Saturday, February 12, 2011

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் வந்த கட்டுரை.

முழுக்கப் படியுங்கள்...- தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?


இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?


இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?


அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.

சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?

இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?

சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?


நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!

‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா.


அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?

உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.

பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.

‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!

சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?

ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.com
http://www.peyar.in
http://wapedia.mobi/ta
http://thamizppeyarkal.blogspot.com,
http://tamilsaral.com/news%3Fid%3D3857.do
http://www.sillampum.com
http://pagalavan.in/archives/328

எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?

இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.

வணிக நிறுவனங்களுக்குமா?

ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?

ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?

தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?

அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?

அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.

தமிழில் பெயரிடுவோம்.

Saturday, December 04, 2010

அவர் (Hire) சைக்கிள் கடை அனுபவங்கள்!!!



என் மகளின் சைக்கிள் டயருக்கு பஞ்சர் போட வேண்டும் ஒரு வாரமாக என் மனைவி சொல்லிகொண்டேயிருந்தார். இன்று சனிக்கிழமையாயிற்றே..டிவிட்டரிலும்,பதிவுகளிலும் பெருசா படிக்க எதுமில்லாத காரணத்தால் சரி..சற்றே வீட்டு வேலைகளை பார்ப்போம் என்று சைக்கிளை தள்ளிக்கொண்டே கடையை நோக்கிச்சென்றேன்..நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன.....


90-கள் வரை வாடகை சைக்கிள் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை இருந்தது.நம்மில் எல்லோரும் (தற்போது 30 வயதை கடந்தவர்கள்)எதாவது ஒரு சூழ்நிலையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்திருப்போம். தெரியாத ஊரில் அவ்வளவு சுலபத்தில் சைக்கிள் கிடைக்காது.”தெரிஞ்சா ஆள் பேர் சொல்லு..ஸ்கூல் பையை வைத்துவிட்டுப்போ” என்று பல கண்டிஷன் போடுவார்கள்.

இப்ப எல்லாம் ஆட்டோ எடுத்துப்போய்ட்டு வேலையை முடிச்சிட்டு வா என்று சொல்வதுபோல் அப்பவெல்லாம் அவர் சைக்கிள் எடுத்துட்டுப்போய் வேலையை முடிச்சிட்டு வா” என்று சொல்வார்கள்.

மணிக்கணக்கில்(Hourly basis) வாடகைக்கு கொடுக்கப்படுவதால் அவர் சைக்கிள் கடை என்று சொல்கிறார்கள் என்றே நான் பல வருடங்களாக நினைத்திருந்தேன்.பின்னர் தான் தெரிந்தது ஹையர் (Hire) என்பது மருவி அவர் என்றாகிவிட்டது வாடகை சைக்கிள் கடை என்ற நம்மில் பலருக்கு உடனையாக நினைவுக்கு வருவது வைதேகி காத்திருந்தாள் கவுண்ட மணி காமெடிதான்..”இரங்கநாதன் என்ற பெயருக்கெல்லாம் சைக்கிள் தரதில்ல”

சிறுவர்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துவிட்டு செய்யும் அலும்பு சொல்லி மாளாது.வாடகை சைக்கிள் கடைகளில் பெரிய கடிகாரம் மாட்டப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அதில் மணி பார்க்கமாட்டார்கள்.”அண்ணே முள்ளு இரண்டுல வந்தாச்சாண்ணே,ஆறுல வந்தா சொல்லுங்கண்ணே என்று இரவுண்டுக்கொருமுறை கேட்டு சைக்கிள் கடைக்காரரை டார்ச்சர் செய்வார்கள்.

பெரும்பாலும் பெற்றோர்கள் முதலில் காசு கொடுத்துவிட்டு (Prepaid) குழந்தைகளுக்கு வண்டி எடுத்து கொடுத்திருப்பார்கள்.ஆனால் நம்ம மக்களோ எக்ஸ்ட்ரா கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு வண்டியை திருப்பி தருவார்கள்.

வண்டியை திருப்பிதரும்போது,பெல்-ல காணோம் சீட் கவர் மிஸ்ஸிங் என்று கடைக்காரர் சொல்ல அதெல்லாம் தெரியாது எடுக்கும்போதே இப்படித்தான் இருந்தது என்று விவாதம் நடப்பது சர்வசாதாரணம்.

இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் யாரும் வாடகைக்கு சைக்கிள் எடுப்பதாக தெரியவில்லை.மத்திய வர்க்க குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே சொந்தமாக சைக்கிள் கிடைத்து விடுகிறது.


