திங்களன்று பிற்பகல் என் மாமனாரை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது வண்டி திடீரென பெட்ரோல் தீர்ந்ததால் நின்றுவிட்டது(அதற்கு முந்தைய நாள் பராமரிப்புக்காக கொடுத்து இருந்தேன்.அவர்கள் கட்டணத்துடன் பெட்ரோலையும் எடுத்துக்கொண்டனர்).
பெட்ரோல் நிலையம் 1 கிமீ தூரத்தில் உள்ளது.என்னடா உடல்நிலை சரியில்லாத மாமனாரை நடக்க வைத்துவிட்டோமே என்ற வருத்ததுடன் வண்டியை தள்ளிகொண்டே வந்தேன்.ஒரு சிறுவன் 10 அல்லது 11 வயது இருக்கும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தவன் அருகில் வந்து “என்ன அங்கிள் பெட்ரோல் இல்லையா” என்றான் கன்னடத்தில். ஆமாப்பா என்றேன்
மேலும் சில கேள்விகளை கன்னடத்தில் கேட்டான் நம்ம கன்னடம் மிகவும் மந்தம் என்பதால் அமைதியாக வண்டி தள்ளிக்கொண்டே வந்தேன்.
தீடிரென அந்த சிறுவன் ”அங்கிள் டு யு நோ இங்கிலிஷ்” என்றான்.தெரியுமென்றேன்.
உடனே அவன் “I can help you for buying petrol" you take my cycle and buy the petrol,I will be here and keep an eye on your scooter”.
அந்த சாலை ஆள் அரவமற்ற சாலை பகலிலே திருட்டு நடக்கும் இடம் ஆகவே சற்று தயங்கினேன்.அந்த சிறுவனும் சலிக்காமல் “If its so,I will go and buy the petrol for you என்றான் சரி என்று ஒரு நம்பிக்கையுடன் ரூ 30 கொடுத்து பாட்டிலும்கொடுத்தேன்.
அடுத்த நிமிடம் வண்டியில் சிட்டாக பறந்தான் அந்த சிறுவன். வருவானா மாட்டானா என்று சாலையை வெறித்து பார்த்துகொண்டே இருந்தேன்.பத்தாவது நிமிடத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தான். இந்த சிறுவனையா சந்தேகத்துடன் பார்த்தோம் என்று வெட்கப்பட்டேன். சாக்லேட் வாங்கிகொள்ளப்பா என்று ரூ5 கொடுத்தேன்.தாங்கஸ் அங்கிள் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.
அந்த சிறுவனது பெயரை கூட கேட்க மறந்துவிட்டேன் :(