ஒரு தமிழர் தீ குளித்தார்..
சென்னையில் இன்று தி.மு.க நடத்திய இளைஞர்கள்சங்கிலியில் சைதை பகுதியை சேர்ந்த திரு. சிவப்பிரகாசம்(60 வயது) " மனித சங்கிலி, அறப்போராட்டம் எல்லாம் பயன் தராது" என்று கூறியபடியே தீ குளித்து உடனடியாக இறந்து போனார்.
இளைஞர் சங்கிலி நிறுத்தப்பட்டது...
2 comments:
ஈழத்தமிழருக்காக திமுக பிரமுகர் சென்னையில் தீக்குளிப்பு
இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.
இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி. தற்போது சிட்டிபாபு நினைவு மன்ற செயலாளர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி 1999ல்(வி.ஆர்.எஸ்) ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர்.
ஈழத்தமிழர்களை காப்பாற்ற முதல்வருக்கு வேண்டுகோள்:தீக்குளித்த சிவப்பிரகாசத்தின் கடிதம்
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவப்பிரகாசம்(வயது 60) கிண்டியில் திமுக இளைஞர் சங்கிலியில் கலந்துகொண்டார்.
அப்போது திடீரென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தபடி தீக்குளித்தார்.
இளைஞர் சங்கிலியில் இருந்தவர்கள் தீயை அணைக்க போராடினர். தீயை அணைத்ததும் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.அங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த அவரை மு.க.ஸ்டாலின் பார்க்க வந்தார். அவரிடம் தீக்குளிப்பதற்கு முன்பு சிவப்பிரகாசம் தனது கைப்பைக்குள் எழுதி வைத்துள்ள கடிதத்தை கொடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில், ‘தமிழக முதலவர் அவர்களே இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். அங்கே கொல்லப்படும் நம் குலத்தை காப்பாற்றுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
Post a Comment