சைக்கிள் கடையை சென்றடைந்தேன்.இப்பொழுதும் சிறியவர்கள் அங்கே வாடகைக்கு சைக்கிள் எடுத்து செல்கிறார்கள்.. பெரியவர்களுக்கான ஒரு சைக்கிளும் அங்கே வாடகைக்கு இல்லை.முற்றிலும் குழந்தைகள் சந்தையை நம்பியே வாடகை சைக்கிள் கடைகள் இயங்குகின்றன்.

சைக்கிள் கடை அமைப்பில் பெரிய மாறுதல் இருப்பதாக தெரியவில்லை.பஞ்சர் கண்டுபிடிக்க-அதே அகல் பேசினில் தண்ணிர் ப்ஞ்சர் ஒட்டும் முறையிலும் பெரிய மாற்றமில்லை.எழு எட்டு ஓட்டை சைக்கிள்,பழைய புதிய டயர்கள்,ஸ்பனர் செட் என்று அதே அடையாளங்கள் தொடர்கின்றன.

ஆனால் வாடகை சைக்கிள் கடைகளுக்கென்றே ஒரு சந்தை தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

சைக்கிள் வாடகை தவிர மற்ற வழிகளில் தொடர்ந்து வருமானம் வருவதாக கடைக்காரர் சொல்கிறார்.(காற்றப்படிப்பது,பஞ்சர் போடுவது ,ரிப்பேர் செய்வது போன்ற வகையில்).

தற்போதைய கட்டணங்கள்
பஞ்சர் ஒட்ட -ரூ7
காற்றடிக்க -ரூ 2
வாடகை கட்டண்ம்(சிறுவர் சைக்கிள்)-ரூ 5

Wednesday, December 01, 2010

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலத்தை அடையாளமின்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச...
பிரித்தானியா வருகை தந்துள்ளதும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப்படவேண்டிய விடயமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.



மின்னஞ்சல் அனுப்ப முடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மஹிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதி அனுப்புங்கள். Proctors.office@admin.oxac.uk

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/


ROCEDURE

1.Go to http://www.fco.gov.uk/en/feedback

2.Enter name ,email id, select subject as OTHER
3.Then write your letter

SAMPLE LETTER

Please arrest Mr.Mahinda Rajapakse.The Sri Lankan president and the sri lankan state did the genocide of Eelam Tamils.He with his state forces did aerial bombing and used artilleries on 10s of 1000s of Tamil civilians who were in the region called NO-...FIRE ZONE declared by the Sri lankan Sinhala dominant state.Sri Lankan army is exclusively Sinhalese.They did executions 1000sof Tamil civilians,raped 100s of Tamil woman.Sri Lankan state forces used phosphorous bombs on hospitals in Tamil areas.Sei Lanka's defense secretary Mr.Gotabaya Rajapaksa ,the president's brother said that anything beyonf the no fire zone was a legitimate target. Sri Lankan state has no tolerance for Press.The president's friend Lasantha Wikramathunga,the editor of English Newspaper was journalist from Sinhala ethnicity was killed by the government sponsored murders since he wrote an article criticizing the president and the state's war on Tamil people in the guise of eliminating the LTTE.Thissaiyanayam was a scribe in English print media and he was from Tamil ethnicity.He was imprisoned and sentenced to 20 years of imprisonment for criticizing the president and the state's war on Tamils.He won 2 international awards for his journalism.he was later released due to international pressure.

Sri Lankan state has no respect for democracy,equality,human rights,press freedom etc.Mr.Mahinda Rajapaksa who is the supreme authority on the state's armed forces is a racist,dictator ,tyrant , mass murder and war criminal

Thursday, October 28, 2010

கொடுங்கோலன் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஆதாரங்கள் கேட்கிறது-ஐ.நா








கொடுங்கோலன் இராஜபக்சேவின் இலங்கை இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து சொல்ல மூன்று நபர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் நியமித்துள்ளார்

இந்த குழு இறுதிப்போரின் சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து செயலருக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இந்த குழுவிடன் மின்னஞ்சல் வழியாக கொடுக்கலாம்.

தனிநபரோ அல்லது அமைப்போ தங்கள் தரப்பு ஆதாரங்களை (பத்து பக்கங்களுக்கு மிகாமல்) ஐ.நாவின் குழுவிடம் மின்னஞ்சல் வழியே வழங்கலாம்.தகவல் கொடுப்பவரின் தொடர்பு விவரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்படவேண்டும்.அனைத்து தகவல்களும்,தனிநபர் விவரங்களும் இரகசியாமாக காக்கப்படும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

விவரங்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் panelofexpertsregistry@un.org

மேலதிக விவரங்களுக்கு panelofexpertsregistry@un.org என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தில் ஆதாரங்களை தாராளமாக அனுப்பி வையுங்கள்.

