Tuesday, July 31, 2007

"ஐ மிஸ் யூ" -க்கு தமிழில் என்ன

நேற்று இரவு 2.30 மணி இருக்கும்..கைப்பேசியில் ஒரு அழைப்பு.அலுவலகத்தில் வேறொரு துறையில் இருக்கும் ஒரு இளைஞனிடமிருந்து..

எதோ அவரசம் போலிருக்கிறது அதான் இந்த நேரத்தில் அழைப்பு என்ற நினைத்த படியே என்ன விஷயம் என்று கேட்டேன்..

அண்ணே! எனக்கொரு அவரசமா ஒரு உதவி என்றான் என்ன சொல்லுப்பா என்றேன்.என் கேர்ள் பிரண்ட்-க்கு ஒரு ஐ மிஸ் யூ என்பதை தமிழில் எஸ்.எம்.எம் அனுப்ப வேண்டும்.ஐ.மிஸ்.யூ என்பதை எப்படி தமிழில் சொல்வது என்று கேட்டான்..இதுபோன்ற விடயங்களுக்கு நீங்கதான் சரியா ஆளு என்று கம்பெனி-ல பேசிக்கிறாங்க என்று பில்டப் கொடுத்தான்..

"உன்னை பார்க்காம தவியா தவிக்கிறேன்",

"என் தவிப்பு உனக்கு புரியுதா"

நீ இல்லாத தனிமை ரொம்ப வெறுமை"

என் மூன்று சொற்றொடரை சொன்னேன்..

நீங்க என்ன நினைக்கிறீங்க வேறு எதாவது பொருத்தமான வாக்கியம் இருக்கா..?

அன்புடன்
அரவிந்தன்

4 comments:

சின்னப் பையன் said...

நானா கல்யாணமாகத பொண்ணு நீயா?...:-)

அரவிந்தன் said...

என்ன சொல்ல நினைக்கிறிங்க புரியல

சின்னப் பையன் said...

ஐ= நானா; மிஸ்=கல்யாணமாகாத பொண்ணு; யூ= நீயா

ILA (a) இளா said...

உன் இன்மை உணர்கிறேன்..