என் நண்பர் நாரயணன் எழுதிய ஓணான் என்ற பதிவிற்க்கு நான் கொடுத்த பின்னூட்டம் இங்கே ஒரு பதிவாக
நாரயணன் எழுதியது.
-------------------------------------------------------------------------------------
ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா ?. ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன ?
-----------------------------------------------------------------------------------------
என்னுடைய பதில்!
அன்பு நாரயணன்!!!தங்களின் மேற்ச்சொன்ன விஷயம் எனக்கென்னவோ ஜல்லியடிக்கும் விஷயமாகவே தெரிகிறது..நகர வாழ்க்கை அப்படியொன்றும் தலை கீழாக மாறவில்லை.நகரமயக்காலிலும் இன்னும் பழமையை பார்க்கமுடியும் மனமிருந்தால்.இங்கு பெங்களுரில் என்னால் தினமும் ஓனானை பார்க்கமுடிகிறது.சிட்டுகுருவிளை பார்க்க முடிகிறது.மடிவாளா சந்தையில் விளாம் பழம்,பேரிக்காய் கிடைக்கிறது.."போரம்" என்ற மிகப்பெரிய அங்காடி வாசலிலே ஐந்து ரூபாய்க்கு நல்ல வறுத்த சோளம் கிடைகிறது.போன வாரம் கூட என் மகளுக்கு சின்ன வயதில் தென்னங்கீற்று மூலம சுருக்கு போட்டு தவளை பிடிப்பதை சொல்லிகுடுத்தேன்..ஜிகிர்தண்டா கோரமங்களா முருகன் இட்டிலி கடையில் கிடைத்திறது...இன்னும் என் வீட்டு அருகில் குழந்தைகள் கண்ணாம் பூச்சி,கல்லா மண்ணா,திருடன் போலிஸ் விளையாடுகிறார்கள்.(இந்த கணினியுகத்திலும்) அரசு பள்ளி வாசல்களில் இன்னும் மாங்கா பத்தை,நெல்லிக்காய் விற்கிறார்கள்...நீங்கள் வசிக்கும் மேற்கு கே.கே நகரை சில வருடங்களுக்கு முன்பு வரை "ஊரு" என்றுதான் அழைப்பார்கள்.சில வருடங்கள் முன்பு வரை வேம்புலி அம்மன் கோவில்(உங்கள் வீடு அருகில்)மரத்தடி பஞ்சாயத்து நடந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
அன்புடன்
அரவிந்தன்
No comments:
Post a Comment