"தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்"கருத்தரங்கம்
தமிழின் பெயரால் இணைந்து பணியாற்றும் அன்பு உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் வணக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கின் - பெங்களுர் தகவல் தொழில் நுட்பப் பிரிவினரும், "SAVE TAMILS" சென்னை நண்பர்களும் இணைந்து " தெற்காசியாவின் மனித உரிமை மீறல்கள்" என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை வருகிற அக்டோபர் மாதம் - 25ஆம் நாளில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். முள் வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற நம் இனத்தின் வலியை செய்தியாளர்களுக்கு முடிந்த வரையில் கொண்டு சேர்க்கவும், தொடர்ந்து தொய்வின்றி நமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலாய் நமது இளைஞர்கள் செயல்பட ஒரு உந்து விசையாகவும் இந்தக் கருத்தரங்கினை கொண்டு செல்வதற்கு உங்களிடம் இருந்து முழுமையான ஆதரவையும், ஆலோசனைகளையும் (நேர்மறையான) வேண்டுகிறோம். உலகெங்கும் ஊடகவியலாளர்களின் குறியீடாக இருக்கிற மனித உரிமை மீறல் காணொளிக் காட்சிகள் பெரும் தாக்கத்தை விளைவித்திருக்கும் இந்தத் தருணத்தை நாமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று நம்புகிறோம்.
தலைப்புகள் மற்றும் பேச்சாளர்கள்
1) இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
அ) பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் இராணுவமயமாக்கல் .R.K.Mattu (Chief journalist - Indian express)
ஆ) இடப்பெயர்வு முகாம்களின் அவல நிலை .Father.Prakash louise (South asia Director - JFG REFUGEE SERIVCE) .
2) தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் - Mr.Muruganandham (Seceretry - Tamil nadu fisherman associatioந்) .
3) இந்திய வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களும்
அ)வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் . Mr.Venhu (General Seceratry - Naga people movoment)
ஆ)குடிமை மீறல் சிறப்பு சட்டங்கள்.Mr.Vijay kumar (National Law school)
இ) காஷ்மீரின் வரலாறும், மனித உரிமை மீறல்களும்.Mr.Deena (Other media)
4) தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் .Mr.Sethu(friends of Tibet)
5) புவி சார் அரசியலும் , பொருளாதார நலன்களும் .Mr.arivazhagan(Freelance journalist)
6) மனித உரிமை அமைப்பின் செயல்பாடுகள். Mr.paul Newman(Lecturer - bangalore university)
இடம்.யுனைட்டட் தியாலஜிக்கல் கல்லூரி , 63, மில்லர் சாலை, பென்சன் நகரம், பெங்களூரு 46. கண்டோன்மென்ட் தொடர்வண்டி நிலையத்தின் பின்புறம் உள்ளது.
நாள்.25/10/2009 நேரம். மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணிவரை
தொடர்புகளுக்கு,
+91 9886002570. நற்றமிழன்.
+919980799572. தமிழன்பன்.