Monday, February 09, 2009

பெங்களூரில் ஈழத்தமிழர் இனப்படுகொலை எதிர்த்து அறப்போராட்டம்-

உலகத் தமிழ் மக்கள் அரங்கின் இளைஞர் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பிரிவின் சார்பாக, இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலை மற்றும் இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டிக்கும் வண்ணம் வருகிற 15 ஆம் நாள் (15th Feb 2009) ஞாயிற்றுக் கிழமை பெங்களுர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக ஒரு கவன ஈர்ப்பு அறப்போர் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெறும் இந்த அறப்போரில் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழ் மக்கள் அரங்கின் சார்பாக வேண்டுகிறோம்.

உங்களையும் உங்கள் குழுவினரையும் இந்த கவன ஈர்ப்பு நிகழ்விற்கு வருமாறு அழைப்பதுடன் உலகத் தமிழர்களின் உணர்வுகளை உங்கள் ஊடகம் வாயிலாக உலகிற்கு அறியத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.

தங்கள் வருகையையும் மேலான ஆதரவையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

நாம் விரும்பும் மாற்றங்கள் நம்மிடம் இருந்தே துவங்கட்டும்

ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டு உள்ளம் கொதிக்கும் உலக தமிழ் உறவுகளே. நம்மிடம் தேவை ஒரு சொட்டு கண்ணீர் மாத்திரம் அல்ல. நாம் இருக்கும் தளங்களில் இருந்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பெங்களூர் தமிழன் ஒவ்வொருவனும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நம் உணர்வுகளை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம்.

தோழர் முத்துகுமார் ஈழத்தின் போர்நிறுத்தத்திற்காக தான் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் அரைநாளை கொடுக்க முடியாதா?

இதை வாசிக்கும் தோழர்கள் அனைவரும் இந்த செய்தியை பரப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசிமூலமாகவும் இந்த போராட்ட நிகழ்வினை பெங்களூர்வாழ் தமிழனுக்கு தெரியப்படுத்தி போராட்டத்திற்கு வலு சேருங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

கை.அறிவழகன் - 9945232920
வெங்கடேசன் - 9731037427
வேல்முருகன் - 9886841710
தமிழன்பன் - 9980799572

3 comments:

அக்னி பார்வை said...

போரட்டாம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. நான் என் நன்பர்களௌக்கும் தெரியபடுத்தியுள்ளேன்.

thiru said...

இந்திய மற்றும் உலக ஆதிக்கங்களின் ஆதரவுடன் இன அழிப்புக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குரலெழுப்பும் உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் அரவிந்தன்!

சாந்தி நேசக்கரம் said...

ஈழத்தாருக்கான தங்கள் ஆதரவுக் கரங்களை நேசமுடன் பற்றிக் கொள்கிறேன்.