கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையா..???
இரு வாரங்களுக்குமுன் எங்கள் நிறுவனம் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு என்ற கிராமத்திற்க்கு பெங்களூரில் இருந்து சென்றோம்.கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை வழியாக சென்றபோது வழியெங்கும் நான் பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.கிராமங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் வெறுங்கால்களில் காலனி இல்லாமலே நெடுஞ்சாலைகளில் பள்ளிகக்கு சென்றவண்ணமிருந்தனர்.நாமெல்லாம் வீட்டிற்க்குள்ளே செருப்புபோட்டுகொண்டு நடமாடுகிறோம்....அந்த கப்பி சாலைகளில் நல்ல வெய்யிலில் நடப்பதென்பது சாதாரண காரியமில்லை. முடிந்தால் நாம் சில குக்கிராமங்களில் உள்ள அரசாங்கபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது நல்ல காலணி வாங்கிகொடுக்கலாம்..யாராவது முன்வந்து உதவ தயாரா....
3 comments:
இங்கே நிறய பேர் தயாராய் இருப்பார்கள் (என்னையும் சேர்த்து)-பணரீதியாய் உதவ. ஆனால் தலையில் எடுத்து சில வேலைகளை யாராவது செய்ய வேண்டும். அப்படியிருப்பின் எழுதுங்கள், என்ன செய்யவேண்டும் என்பதை.
நல்ல பதிவு. இதற்கு என்னால், என்ன செய்ய முடியும் என் யோசிக்கிறேன்.
எங்கள் அலுவலகம் இது போன்ற சில பள்ளிகளை தத்தெடுத்துக் கொண்டு உதவுகிறது. அலுவலகம் மூலமாகுவ்ம் முயற்சிக்கலாமே.. கூட்டாக செய்யும் போது அதிகம் பலன் கிடைக்கிறது. இது கண்கூடாக பார்த்தொம்.
ராஜாவின் திருமண வரவேறுபு புகைப்படங்க்ள் மீண்டும் சரி செய்தாகிவிட்டது. என்னுடைய வலை பதிவில் காணலாம். உங்களின் தடுமாற்றத்திற்கு காரணம்.. நான் வெங்கடேஷின் புகைப்படம் மற்றும் இட்டிருந்தது தான்.
அன்புடன்
ஐயப்பன்
Post a Comment