2012 ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய போகும் இந்த
தருணத்தில் 2012-ன் சில முக்கிய
தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.
2012 ஆரம்பம் மகிழ்ச்சியாக ஆரம்பித்தது. 2012-ல் புதிய மேலாளரின் கீழ்
பணி செய்ய வேண்டி வந்தது. எப்படியிருப்பாரோ என்று பல சிந்தனைகளுடன் இர்ந்த நான்
அவரை சந்தித்தபின் இப்படிப்பட்டவருடன் வேலை செய்தால் பல புதிய உச்சங்களை தொடலாம்
என்று உணர்ந்தேன்.
பொதுவாக எனக்கு யாரவது தூரோகம் செய்தால்
அப்படியே மறந்துவிட்டு விடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியிருக்க முடியவில்லை.சிலருக்கு
தக்க தருணத்தில் பாடம் புகட்ட வேண்டியதாயிற்று,
பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம்தான்
விமானம் பயணம் சாத்தியமாயிற்று..அலுவலக வேலையாக கோவா சென்று வந்தேன்.
2013 -ல் வெளிநாடு பயணம் நிச்சயம்.
கூடுமான வரையில் சிரத்தையுடன்
அலுவலக்த்தில் வேலை செய்தேன்.
2012-ன் மனநிறைந்த செயல் என்றால் என் மனைவியின் உறவு பெண்ணுக்கு
திருமணம் செய்துவைத்ததுதான்.பெற்றோர் இல்லாத அப்பெண்ணுக்கு அண்ணன் நிலையிலிருந்து
நல்ல பொருத்தமான மாப்பிள்ளை,அனைத்து திருமண
வேலைகளுக்கு பொறுப்பேற்றுகொண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைத்தேன்.இந்த
நேரத்தில் அனைத்து திருமண வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும்
மகளுக்கும் நன்றி சொல்ல க்டமைப்பட்டிருக்கிறேன்.
தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்கும்போது
என்னை பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் என் அக்காமார் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி
சொல்ல ஆசைப்படுகிறேன்.
2012 ஒரளவுக்கு சேமிக்க முடிந்ததில் என்னைவிட என் மனைவிக்கு மிக்க
மகிழ்ச்சி.
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட்து,வருட இறுதியில் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்ட்து போன்ற நிகழ்வுகள்
மன நிறைவை கொடுத்த்து.
புதியதாக பெரிய
பொருட்கள் எதையும் வாங்க வில்லையென்றாலும் வலுவான பொருளாதார அடித்தளத்துடன் 2013
எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,
நண்பர்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!