Wednesday, August 25, 2010

இவர்களும் இந்த தலைமுறை குழந்தைகளே

திங்களன்று பிற்பகல் என் மாமனாரை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது வண்டி திடீரென பெட்ரோல் தீர்ந்ததால் நின்றுவிட்டது(அதற்கு முந்தைய நாள் பராமரிப்புக்காக கொடுத்து இருந்தேன்.அவர்கள் கட்டணத்துடன் பெட்ரோலையும் எடுத்துக்கொண்டனர்).

பெட்ரோல் நிலையம் 1 கிமீ தூரத்தில் உள்ளது.என்னடா உடல்நிலை சரியில்லாத மாமனாரை நடக்க வைத்துவிட்டோமே என்ற வருத்ததுடன் வண்டியை தள்ளிகொண்டே வந்தேன்.ஒரு சிறுவன் 10 அல்லது 11 வயது இருக்கும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தவன் அருகில் வந்து “என்ன அங்கிள் பெட்ரோல் இல்லையா” என்றான் கன்னடத்தில். ஆமாப்பா என்றேன்

மேலும் சில கேள்விகளை கன்னடத்தில் கேட்டான் நம்ம கன்னடம் மிகவும் மந்தம் என்பதால் அமைதியாக வண்டி தள்ளிக்கொண்டே வந்தேன்.

தீடிரென அந்த சிறுவன் ”அங்கிள் டு யு நோ இங்கிலிஷ்” என்றான்.தெரியுமென்றேன்.

உடனே அவன் “I can help you for buying petrol" you take my cycle and buy the petrol,I will be here and keep an eye on your scooter”.

அந்த சாலை ஆள் அரவமற்ற சாலை பகலிலே திருட்டு நடக்கும் இடம் ஆகவே சற்று தயங்கினேன்.அந்த சிறுவனும் சலிக்காமல் “If its so,I will go and buy the petrol for you என்றான் சரி என்று ஒரு நம்பிக்கையுடன் ரூ 30 கொடுத்து பாட்டிலும்கொடுத்தேன்.

அடுத்த நிமிடம் வண்டியில் சிட்டாக பறந்தான் அந்த சிறுவன். வருவானா மாட்டானா என்று சாலையை வெறித்து பார்த்துகொண்டே இருந்தேன்.பத்தாவது நிமிடத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தான். இந்த சிறுவனையா சந்தேகத்துடன் பார்த்தோம் என்று வெட்கப்பட்டேன். சாக்லேட் வாங்கிகொள்ளப்பா என்று ரூ5 கொடுத்தேன்.தாங்கஸ் அங்கிள் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.

அந்த சிறுவனது பெயரை கூட கேட்க மறந்துவிட்டேன் :(

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு ஒரு புகைப்பட பார்வை.

பதிவர் அரவிந்தன் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிடும் காட்சி



அரங்கில் நம் தளபதி தல பாலா பாரதி!!!



வி.ஜ.பிக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏராள தராளமான இடம்



இங்கேயுமா..? ஒரு வேளை பக்தி இலக்கியம் விக்குராங்களோ..?!




துணை முதல்வர் ஸ்டாலின் ஆர்வமுடன் நமது வலைப்பூக்கள் பயில்ரங்கை பார்வையிடுகிறார்



இளைஞர் ஒருவருக்கு பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று பதிவர் அரவிந்தன் பால பாடம் நடத்துகிறார்.

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!-2

C-DAC எனும் மத்திய அரசு அரங்கில் மென்பொருள் சிடி இலவசமாய் வழுங்குகின்றனர்.சிடி கொடுங்க என்றால் பெயர்,ஊர்,தொலைப்பேசி எண் கேட்கிறார்கள்.excuse me May I have a Tamil CD please என்றவுடன் கேள்வி கேட்காமல் சிடி கொடுத்தனர் எ.கொ.ச!

கரை வேட்டி கட்டி கொண்டுருந்தால் பல அரங்குகளுக்கு உடனடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது.

வந்திருந்த பொதுமக்களில் ஒருவர் “உங்களை நீயா நானாவில் பார்த்திருக்கேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கூகிளில் தமிழில் தேடும் வசதி இருப்பது பலருக்கு தெரியவில்லை.விளக்கிச்சொன்னபின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்பாடல் வரிகள் இணையத்தில் தேடுவது குறித்து ஆவலாய் கேட்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டின் மைய அரங்கில் ஏராளமான காக்கைகள், அந்த பக்கம் செல்லவே பயமாய் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இத்தனை காவலர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மக்கள் கூட்டத்தினை நிச்சயம் சமாளித்திருக்க முடியாது.

வலைப்பூக்கள் பயிலரங்கிற்கு வந்த மொத்த பதிவர்கள் எண்ணிக்கை ------- 2 (லக்கி மற்றும் பாலபாரதி)# சும்மா ஒரு தகவலுக்காக

உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம்