Thursday, October 28, 2010

கொடுங்கோலன் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஆதாரங்கள் கேட்கிறது-ஐ.நா








கொடுங்கோலன் இராஜபக்சேவின் இலங்கை இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து சொல்ல மூன்று நபர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் நியமித்துள்ளார்

இந்த குழு இறுதிப்போரின் சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து செயலருக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இந்த குழுவிடன் மின்னஞ்சல் வழியாக கொடுக்கலாம்.

தனிநபரோ அல்லது அமைப்போ தங்கள் தரப்பு ஆதாரங்களை (பத்து பக்கங்களுக்கு மிகாமல்) ஐ.நாவின் குழுவிடம் மின்னஞ்சல் வழியே வழங்கலாம்.தகவல் கொடுப்பவரின் தொடர்பு விவரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்படவேண்டும்.அனைத்து தகவல்களும்,தனிநபர் விவரங்களும் இரகசியாமாக காக்கப்படும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

விவரங்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் panelofexpertsregistry@un.org

மேலதிக விவரங்களுக்கு panelofexpertsregistry@un.org என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தில் ஆதாரங்களை தாராளமாக அனுப்பி வையுங்கள்.

Wednesday, August 25, 2010

இவர்களும் இந்த தலைமுறை குழந்தைகளே

திங்களன்று பிற்பகல் என் மாமனாரை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது வண்டி திடீரென பெட்ரோல் தீர்ந்ததால் நின்றுவிட்டது(அதற்கு முந்தைய நாள் பராமரிப்புக்காக கொடுத்து இருந்தேன்.அவர்கள் கட்டணத்துடன் பெட்ரோலையும் எடுத்துக்கொண்டனர்).

பெட்ரோல் நிலையம் 1 கிமீ தூரத்தில் உள்ளது.என்னடா உடல்நிலை சரியில்லாத மாமனாரை நடக்க வைத்துவிட்டோமே என்ற வருத்ததுடன் வண்டியை தள்ளிகொண்டே வந்தேன்.ஒரு சிறுவன் 10 அல்லது 11 வயது இருக்கும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தவன் அருகில் வந்து “என்ன அங்கிள் பெட்ரோல் இல்லையா” என்றான் கன்னடத்தில். ஆமாப்பா என்றேன்

மேலும் சில கேள்விகளை கன்னடத்தில் கேட்டான் நம்ம கன்னடம் மிகவும் மந்தம் என்பதால் அமைதியாக வண்டி தள்ளிக்கொண்டே வந்தேன்.

தீடிரென அந்த சிறுவன் ”அங்கிள் டு யு நோ இங்கிலிஷ்” என்றான்.தெரியுமென்றேன்.

உடனே அவன் “I can help you for buying petrol" you take my cycle and buy the petrol,I will be here and keep an eye on your scooter”.

அந்த சாலை ஆள் அரவமற்ற சாலை பகலிலே திருட்டு நடக்கும் இடம் ஆகவே சற்று தயங்கினேன்.அந்த சிறுவனும் சலிக்காமல் “If its so,I will go and buy the petrol for you என்றான் சரி என்று ஒரு நம்பிக்கையுடன் ரூ 30 கொடுத்து பாட்டிலும்கொடுத்தேன்.

அடுத்த நிமிடம் வண்டியில் சிட்டாக பறந்தான் அந்த சிறுவன். வருவானா மாட்டானா என்று சாலையை வெறித்து பார்த்துகொண்டே இருந்தேன்.பத்தாவது நிமிடத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தான். இந்த சிறுவனையா சந்தேகத்துடன் பார்த்தோம் என்று வெட்கப்பட்டேன். சாக்லேட் வாங்கிகொள்ளப்பா என்று ரூ5 கொடுத்தேன்.தாங்கஸ் அங்கிள் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.

அந்த சிறுவனது பெயரை கூட கேட்க மறந்துவிட்டேன் :(

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு ஒரு புகைப்பட பார்வை.

பதிவர் அரவிந்தன் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிடும் காட்சி



அரங்கில் நம் தளபதி தல பாலா பாரதி!!!



வி.ஜ.பிக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏராள தராளமான இடம்



இங்கேயுமா..? ஒரு வேளை பக்தி இலக்கியம் விக்குராங்களோ..?!




துணை முதல்வர் ஸ்டாலின் ஆர்வமுடன் நமது வலைப்பூக்கள் பயில்ரங்கை பார்வையிடுகிறார்



இளைஞர் ஒருவருக்கு பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று பதிவர் அரவிந்தன் பால பாடம் நடத்துகிறார்.

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!-2

C-DAC எனும் மத்திய அரசு அரங்கில் மென்பொருள் சிடி இலவசமாய் வழுங்குகின்றனர்.சிடி கொடுங்க என்றால் பெயர்,ஊர்,தொலைப்பேசி எண் கேட்கிறார்கள்.excuse me May I have a Tamil CD please என்றவுடன் கேள்வி கேட்காமல் சிடி கொடுத்தனர் எ.கொ.ச!

கரை வேட்டி கட்டி கொண்டுருந்தால் பல அரங்குகளுக்கு உடனடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது.

வந்திருந்த பொதுமக்களில் ஒருவர் “உங்களை நீயா நானாவில் பார்த்திருக்கேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கூகிளில் தமிழில் தேடும் வசதி இருப்பது பலருக்கு தெரியவில்லை.விளக்கிச்சொன்னபின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்பாடல் வரிகள் இணையத்தில் தேடுவது குறித்து ஆவலாய் கேட்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டின் மைய அரங்கில் ஏராளமான காக்கைகள், அந்த பக்கம் செல்லவே பயமாய் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இத்தனை காவலர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மக்கள் கூட்டத்தினை நிச்சயம் சமாளித்திருக்க முடியாது.

வலைப்பூக்கள் பயிலரங்கிற்கு வந்த மொத்த பதிவர்கள் எண்ணிக்கை ------- 2 (லக்கி மற்றும் பாலபாரதி)# சும்மா ஒரு தகவலுக்காக

உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம்

செம்மொழி மாநாடு தமிழியியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து அரவிந்தன்

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!

வலைப்பக்கத்தில் என்னவெல்லாம் எழுதலாம் என்று ஒரு பெண்மணி கேட்டார்”நீங்க கடைக்கு சென்று காய்கறி வாங்குவதை பற்றியும் எழுதலாம் என்றேன்".

"என்னங்க கிண்டல் செய்யறிங்களா" என்றார்.உடனே துளசி டீச்சர் எழுதிய காய்கறி வாங்கிய அனுபவ பதிவினை காட்டினேன் ஆச்சர்யமடைந்தார்.




வலைப்பதிவுக்கு நல்ல பெயர் தேர்வு செய்ய நம்மையே பலர் ஆலோசனை கேட்டனர்.காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து...













செம்மொழி மாநாடு தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து....ஒரு நேரடி பார்வை..

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சியில் தமிழ் விக்கிபிடியா அரங்கிலிருந்து..

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

வலைப்பதிவு தொடங்குவது குறித்து மக்கள் ஆர்வமாக கேள்வி கேட்கின்றார்கள்

இன்னமும் தமிழ் கீ போர்ட் தனியா கிடைக்குமா என்று கேட்கிறார்கள்

கண்காட்சியில் அனைவரும் கேட்பது எங்கே இலவச சி.டி?

அமைச்சர் வந்ததும் உடன் அல்லக்கைகள் எங்கிருந்தோ ஒடி வந்து ஒட்டிக்கொள்கின்றன.

மாநாட்டில் திமுக கொடிகள் இல்லாவிட்டாலும் ஏராளமான கரை வேட்டிகளை காண முடிகிறது
தமிழ் தட்டச்சு தெரிந்தால் அரசாங்க வேலையில் முன்னுரிமை கிடைக்குமா? -பொது மக்களில் ஒருவர் கேட்ட கேள்வி

இலவச மென்பொருள் கேட்டு வருவோரை கிழக்கின் அரங்கிற்க்கு அனுப்பி வருகிறேன்

தமிழில் சோதிட மென்பொருள் குறித்து மக்கள் ஆர்வமாய் விசாரிக்கிறார்கள்

இரவு 8 மணிக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.

.

Thursday, June 10, 2010

என்னுடைய டீவிட்களின் தொகுப்பு!!!

வெவ்வேறு நாட்களில், பல்வேறான மனநிலையில் என்னுடைய டீவிட்களை பதிவாக இங்கு இடுகிறேன்.

என்னோடCEO-க்கு மடல்அனுப்பும்போது போது “ஹாய்...” ஆனால் மகளின் வகுப்பு ஆசிரியருக்கு“Respected Madam" என்று விடுப்பு கடிதம்எழுதவேண்டியுள்ளது

20000 மக்களின் மரணத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் முன்னாள் தலைவர் ஹவாய் தீவில் ஹாய்யாக வாழ்கிறான்.பிடிக்க துப்பில்ல

பெங்களுரில் பெரிய அங்காடி வளாகங்களில் சைக்கிள் நிறுத்த அனுமதியில்லை.

எத்துனை ஓட்டுக்கள் வேண்டுமானலும் ஒரே அலைப்பேசியிலிருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு போடலாமாம்.கள்ள ஓட்டினை காசுக்காக அனுமத்திக்கும் ஊடகங்கள் :(

அலுவலகத் தோழர் “ஃபோரம் மால் சென்று டைம் பாஸ் செய்யலாம் என்று அழைத்தார்.வார நாட்களில் அலுவலகம் தவிர வேறங்கும் டைம் பாஸ் செய்வதில்லை என்றேன்.

கேரள நிருபர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி பிரமருக்கு புரியவில்லை.பின்னர் அதே கேள்வியை ஆங்கிலத்தில் வேறொருவர் சொல்ல பிரமருக்கு புரிந்தது .

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு முள்வேலிக்குள் வாழ்க்கை..காந்திய வழியில்போராட வேண்டும் என்ற மகாத்மாக்கள் இப்ப என்ன சொல்வார்கள்.?

மின்சாரமில்லை வீட்டில்.மொட்டை மாடியில் லாப்ட்டாப்பிலிருந்து டீவிட்..வாழ்க்கை சுகமாக இருக்கிறது.

கனிமொழி குஷ்புவுக்கு திமுகவின் கொள்கைகளை எடுத்துரைத்தபின் திமுகவில் சேர குஷ்பு முடிவெடுத்தார்

நளினி நான்கு வருடமாக செல் பேசி பயன்படுத்தினாராம். ஒரு வேளை பிரியங்கா பிரியமா கொடுத்திருப்பாரோ

முகம் தெரியாத வாடிக்கையாளரை நலமா என்று விசாரிக்கிறார்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவனை பார்த்து வணக்கம் சொல்ல யோசிக்கிறார்கள்

வானம் இருண்டு வருகிறது..குளிர் காற்று வீசுகிறது..எங்காவது மயில் தோகை விரித்து ஆடலாம்

ஜோ வென் மழை பெய்கிறது...ஜன்னல் வழியே இரசித்து பாக்கிறேன்.கையில் காபி கோப்பை பக்கத்தில் மனைவி குழந்தை தோழியின் வீட்டில்