Thursday, August 04, 2005

தமிழியிணையத்தில் சில வருடங்களூக்கு முன்னால் எழுதிய மின்மடல்....இங்கே மறுபிரசுரம்.....

குணச்சித்திர நடிகையான குஷ்புவிற்க்கு(கோவில் புகழ்..?)சென்ற வாரம் குழந்தை பிறந்தது.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் குஷ்புவுக்கு கல்யானம் ஆனது மார்ச் 9(9-3-2000).குழந்தை சென்ற வாரம்(28-9-2000) பிறந்துள்ளது.குழந்தை முழு வளர்ச்சியுடன் சரியான மாதத்தில் பிறந்ததாக குஷ்பு சொல்கிறார்...
இஇந்த கனக்கு எனக்கு புரியல இஇந்த சினிமா பொறுக்கில்லாம் கோவில் கட்டின மடை தமிழினை எதால அடிக்கிற்து..?
அன்புடன்கி.அரவிந்தன்

Sunday, July 31, 2005

வீட்டோட(மாமனார்) மாப்பிள்ளையாக இருக்கலாமா..?

வீட்டோட(மாமனார்) மாப்பிள்ளையாக இருக்கலாமா..?இந்த தலைப்புப்பற்றி பேசுவதே அவமானம் என்று சிலர் நினைக்கிறார்கள்...என்னைபொருத்தவரை பெற்றோரை இழந்தவர்கள்,பெற்றவர்கள் வேறு ஊரில் இன்னொரு மகனோடு இருப்பவர்கள்,மாமனார் வீட்டோடு இருப்பதில் எந்த தவறும் இல்லை..வேலை இல்லாமல் மாமனார் வீட்டில் விருந்து சாப்பாடு சாப்பிடுவதுதான் அவமானமே தவிர சம்பளத்தில் சாப்பாட்டுக்கு என்று கொடுத்துவிட்டு சாப்பிடுவதில் தவறில்லை.சொல்லப்போனால் இலாபம்தான்...இப்பொழுதெல்லாம் முன்புபோல அதிக மகன்களோ அல்லது மகள்களோ இல்லாததல் இது மிகவும் வசதியாக உள்ளது...அதே நேரத்தில் மாமனார் வீட்டில் இருந்தாலும் அவர்கள் மகன் போல அவர்கள் வீட்டு வேலைகளை செய்ய தயங்ககூடாது...அதேப்போல் மாலை வீட்டுக்குவந்தவுடன் நேராக உங்கள் அறைக்கு செல்லக்கூடாது..கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசவேண்டும்....கல்யாணம் மற்ற் நிகழ்ச்சிகளுக்கு மாமனார் மாமியாரை நீங்கள் உங்கள் வாகனத்தில் அழைத்துச்செல்லவேண்டும்...மேற்சொன்னவகளை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மரியாதைக்கும் அளவே இல்லை....எல்லாம் மாமனார் வீட்ல ரெண்டு வருஷம் இருந்த அனுபவம்தான்!!!!...அன்புடன்அரவிந்தன்

Tuesday, July 26, 2005

ஆன்மிகவாதி(வியாதி) ரஜினிப்பற்றி சாரு....விளாசல்

ஆன்மிகவாதி(வியாதி) என்ற பெயரில் சரியான காரியவாதியாக இருக்கும் ரஜினிப்பற்றி எழுத்தாளர் சாரு தனது கோணல் பக்கங்களில் கிழிகிழியென்று கிழித்துயிருக்கிறார்..

www.charuonline.com.

Sunday, May 22, 2005

இளம் பெண்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்..????

வணக்கம்!!!....
தமிழ் யுவதிகளிடையே நல்லத்தமிழில் பேசுவது என்பது மிகவும் குறைவாக உள்ளது..ஊடகங்களிலும் சரி,நேருக்கு நேர் பேசும்போது சரி நல்லத்தமிழில் பேசுவது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது..ஆனால் இளைஞர்களிடையே அந்த அளவு மோசம் இல்லாமல் தமிழில் பேசுகிறார்கள்...பெண்கள் இந்த அளவு ஆங்கிலம் கலந்து தமிழில் பேச காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்.எதேனும் உங்களால் ஊகிக்கமுடிகிறாதா..
அன்புடன்அரவிந்தன்.

