Saturday, November 29, 2008

இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா.??

புதன் இரவு 12.30 மணியிலிருந்து தொடர்ந்து சனிக்கிழமை காலை 11.30 வரை எறத்தாழ 44 மணி நேரம் தொடர்ந்து தொலைகாட்சியில் மூழ்கிவிட்டேன்.


மகள் பார்க்க ஆசைப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியினைகூட பார்க்க அனுமதிக்காகமல் செய்தி தொலைகாட்சிகளை பார்த்து கொண்டிருந்தேன். இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா என்று மகள் கேட்ட போது மும்பையில் எல்லாமே முடிந்துவிட்டிருந்து. :(-

இப்படி தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்ததால் என் மகள் தெரிந்து கொண்ட (தேவையே இல்லாத) விஷயங்கள்

ஏ.கே 47,வெடிக்குண்டு,5 நட்சத்திர விடுதி அமைப்புகள்,அறை வாடகை,பாகிஸ்தான் தீவிரவாதம்,முஸ்லீம் தீவிரவாதம்,நெரிசல் மிகுந்த மும்பை வாழ்க்கை,கருப்பு பூனைப்படை,காமாண்டோ படை

என்னுடை செயலால் தேவையில்லாத விஷயங்களை என் மகள் மீது திணித்து விட்டேனோ என்று மனசாட்சி உறுத்துகிறது

மரத்துப்போன மனசு..என்ன செய்வதென்று தெரியாமல் அலுவலகம் நோக்கி காலார நடந்து வந்துவிட்டேன் :(-

4 comments:

குசும்பன் said...

//இப்படி தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்ததால் என் மகள் தெரிந்து கொண்ட (தேவையே இல்லாத) விஷயங்கள் //

இனி நாம் அன்றாடம் எதிர்கொள்ள போகும் பிரச்சினைகளை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்வதில் தவறு இல்லை! நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் தீயவர்கள் என்று சொல்லி கொடுங்கள்!

உங்கள் மகளுக்கு இது ஒரு சினிமா போலதான் அங்கும் துப்பாக்கி சண்டை இங்கும் துப்பாக்கி சண்டை ஆனால் களம் வேறு என்பதால் பக்குவமாக சொல்லி கொடுங்கள்!!!

Anonymous said...

குழந்தைகளின் உலகம் இப்படித்தான் பெரியவர்களால் களவாடப்படுகிறது..

த.அகிலன் said...

குழந்தைகளின் உலகம் இப்படித்தான் களவாடப்படுகிறது..

அக்னி பார்வை said...

தீவிரவாதிகளின் வெற்றியே நாம் இப்படி சோம்பி போய் விடுவதுத் தான், அதனால் மனௌறுதியை வள்ர்த்து கொள்வது தான் நிலையானது.

---------
உங்கள் குழந்தையை மெதுவாக புத்தகம் படிக்கம் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்....
----

தொடர்ந்து எழுதுங்கள்...