தமிழா நீ பேசுவது தமிழா

உங்களில் யாரிடமாவது உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடல் முழுவதுமாக உள்ளதா?.எதேனும் சுட்டி உள்ளதா.
இறந்தபிறகு தமிழ் பண்டாரங்களால் பாடப்படும் தேவரா திருவாசக பாடல்கள் பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்....
அன்புடன்அரவிந்தன்......

Wednesday, May 18, 2005

என் மகள் அமுதசுரபி

என் மகள் அமுதசுரபி இரண்டு வயதாக இருக்கும்போது எடுத்த புகைப்படம்.எல்லோரும் தங்கள் வாரிசுகளை களம் இறக்கிவிட்டதால் நானும்....:)-
அன்புடன்அரவிந்தன்.

Friday, January 21, 2005

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையா..???


இரு வாரங்களுக்குமுன் எங்கள் நிறுவனம் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு என்ற கிராமத்திற்க்கு பெங்களூரில் இருந்து சென்றோம்.கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை வழியாக சென்றபோது வழியெங்கும் நான் பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.கிராமங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் வெறுங்கால்களில் காலனி இல்லாமலே நெடுஞ்சாலைகளில் பள்ளிகக்கு சென்றவண்ணமிருந்தனர்.நாமெல்லாம் வீட்டிற்க்குள்ளே செருப்புபோட்டுகொண்டு நடமாடுகிறோம்....அந்த கப்பி சாலைகளில் நல்ல வெய்யிலில் நடப்பதென்பது சாதாரண காரியமில்லை. முடிந்தால் நாம் சில குக்கிராமங்களில் உள்ள அரசாங்கபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது நல்ல காலணி வாங்கிகொடுக்கலாம்..யாராவது முன்வந்து உதவ தயாரா....

Thursday, January 20, 2005

எட்டரை மணின்னா...???


நான் ஒரு அழைப்பு மையத்தில் பணிபுரிவதால் சில நாட்கள் இரவு பணிக்குச் செல்ல வேண்டியிக்கும்.நேற்று இரவு வேலைக்குச்சென்று காலையில் வீட்ற்க்கு வந்தேன்.நான் வரும்போது என்மகள் பள்ளிச்செல்ல தயாராகிகொண்ட்டிருந்தாள்.அப்பா இன்று உங்களுக்கு ஆபிஸ் லீவா என்று கேட்டாள்? இல்லையம்மா இரவு மீண்டும் செல்ல வேண்டும் என்றேன்.எப்போ என்றாள்?எட்டரை மணிக்கு என்றேன். எட்டரைன்னா எந்த சீரியல் வரும் போது என்றாள்..செவ்வாய எட்டரை மணிக்கு எந்த சீரியல் என்று சிற்றவிற்க்கு எட்டவில்லை. உஷாராக சன் செய்திக்கு பின்னர் என்று சமாளித்தேன்...அப்ப்பாவுக்கு இதுகூட தெரியல எட்டரை மணிக்கு சுப்பர் டெண் பாடல்கள் என்று சொல்லி சிரிக்கிறாள்....

Wednesday, January 19, 2005

எட்டரை மணின்னா...???

நான் ஒரு அழைப்பு மையத்தில் பணிபுரிவதால் சில நாட்கள் இரவு பணிக்குச் செல்ல வேண்டியிக்கும்.நேற்று இரவு வேலைக்குச்சென்று காலையில் வீட்ற்க்கு வந்தேன்.நான் வரும்போது என்மகள் பள்ளிச்செல்ல தயாராகிகொண்ட்டிருந்தாள்.அப்பா இன்று உங்களுக்கு ஆபிஸ் லீவா என்று கேட்டாள்? இல்லையம்மா இரவு மீண்டும் செல்ல வேண்டும் என்றேன்.எப்போ என்றாள்?எட்டரை மணிக்கு என்றேன். எட்டரைன்னா எந்த சீரியல் வரும் போது என்றாள்..செவ்வாய எட்டரை மணிக்கு எந்த சீரியல் என்று சிற்றவிற்க்கு எட்டவில்லை. உஷாராக சன் செய்திக்கு பின்னர் என்று சமாளித்தேன்...அப்ப்பாவுக்கு இதுகூட தெரியல எட்டரை மணிக்கு சுப்பர் டெண் பாடல்கள் என்று சொல்லி சிரிக்கிறாள்....

Tuesday, January 11, 2005

Relief Material Distribution in Cuddalore


107-0747_IMG
Originally uploaded by Aravindan.

கடலூர் அருகே உள்ள சிங்காரதோப்பு என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்